எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

களத்தில் இறங்காத கமிட்டி: கண்டுகொள்ளப்படாத பரிந்துரை! காட்டு யானைகள் பலி தொடர காரணமே வனத்துறைதான்!

Added : நவ 28, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
தமிழகத்தில் கடந்த 2010 லிருந்து 2019 வரையிலான பத்தாண்டுகளில், 1013 காட்டுயானைகள் உயிரிழந்ததாக வனத்துறை புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.கடந்த இரண்டு ஆண்டுகளில் 160க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்துள்ளன. நோய் தாக்கி 900க்கும் அதிகமாக யானைகள் இறந்துள்ளன. நேற்று முன் தினம் இரவு கோவை வனக்கோட்டத்தில் ரயில் மோதி மூன்று யானைகள் உயிரிழந்தது கோவை - பாலக்காடு வழித்தடத்தில் தான். இந்த
களத்தில் இறங்காத கமிட்டி: கண்டுகொள்ளப்படாத பரிந்துரை! காட்டு யானைகள் பலி தொடர காரணமே வனத்துறைதான்!

தமிழகத்தில் கடந்த 2010 லிருந்து 2019 வரையிலான பத்தாண்டுகளில், 1013 காட்டுயானைகள் உயிரிழந்ததாக வனத்துறை புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த இரண்டு ஆண்டுகளில் 160க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்துள்ளன. நோய் தாக்கி 900க்கும் அதிகமாக யானைகள் இறந்துள்ளன. நேற்று முன் தினம் இரவு கோவை வனக்கோட்டத்தில் ரயில் மோதி மூன்று யானைகள் உயிரிழந்தது கோவை - பாலக்காடு வழித்தடத்தில் தான். இந்த வழித்தடத்தில் தான் கடந்த 1978 லிருந்து 2021 வரையிலும் 28 யானைகள் பலியாகியுள்ளன. குறிப்பாக, 2018க்குப் பின், 10 யானைகள் விபத்துக்களில் பலியாகியுள்ளது. கடந்த 2008 ல் ரயில் மோதி மூன்று யானைகள் உயிரிழந்தன. நாட்டிலேயே அதிகளவு காட்டு யானைகள் பலியானது இந்த வழித்தடத்தில்தான் என தெரியவந்துள்ளது.


கடவுப்பாதை வேண்டும்!இந்த இடம் உட்பட காட்டு யானைகள், ரயில் பாதைகளைக் கடந்து செல்லும் பகுதிகளில், வனத்துறை எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து, இந்திய வன உயிரின அறக்கட்டளை (W.T.I.) சில ஆலோசனைகளை வழங்கியது. ரயில் தண்டவாளத்துக்குக் கீழே கடவுப்பாதைகளை உருவாக்க வேண்டும் எனக்கூறியுள்ளது. வனப்பகுதிக்குள் பள்ளம், மேடான பகுதிகளில் இரு புறமும் மண்ணைக் குடைந்து ரயில் பாதைகள் அமைக்கும் போது, யானைகள் நடந்து செல்லவும், ரயில்கள் வந்தாலும் யானை ஒதுங்கி நிற்பதற்கு இரு புறமும் ஆறு மீட்டர் இடம் அமைக்க வேண்டும். என, ஆலோனை வழங்கப்பட்டுள்ளது.


கண்துடைப்பு கமிட்டி!


தமிழகத்தில் காட்டுயானைகள் உயிரிழப்பு தொடர்பாக ஆய்வு செய்ய, கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் இறுதிக்காலத்தில், தமிழக வனத்துறையின் கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (வனஉயிரினம்) சேகர்குமார் நீரஜ் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. வனத்துறை அதிகாரிகள், யானை ஆராய்ச்சியாளர்கள் உட்பட 11 பேர் இடம் பெற்றிருந்தனர்.2020 டிச.,31க்குள் தமிழக தலைமை வனஉயிரினப் பாதுகாவலரிடம் அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு இக்குழுவுக்கு அரசு உத்தரவிட்டிருந்தது. கடந்த 2006 லிருந்து 2020 வரையிலான 15 ஆண்டு காலத் தரவுகளை வைத்து இக்குழு ஆய்வு செய்வதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அந்தக் குழு, களத்தில் ஆய்வு மேற்கொள்ளவே இல்லை.

குழு தலைவராக இருந்த சேகர்குமார் நீரஜ்தான், இப்போது வனத்துறைக்கே தலைவராக உள்ளார்.குழுவில் இடம் பெற்றிருந்த யானை ஆராய்ச்சியாளர் அஜய் தேசாய் கடந்த ஆண்டு இறந்தார். அதற்குப் பின் அந்தக் குழு என்னவானது என்றே தெரியவில்லை. எனவே, குழுவை மாற்றியமைத்து, வனத்துறை அதிகாரிகளை நியமிப்பதை விட, நிஜமான களப்பணியாளர்கள், தமிழக வனத்தின் தன்மைகளைத் தெரிந்தவர்களை நியமிக்க வேண்டியது அரசின் கடமையாகும்.

-நமது சிறப்பு நிருபர்-

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vittalanand -  ( Posted via: Dinamalar Android App )
28-நவ-202120:38:54 IST Report Abuse
Vittalanand போட்டோவில் யாசனைகளின் வழித்தடம் இருப்புப்ஸ்த்தாயின் கீழே தெபிக்கிரஸ்யத்து. எனவே ரயில்வே மீது தவறில்லை என்று தெரிகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X