புதிய வகை வைரஸ்: விழிப்புடன் இருக்க மத்திய அரசு அறிவுரை| Dinamalar

புதிய வகை வைரஸ்: விழிப்புடன் இருக்க மத்திய அரசு அறிவுரை

Updated : நவ 28, 2021 | Added : நவ 28, 2021 | கருத்துகள் (5) | |
புதுடில்லி: ‛‛அதிக வீரியமுள்ள பல வகையில் உருமாறியுள்ளதாக கூறப்படும் புதிய வகை கொரோனா வைரசான 'ஒமைக்ரான்' காரணமாக அனைத்து மாநிலங்களும் விழிப்புடன் இருக்க வேண்டும்,'' என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.தற்போது, புதிதாக அதிக வீரியமுள்ள உருமாறிய கொரோனா வைரஸ் தென்பட்டுள்ளது. இதற்கு, 'ஒமைக்ரான்' என உலக சுகாதார நிறுவனம் பெயர் சூட்டியுள்ளது.
புதிய வகை, ஒமைக்ரான், வைரஸ், மத்திய அரசு, அறிவுரை,

புதுடில்லி: ‛‛அதிக வீரியமுள்ள பல வகையில் உருமாறியுள்ளதாக கூறப்படும் புதிய வகை கொரோனா வைரசான 'ஒமைக்ரான்' காரணமாக அனைத்து மாநிலங்களும் விழிப்புடன் இருக்க வேண்டும்,'' என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.

தற்போது, புதிதாக அதிக வீரியமுள்ள உருமாறிய கொரோனா வைரஸ் தென்பட்டுள்ளது. இதற்கு, 'ஒமைக்ரான்' என உலக சுகாதார நிறுவனம் பெயர் சூட்டியுள்ளது. தென் ஆப்ரிக்கா, மொசம்பிக் போன்ற நாடுகளிலும், ஹாங்காங்கிலும் இந்த புதிய வகை வைரஸ் பரவியுள்ளது. இந்த வைரஸ் பல வகைகளில் உருமாறியுள்ளதாகவும், முந்தைய வைரஸ்களை விட மிக வேகமாக பரவக்கூடியதாக உள்ளதாகவும் செய்திகள் வெளியாகிஉள்ளன.

இந்நிலையில், இந்த வைரசை இந்தியாவில் கட்டுப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.


latest tamil news



இதன் ஒரு பகுதியாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: 'ஒமைக்ரான்' வைரஸ் தென்பட்டுள்ள நிலையில், தீவிர கண்காணிப்பு மற்றும் விழிப்புடன் இருக்க வேண்டும். தடுப்பூசி போடும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். அனைவரும் உஷாராக இருக்க வேண்டும். ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனைகளை குறைத்துள்ள மாநிலங்கள் அதிகப்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X