சர்வதேச நிதி அமைப்புகளிடம் மக்கள் வறுமை போக்க நிதி கேட்கும் தலிபான்

Updated : நவ 28, 2021 | Added : நவ 28, 2021 | கருத்துகள் (32)
Share
Advertisement
காபூல்: சர்வதேச நிதி அமைப்புகளிடம் ஆப்கன் குடிமக்களின் வறுமைகளைப் போக்க தலிபான் அரசு நிதி வழங்கும்படி கோரிக்கை விடுத்துள்ளது.ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாத அமைப்பு ஆட்சி செய்து வருகிறது. பிரதமர் முல்லா முகமது ஹாசன் அக்கந்து ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதர நாடுகளின் உள்துறையில் தலிபான் அரசு தலையிடாது என்றும் பிற நாடுகள் ஆப்கானிஸ்தானுக்கு நிதி
Taliban, International, Monetary, Fund, Alleviate, Poverty, People, சர்வதேச, நிதி அமைப்புகள், மக்கள், வறுமை, நிதி வேண்டும், தலிபான் அரசு, கோரிக்கை,

காபூல்: சர்வதேச நிதி அமைப்புகளிடம் ஆப்கன் குடிமக்களின் வறுமைகளைப் போக்க தலிபான் அரசு நிதி வழங்கும்படி கோரிக்கை விடுத்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாத அமைப்பு ஆட்சி செய்து வருகிறது. பிரதமர் முல்லா முகமது ஹாசன் அக்கந்து ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதர நாடுகளின் உள்துறையில் தலிபான் அரசு தலையிடாது என்றும் பிற நாடுகள் ஆப்கானிஸ்தானுக்கு நிதி அளிக்க முன்வந்தால் தங்கள் அரசு வரவேற்கும் என்றும் கூறியுள்ளார்.


latest tamil news


மற்ற நாடுகளுடன் சிறந்த பொருளாதார உறவை மேற்கொள்ள ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசு விரும்புவதாக கூறியுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தலிபான் ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்து வருகிறது. பதவியேற்ற நாள் முதலே கொரோனா தாக்கத்திலிருந்து பல்வேறு பொருளாதார சிக்கல்களை தலிபான் அரசு சந்தித்த வண்ணம் உள்ளது. இதையடுத்து இணையத்தில் பலர் தலிபான் அரசை விமர்சிக்க துவங்கினார். இதற்கு பதிலளிக்கும் வகையில் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் பிரதமர் முல்லா இதைத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்க அரசு அளித்து வந்த நிதி மூலமாக ஆப்கானிஸ்தான் 75 சதவீத பட்ஜெட் கிடைத்து வந்தது. தற்போது தலிபான் ஆட்சியில் வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம் அதிகரித்துள்ளது. ஆப்கானிஸ்தான் வங்கிகள் கடுமையான நிதி நெருக்கடிக்கு தள்ளப்பட்டன.

ஆப்கானிஸ்தானில் வசிக்கும் மூன்றரை கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பசி, பஞ்சம் பட்டினியால் தவித்து வருவதாக கூறிய ஐ.நா., தலிபான் அரசை எச்சரித்து வந்தது. வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் பல ஆப்கானிஸ்தான் மக்கள் தங்கள் வீடு மற்றும் உடமைகளை விற்கத் துவங்கிவிட்டனர்.

இதையடுத்து இதுகுறித்துப் பேசிய தாலிபான் பிரதமர் முல்லா முகமது, சர்வதேச நிதி அமைப்புகள் நிறுத்தி வைத்திருக்கும் நிதியை ஆப்கானிஸ்தானுக்கு மீண்டும் அளிக்க வேண்டும். அவ்வாறு அளித்தால்தான் ஆப்கானிஸ்தான் இயல்பு நிலைக்கு திரும்பும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sivagiri - chennai,இந்தியா
29-நவ-202113:19:01 IST Report Abuse
Sivagiri அடடே . .அதாவது - பொய் பொய்யா சொல்லி பிரச்சாரம் பண்ணி - ஆட்சிக்கு வரும் தீயமுக - ரூபாய்க்கு மூணு படி அரிசி / படி அரிசி ஒரு ரூபா / - ன்னு அந்தகாலத்திலிருந்து - அண்ணாதுரையிலிருந்து கருணாநிதி ஸ்டாலின் - உதயநிதி - மாமன் மச்சான் சித்தப்பா மக்க - பெரியப்பா, மாமா மக்க - பெரியாத்தா சின்னாத்தா - எல்லாம் க்ரூப்பா சேந்து - சொல்லி ஆட்சிக்கு வந்த பின்னால - ஒன்றிய அரசிடம் பிச்சை கேட்பது போல . . . துப்பாக்கி / குண்டுகளை காமிச்சு ஆட்சியை பிடிச்சாச்சு . . . சோறு போட வழியில்லை . . .
Rate this:
Cancel
MANIAN K - Dubai ,இந்தியா
28-நவ-202121:52:13 IST Report Abuse
MANIAN K செயின் பறித்து, கஞ்ஜா கடத்தி, ஆடு மாடு திருடியாவது இங்குள்ள மூர்க்கங்கள் உதவி செய்வார்கள்
Rate this:
Cancel
28-நவ-202121:17:53 IST Report Abuse
ஆரூர் ரங் அல்லாஹ் விடம் கையேந்துங்கள் . அவன் இல்லையென்று😛 சொல்லுவதில்லை . ஆனால் காபிர் களான எங்ககிட்ட கேட்காதீங்க 😝 உதை விழும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X