புதுடில்லி: இயற்கையை பாதுகாப்பதில் தூத்துக்குடி மக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர் எனவும், சிறய தீவுகள், திட்டுகளில் கடலில் மூழ்காமல் இருக்க பனைமரங்களை நடுகிறார்கள் என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறு அன்று, பிரதமர் நரேந்திர மோடி ரேடியோ மூலம் 'மன் கி பாத்' நிகழ்ச்சி வாயிலாக பொது மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.
அந்த வகையில், 83வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: இந்த மாதம் கடற்படை தினம் மற்றும் ஆயுதப்படைகளின் கொடி தினத்தை நாம் கொண்டாடுகிறோம். 1971ம் போரின் பொன்விழா ஆண்டை வரும் டிச.,16ல், கொண்டாடுகிறோம். இந்த தருணத்தில் தைரியமிக்க நமது வீரர்களை நினைத்து பார்ப்பதுடன், அவர்களை வணங்குகிறேன்.
சுதந்திர பொன் விழா ஆண்டில் நாட்டிற்காக ஏதாவது செய்ய வேண்டும் என தூண்டுகிறது. நாடு முழுவதும், கொண்டாட்டங்கள் தெளிவாக தெரிகிறது. சுதந்திரத்தின், பழங்குடியினரின் பங்கை கருத்தில் கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது நாடு முழுவதும் நடக்கிறது.
இயற்கையை நாம் காத்தால், அது நம்மை பாதுகாக்கும். பல்வேறு கடலோர பகுதிகள், நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது என்பதை நாம் அறிவோம். அதுபோன்ற அபாயம் தூத்துக்குடியில் பல சிறிய தீவுகள் மற்றும் திட்டுகளும் அதுபோன்ற அபாயம் உள்ளது.
இயற்கையின் சமநிலையை சீர்குலைக்கும் போது அல்லது அதன் புனிதத்தை அழிக்கும் போது தான், இயற்கை நமக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. இயற்கை நம்மை ஒரு தாயை போல் வளர்த்து, நம் உலகத்தை பிரகாசமான வண்ணங்களால் நிரப்புகிறது.

உ.பி., மாநிலம் ஜலானில் நூன் என்ற நதி இருந்தது. அழிவின் விழிம்பில் இருந்த இந்த நதியால், விவசாயிகள் பல்வேறு பிரச்னைகளை சந்தித்தனர். இதனால், அப்பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து நதியை மீட்டெடுத்தனர். இது அனைவருக்குமான வளர்ச்சி, ஒவ்வொருவரின் வளர்ச்சி என்பதற்கு மிகச்சிறந்த உதாரணமாக உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
கிராம நில ஆவணங்களை கணினிமயம்
பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: கணினி உதவியுடன் இந்திய கிராமங்களில் மின்னணு தொழில் நுட்பத்தின்மூலம் நில ஆவணங்களை இந்தியா பராமரித்து வருகிறது. வேறெந்த நாடும் இதுவரை இதனைச் செய்தது இல்லை .
இந்துக்களின் புனித நகரமான காசியில் துளசிதாசர், கபீர்தாசர், ரவிதாஸ் ஹரிச்சந்திரா, முன்ஷி பிரேம்சந்த், ஜெய்சங்கர் பிரசாத் ஆகியோரை கௌரவிக்கும் வகையில் மூன்று நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்தியாவில் புதிதாக தொழில் துறையில் சாதிக்க முயலும் தொழில் முனைவோருக்கு ஆதரவளிக்கும் வகையில் தற்போது 70 புதிய நிறுவனங்களுக்கு இந்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இவற்றின் ஆண்டு வருமானம் ரூ 100 கோடியை கடந்து உள்ளது. சர்வதேச அளவில் இந்த தொழில் நிறுவனங்கள் பல்வேறு பிரச்னைகளுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகின்றன. இவ்வாறு பிரதமர் மோடி மான் கி பாத் நிகழ்ச்சியில் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE