பிரசவத்திற்கு சைக்கிளில் சென்ற நியூசி., பெண் எம்.பி.,

Updated : நவ 28, 2021 | Added : நவ 28, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
வெல்லிங்டன்: நியூசிலாந்து எம்.பி., ஜூலி அன்னே ஜெண்டர், மருத்துவமனைக்கு சைக்கிளில் சென்று பிரசவம் பார்த்து கொண்டார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இன்று அதிகாலை 3:04 மணிக்கு எங்கள் குடும்பத்தின் முக்கிய உறுப்பினரை நாங்கள் வரவேற்றுள்ளோம். பிரசவத்தின் போது, நான் சைக்கிளை ஓட்ட வேண்டும் என திட்டமிடவில்லை. ஆனால், அப்படி
New Zealand, Politician, Cycles,Hospital,Labour, Gives Birth,

வெல்லிங்டன்: நியூசிலாந்து எம்.பி., ஜூலி அன்னே ஜெண்டர், மருத்துவமனைக்கு சைக்கிளில் சென்று பிரசவம் பார்த்து கொண்டார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இன்று அதிகாலை 3:04 மணிக்கு எங்கள் குடும்பத்தின் முக்கிய உறுப்பினரை நாங்கள் வரவேற்றுள்ளோம். பிரசவத்தின் போது, நான் சைக்கிளை ஓட்ட வேண்டும் என திட்டமிடவில்லை. ஆனால், அப்படி நடந்துவிட்டது.


latest tamil news



மருத்துவமனைக்கு செல்வதற்காக அதிகாலை 2:00 மணிக்கு எழுந்த போது, என் பிரசவ வலி அவ்வளவு மோசமாக இல்லை. வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு செல்ல 2 - 3 நிமிடங்கள் ஆகும். இருந்த போதும், அங்கு சென்ற 10 நிமிடங்களில் பிரசவ வலி அதிகரித்தது. இப்போது, எங்களிடம் நல்ல ஆரோக்கியமான குழந்தை பிறந்து உள்ளது என தெரிவித்துள்ளார். இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.


latest tamil news



அமெரிக்காவின் மின்னிசோட்டாவில் பிறந்த ஜூலி அன்னேஜெண்டர், கடந்த 2006ம் ஆண்டு நியூசிலாந்திற்கு குடிபெயர்ந்து அந்நாட்டின் குடியுரிமையையும் பெற்றுள்ளார். சுமார் 50 லட்சம் மக்கள் தொகை கொண்ட நியூசிலாந்தில், பல பணிவான அரசியல்வாதிகள் உள்ளனர். அந்நாட்டின் பிரதமர் ஜெசிகா ஆண்டர்சன், பதவியில் இருக்கும்போது, மகப்பேறு விடுப்பு எடுத்துள்ளார். ஐ.நா., பொது சபை கூட்டத்தில் பங்கேற்க வரும் போது , தனது 3 மாத கைக்குழந்தையுடன் வந்தார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
28-நவ-202118:39:13 IST Report Abuse
DVRR Very Very Great குழந்தாய் எவ்வளவு தைரியம் இந்த பெண்ணுக்கு இந்த அளவுக்கு தைரியம் நமது பெண்களுக்கும் வரவேண்டும்
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
28-நவ-202118:05:14 IST Report Abuse
vbs manian இதே நம் நாட்டில் நடந்தால் மருத்துவ மனை எம் பி வீட்டுக்கு வரும்.
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
28-நவ-202118:03:58 IST Report Abuse
vbs manian இந்தியாவில் இதை நினைத்து பார்க்க முடியாது. பதவி கர்வம் தலைக்கேறவில்லை. நிதானமாய் இருக்கிறார்கள். பந்தா காட்டும் தலைகள் என்ன சொல்லும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X