பொது செய்தி

இந்தியா

இந்தியாவையும், இந்துக்களையும் பிரிக்க முடியாது: மோகன் பகவத்

Updated : நவ 28, 2021 | Added : நவ 28, 2021 | கருத்துகள் (23)
Share
Advertisement
குவாலியர்: ‛‛இந்தியாவையும், இந்துக்களையும் பிரிக்க முடியாது. இந்துக்கள் இல்லாமல் இந்தியா இல்லை, இந்தியா இல்லாமல் இந்துக்கள் இல்லை,'' என்று ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் பேசியதாவது: இந்துக்கள் இல்லாமல் இந்தியா கிடையாது, இந்தியா இல்லாமல்
India, Hindus,inseparable, Rss, Leader, Mohan Bhagwat, இந்தியா,  இந்துக்கள், பிரிக்க முடியாது, ஆர்எஸ்எஸ், தலைவர், மோகன் பகவத்,

குவாலியர்: ‛‛இந்தியாவையும், இந்துக்களையும் பிரிக்க முடியாது. இந்துக்கள் இல்லாமல் இந்தியா இல்லை, இந்தியா இல்லாமல் இந்துக்கள் இல்லை,'' என்று ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் பேசியதாவது: இந்துக்கள் இல்லாமல் இந்தியா கிடையாது, இந்தியா இல்லாமல் இந்துக்களும் இல்லை. இந்தியாவையும், இந்துக்களையும் பிரிக்க முடியாது. இந்தியா சுயமாக நிற்கிறது, இதுதான் இந்துத்துவாவின் சாரம்சம். இந்தக் காரணத்துக்காகத்தான் இந்தியா இந்துக்களின் தேசமாக இருக்கிறது.


latest tamil news


சுதந்திரத்தின்போது நடந்த தேசப்பிரிவினைக்குப் பின், இந்தியா உடைந்து, பாகிஸ்தான் என்ற நாடு உருவானது. இந்தியா தேசப்பிரிவினையின் போது பாதிக்கப்பட்டதை மறந்து விடக்கூடாது. இந்தப் பிரிவினை நடக்காமல் இருந்தால் இந்த வலிபோயிருக்கும்.

நாம் இந்துக்கள் என்ற சிந்தனையை மறந்ததால் தான் இந்த தேசப்பிரிவினை நடந்தது. முஸ்லி்ம்கள் கூட இதை மறந்து விட்டார்கள். இந்துக்கள் என்று தங்களை நினைக்க கூடியவர்களின் வலிமை முதலில் குறைந்துவிட்டது. பிறகு எண்ணிக்கை குறைந்துவிட்டது. இந்துக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதனால் தான், பாகிஸ்தான் இந்தியாவாக இல்லை.

இந்துக்களின் எண்ணிக்கையும், வலிமையும், பலமும் குறைந்து வருகிறது. இந்து என்ற உணர்வு குறைந்து வருகிறது. இந்துக்கள் தங்களை இந்துவாக இருக்க வேண்டும் என்றால், பாரதம் அகண்டபாரதமாக இருக்க வேண்டும். இவ்வாறு மோகன் பகவத் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அறவோன் - Chennai,இந்தியா
28-நவ-202120:31:13 IST Report Abuse
அறவோன் இந்தியாவையும் அணைத்து மதத்தினரையும் பிரிக்கவே முடியாது - என்றென்றும் 👍👍👍😃😃😃
Rate this:
Cancel
J. G. Muthuraj - bangalore,இந்தியா
28-நவ-202117:05:45 IST Report Abuse
J. G. Muthuraj ஆனால் இந்தியாவை சமய, சாதி அமைப்புகள் இலகுவாக பிரிச்சுருமே, ஐயா...இதைப்பயன்படுத்திதானே கடந்த ஆயிரம் ஆண்டுகள், இந்தியாவின் பகுதிகளை அன்னியர்கள் ஆக்கிரமித்து ஆண்டார்கள்......நாட்டின் செல்வங்களெல்லாம் கொள்ளையடிக்கப்பட்டது....காலமெல்லாம் மன்னர்களுக்கும், அன்னிய அரசாங்கத்திற்கும் ரெவின்யூ செலுத்தியே இந்தியனின் முதுகு ஒடிந்தது..
Rate this:
vivek c mani - Mumbai,இந்தியா
28-நவ-202121:21:04 IST Report Abuse
vivek c maniஅந்நியர்கள் தங்கள் ஜாதி பிரிவுகளை மறைத்து இந்திய ஜாதி பிரிவுகளை பெரிது படுத்தினார்கள். நல் மனம் கொண்ட தீமை நினையாத ஹிந்துக்கள் அந்நியர்களிலும் ஜாதி பிரிவு உண்டு என்பதை மறந்து அந்நியன் வஞ்சகத்துடன் கூறிய விஷசொல்லை உண்மையென கொண்டனர். இன்றும் அந்நியர்கள் பல நாடுகளில் ஒருவரை ஒருவர் அழித்து கொள்வது மூலமாவது புரிந்து கொண்டால் நல்லது .அந்நியர்கள் தங்களுக்கு பல நூறு வருடங்களாக செய்த பாதகத்தை ஹிந்துக்கள் புரிந்து கொள்வது நல்லது....
Rate this:
Cancel
Priyan Vadanad - Madurai,இந்தியா
28-நவ-202116:13:16 IST Report Abuse
Priyan Vadanad யாரும் இந்தியாவை இந்துக்களிடமிருந்து பிரிக்க சொல்லவில்லையே? அப்படியிருக்க இவர் ஏன் இப்படி கலங்குகிறார்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X