பொது செய்தி

இந்தியா

புதிய வகை வைரஸ்: விழிப்புடன் இருக்க மத்திய அரசு அறிவுரை

Updated : நவ 28, 2021 | Added : நவ 28, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி: ‛‛அதிக வீரியமுள்ள பல வகையில் உருமாறியுள்ளதாக கூறப்படும் புதிய வகை கொரோனா வைரசான 'ஒமைக்ரான்' காரணமாக அனைத்து மாநிலங்களும் விழிப்புடன் இருக்க வேண்டும்,'' என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.தற்போது, புதிதாக அதிக வீரியமுள்ள உருமாறிய கொரோனா வைரஸ் தென்பட்டுள்ளது. இதற்கு, 'ஒமைக்ரான்' என உலக சுகாதார நிறுவனம் பெயர் சூட்டியுள்ளது.
புதிய வகை, ஒமைக்ரான், வைரஸ், மத்திய அரசு, அறிவுரை,

புதுடில்லி: ‛‛அதிக வீரியமுள்ள பல வகையில் உருமாறியுள்ளதாக கூறப்படும் புதிய வகை கொரோனா வைரசான 'ஒமைக்ரான்' காரணமாக அனைத்து மாநிலங்களும் விழிப்புடன் இருக்க வேண்டும்,'' என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.

தற்போது, புதிதாக அதிக வீரியமுள்ள உருமாறிய கொரோனா வைரஸ் தென்பட்டுள்ளது. இதற்கு, 'ஒமைக்ரான்' என உலக சுகாதார நிறுவனம் பெயர் சூட்டியுள்ளது. தென் ஆப்ரிக்கா, மொசம்பிக் போன்ற நாடுகளிலும், ஹாங்காங்கிலும் இந்த புதிய வகை வைரஸ் பரவியுள்ளது. இந்த வைரஸ் பல வகைகளில் உருமாறியுள்ளதாகவும், முந்தைய வைரஸ்களை விட மிக வேகமாக பரவக்கூடியதாக உள்ளதாகவும் செய்திகள் வெளியாகிஉள்ளன.

இந்நிலையில், இந்த வைரசை இந்தியாவில் கட்டுப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.


latest tamil newsஇதன் ஒரு பகுதியாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: 'ஒமைக்ரான்' வைரஸ் தென்பட்டுள்ள நிலையில், தீவிர கண்காணிப்பு மற்றும் விழிப்புடன் இருக்க வேண்டும். தடுப்பூசி போடும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். அனைவரும் உஷாராக இருக்க வேண்டும். ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனைகளை குறைத்துள்ள மாநிலங்கள் அதிகப்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ராம.ராசு - கரூர்,இந்தியா
28-நவ-202120:41:09 IST Report Abuse
ராம.ராசு "விதி வலியது" "நடப்பது நடந்தே தீரும்" "கடவுள் கொடுக்க நினைப்பதை யாராலும் தடுக்க முடியாது கடவுள் தடுக்க நினைப்பதை யாராலும் கொடுக்க முடியாது" "எல்லாம் விதிப்படியே நடக்கும்" - கடவுள் நம்பிக்கை உள்ள ஒவ்வொருவரும் நம்புகின்ற கடவுள் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வார்த்தைகள். ஆரம்பத்தில் கோரோனோ வைரசுக்கு மருந்தே இல்லை என்று சொல்லப்பட்டது. என்றாலும் மருத்துவமனைகளில் மருத்துவம் பார்க்கப்பட்டது. முக கவசம் அணிவது, கைகளை அடிக்கடி சோப்புப் கழுவுவது, கிருமி நாசினியை கையில் தடவிக்கொள்வது, சமூக இடைவெளி விட்டு இருப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வலியுறுத்தப்பட்டது. ஆனால் அப்படியும் பரவாமல் இருக்காது என்று உறுதியிட்டுச் சொல்ல முடியாது என்று சொல்லப்பட்டது. பிறகு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதாக ஒன்றுக்கு இரண்டு ஊசி செலுத்திக்கொள்ள வேண்டும். அரசு ஆணைப்படி தடுப்பூசி கட்டாயம் இல்லை, அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு அரசோ அல்லது மருந்து நிறுவனங்களோ பொறுப்பு ஏற்காது என்று உறுதியாகச் சொல்லப்பட்டுவிட்டது. என்றாலும் தடுப்பூசி விளம்பரம் மூலமாக கட்டாயமாக அறிவுறுத்தல் செய்யப்படுகிறது. அனைவருக்கும் தடுப்பூசி என்ற குறிக்கோளுடன் அரசு நிர்வாகம். தடுப்பூசி போடுவது கோரோனோ வைரஸ் தொற்றுதலைத் தடுக்காது என்றாலும் உயிர் இழப்பைத் தடுக்க வாய்ப்பு.... வாய்ப்பு மட்டுமே உள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் "நீண்ட ஆயுள்" (ஆயுஷ்) துறையம் ஹோமியோபதி மருத்துவமும் சில மருந்துக்களை பரிந்துரை செய்கிறது. குறிப்பாக ARS Album 30 Plus என்ற ஹோமியோபதி மருந்து மூன்று நாட்கள் எடுத்துக் கொண்டால் அனைத்து வைரஸ் தொற்றுகளுக்கும் நல்ல எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும் என்று உறுதியாகச் சொல்லப்படுகிறது. நமது பாரம்பரிய சித்த மருத்துவம் கூட ஒரு நீண்ட பட்டியலைக் கொடுத்து இந்தக் காலத்திலும் மனிதர்களை பாதிக்கும் நோய்கள் இவைகள் மட்டுமே நோய்கள். புதிதாக எதுவும் இல்லை என்று சொல்லி அதற்கான மருத்துவத்தைக் கூட தெளிவாகச் சொல்லுகிறார்கள். இப்படி அதிக வீரியமுள்ள புதிய வகை கொரோனா வைரசான 'ஒமைக்ரான்' என்று மக்களை பயமுறுத்துவத்தைக் காட்டிலும் நம்மிடம் இருக்கின்ற மருத்துவ முறைகளை பயன்படுத்தினால், நமது நாட்டு மருத்துவம் உலகம் அறியச் செய்துவிடலாம். "MAKE IN INDIA" என்ற நமது அரசின் சுலோகத்தை மருத்துவத்தில் நிரூபித்துக் காட்டலாம். " நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்" திருக்குறளுக்கு ஏற்றவாறு அனைத்து நோய்க்கான தீர்வும் நம்மிடம் உள்ளது என்பதை "நீண்ட ஆயுள்" துறையின் வாயிலாக அமல்படுத்த வேண்டும்.
Rate this:
Cancel
28-நவ-202119:33:39 IST Report Abuse
அப்புசாமி ஆமாம். நாங்க ஊரை அடிச்சு, முடக்கி வாங்கிக் கட்டிக்கிட்டது போறும். இனிமே மாநிலங்களே அடிச்சு முடக்கட்டும்.
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
28-நவ-202117:57:04 IST Report Abuse
A.George Alphonse முதலில் எல்லா ஏர்போர்ட்களிலும் Corona டெஸ்டை கடுமை படுத்துங்கள். இல்லாவிட்டால் மூடிவிடுங்கள்.சும்மா ஜாக்கிரதை,ஜாக்கிரதை என்று சொல்வதால் ஒரு பயனும் இல்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X