அரசியல் செய்தி

தமிழ்நாடு

திரைப்பட விமர்சனங்களை தவிர்ப்போம்: அண்ணாமலை

Updated : நவ 28, 2021 | Added : நவ 28, 2021 | கருத்துகள் (35)
Share
Advertisement
சென்னை: ‛‛திரைப்பட விமர்சனங்களை தவிர்த்து விட்டு நம் இலக்கை நோக்கி பயணிப்போம்,'' என்று கட்சி நிர்வாகிகளை தமிழக பா.ஜ., தலைவர் அண்ணமாலை கேட்டுக்கொண்டுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: வரலாறு மற்றும் உண்மை சம்பவங்களை மையமாகக் கொண்டு வரும் திரைப்படங்களில் உண்மைக்கு புறம்பான கருத்துக்கள் வந்தால் அதை மக்களுக்கு எடுத்துரைப்பதில்
Avoid, movie, reviews, Tamilnadu, Bjp, Leader, Annamalai, திரைப்படம், விமர்சனங்கள், தவிர்ப்போம், தமிழகம், பாஜ, தலைவர், அண்ணாமலை,

சென்னை: ‛‛திரைப்பட விமர்சனங்களை தவிர்த்து விட்டு நம் இலக்கை நோக்கி பயணிப்போம்,'' என்று கட்சி நிர்வாகிகளை தமிழக பா.ஜ., தலைவர் அண்ணமாலை கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: வரலாறு மற்றும் உண்மை சம்பவங்களை மையமாகக் கொண்டு வரும் திரைப்படங்களில் உண்மைக்கு புறம்பான கருத்துக்கள் வந்தால் அதை மக்களுக்கு எடுத்துரைப்பதில் எந்த தவறும் இல்லை. சில இடத்தில் பா.ஜ., நம்முடைய கண்டனங்களை பதிவு செய்திருக்கிறது.


latest tamil news



திரைப்படம் என்பது பெரும்பாலும் இயக்குனரின் கற்பனையின் வெளிப்பாடு. அவர்கள் பார்த்த, படித்த மற்றும் கேள்விப்பட்ட சம்பவங்கள் அடிப்படையில் ஒரு திரைப்படம் உருவாகிறது. நமது கட்சியினர் சில நேரங்களில் பொழுதுபோக்கு திரைப்படங்களையும் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.

கட்சியின் முக்கிய பதவியில் இருக்கும் யார் சொல்லும் கருத்தும் கட்சியின் கருத்தாக மாறுகின்ற சூழல் இருக்கிறது. அது நிறைய நேரத்தில் நமது கட்சியின் கருத்தாக மாறிவிடுகிறது. எப்பொழுது எதற்காக பேச வேண்டுமோ அப்போது தான் பேச வேண்டும். பேசக்கூடாத நேரத்தில் பேசுவதை தவிர்க்க வேண்டிய இடத்தில் பேசாமல் இருப்பது அதைவிட முக்கியமான அரசியல் நாகரீகம்.

நமது இலக்கு நமக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பு, நமக்கு முன் இருக்கும் சவால்கள் இவற்றை மனதில் கொண்டு கவனமாக செயல்பட வேண்டும். எனவே, திரைப்படத்துறை குறித்து தேவையற்ற விமர்சனங்கள், விவாதங்கள் கருத்துக்களை கட்சி நிர்வாகிகள் தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arul Narayanan - Hyderabad,இந்தியா
28-நவ-202120:12:15 IST Report Abuse
Arul Narayanan கொங்கு நாட்டு ஜாதி ஓட்டுகளை கெடுத்து கொள்ள வேண்டாம் என்று அறிவுரை கூறியுள்ளார்.
Rate this:
Cancel
spr - chennai,இந்தியா
28-நவ-202120:11:52 IST Report Abuse
spr "கட்சியின் முக்கிய பதவியில் இருக்கும் யார் சொல்லும் கருத்தும் கட்சியின் கருத்தாக மாறுகின்ற சூழல் இருக்கிறது. அது நிறைய நேரத்தில் நமது கட்சியின் கருத்தாக மாறிவிடுகிறது. எப்பொழுது எதற்காக பேச வேண்டுமோ அப்போது தான் பேச வேண்டும். பேசக்கூடாத நேரத்தில் பேசுவதை தவிர்க்க வேண்டிய இடத்தில் பேசாமல் இருப்பது அதைவிட முக்கியமான அரசியல் நாகரீகம்." இந்த ஞானம் வந்தாற்பின் நமக்கேது வேண்டும் பாராட்டுவோம். அனைத்து மாநில பாஜக தலைவர்கள் (என்று எண்ணிக் கொள்பவர்கள்) "பாரத் சமாச்சார்" என்ற பெயரில் பாஜக அரசால் வெளியிடப்படும் மாதாந்திர செய்தித்தாளின் செய்திகளை மக்களுக்கு விளக்கிச் சொன்னாலே அது அவர்களின் சாதனைகளை பிறர் அறிய உதவும் அவை அனைத்தும் உண்மையாக இருக்குமாயின் மோடி அரசு பாராட்டப்பட வேண்டியதே அதனை மின்னஞ்சலாக அனுப்புவதோடு இலவசக் கையேடாகவும் மாற்றி கிருத்தவ மத போதகர்கள் போல மக்களிடம் இலவசமாக சேர்க்கலாம் திரு அண்ணாமலை இதனிக் குறித்து சிந்திக்க வேண்டும்
Rate this:
Cancel
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் ஒருத்தனும் மசிய மாட்டேங்கிறான் இது பாலிவுட் இல்லேங்கிறார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X