மே.வங்கத்தில் சாலை விபத்தில் 18 பேர் உயிரிழப்பு

Updated : நவ 28, 2021 | Added : நவ 28, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
கோல்கட்டா: மேற்கு வங்க மாநிலத்தில் இறந்தவரின் உடலை கொண்டு சென்ற மினி டிரக், மற்றொரு டிரக் மீது மோதியதில் 18 பேர் உயிரிழந்தனர்.மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில், ஹன்ஸ்கலியில் நெடுஞ்சாலையில், இறந்தவர் உடல் மற்றும் 35 பேருடன் சென்ற மினி டிரக் ஒன்று மற்றொரு டிரக் மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே 12 பேரும், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் 6 பேரும்
மேற்கு வங்கம், சாலை விபத்து, பலி, உயிரிழப்பு

கோல்கட்டா: மேற்கு வங்க மாநிலத்தில் இறந்தவரின் உடலை கொண்டு சென்ற மினி டிரக், மற்றொரு டிரக் மீது மோதியதில் 18 பேர் உயிரிழந்தனர்.

மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில், ஹன்ஸ்கலியில் நெடுஞ்சாலையில், இறந்தவர் உடல் மற்றும் 35 பேருடன் சென்ற மினி டிரக் ஒன்று மற்றொரு டிரக் மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே 12 பேரும், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் 6 பேரும் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 6 பெண்கள் மற்றும் ஒரு குழந்தை அடக்கம். போலீசார் மற்றும் உள்ளூர் மக்கள் உதவியுடன் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கடும் பனி மூட்டம் காரணமாக, எதிரே வந்த வாகனம் தெரியாததால், இந்த விபத்து நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


latest tamil news



சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் மம்தா பானர்ஜி, காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை மற்றும் தேவையான உதவிகளை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இவ்விபத்து குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மேற்கு வங்க கவர்னர் ஜெக்தீப் தங்காரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
28-நவ-202119:39:51 IST Report Abuse
Ram Pollachi ஆழ்ந்த இரங்கலை பகிர்ந்து கொள்கிறேன்...
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
28-நவ-202118:30:06 IST Report Abuse
DVRR அப்போ ஒன்னும் இழப்பீடு இல்லையா?? முஸ்லீம் பேகம் மும்தாஜ்??ஓஹோ இறந்தவர்களில் முஸ்லிம்கள் இல்லையல்லவே அதனால் தான் - இப்படிக்கு முஸ்லீம் பேகம் மும்தாஜ்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X