காங்கிரஸ் கூட்டத்தை புறக்கணிக்கும் திரிணமுல் காங்கிரஸ்

Updated : நவ 28, 2021 | Added : நவ 28, 2021 | கருத்துகள் (20)
Share
Advertisement
புதுடில்லி: ‛‛டில்லியில் காங்கிரஸ் கட்சி தலைமையில் நாளை (நவ.,29ம் தேதி) கூட்டும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்,'' என்று திரிணமுல் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.நாளை குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கும்போது, எதிர்க்கட்சிகளிடையே கருத்தொற்றுமையை உருவாக்க காங்கிரஸ் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நாளை காலை கூட்டத்தை
Delhi, Trinamool Congress, Boycotts, Congress, Meeting, புதுடில்லி, காங்கிரஸ், கூட்டம், புறக்கணிப்பு, திரிணமுல் காங்கிரஸ்,

புதுடில்லி: ‛‛டில்லியில் காங்கிரஸ் கட்சி தலைமையில் நாளை (நவ.,29ம் தேதி) கூட்டும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்,'' என்று திரிணமுல் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

நாளை குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கும்போது, எதிர்க்கட்சிகளிடையே கருத்தொற்றுமையை உருவாக்க காங்கிரஸ் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நாளை காலை கூட்டத்தை கூட்டியுள்ளார். ஆனால் அந்த கூட்டத்தில் பங்கேற்க திரிணமுல் காங்கிரஸ் தயாராக இல்லை எனத் தெரிகிறது.


latest tamil news



இதுகுறித்து திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சுதீப் பானர்ஜி கூறியதாவது: குளிர்காலக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியை காங்கிரஸ் கட்சி செய்வதில் எங்களுக்கு உடன்பாடில்லை. விருப்பமும் இல்லை. முதலில் காங்கிரஸ் கட்சி தங்களுக்குள் கருத்தொற்றுமையை உருவாக்க வேண்டும். அந்தக் கட்சியின் தலைமை பிறப்பிக்கும் உத்தரவை அந்தக் கட்சி எம்.பி.,க்கள் பின்பற்றட்டும். அதன்பின் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியைச்செய்யட்டும்.

பா.ஜ.,வை எதிர்க்கும் தீர்மானம் இல்லாமல் காங்கிரஸ் கட்சி இருக்கும் போது அவர்களுக்குப் பின்னால் நிற்கத் தயாராக இல்லை. பா.ஜ.,வை எதிர்க்கும் விஷயத்தில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்துவிட்டது. மக்கள் நலனை முன்வைத்து பார்லிமென்டில் பல்வேறு விவகாரங்களை எழுப்பி எதிர்க்கட்சிகளை நாங்கள் ஒருங்கிணைப்போம். ஆனால், காங்கிரஸ் கட்சி நாளை கூட்டும் கூட்டத்தில் பங்கேற்கமாட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே திரிணமுல் காங்கிரஸ் கட்சி நாளை தேசிய அளவிலான ஒருங்கிணைப்பு கூட்டம் முதல்வர் மம்தா பானர்ஜி இல்லத்தில் நடக்க இருக்கிறது. இந்தக் கூட்டத்தில் குளிர்காலக் கூட்டத்தொடரில் எழுப்ப வேண்டிய பிரச்சினைகள், விவகாரங்கள், பேசவேண்டியவைகள் குறித்து ஆலோசிக்க இருக்கிறார்கள்.

சமீபத்தில், டில்லி சென்றிருந்த மம்தா பானர்ஜியிடம், “காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்திக்க திட்டமிருக்கிறதா?” என நிருபர்கள் கேட்டனர். அதற்கு மம்தா பானர்ஜி, “ஒவ்வொரு முறையும் டில்லி வரும்போது சோனியாவை சந்திக்க வேண்டும் என்று அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்படவில்லை,” எனத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

திரிணமுல் முடிவு பற்றி காங்கிரஸ் கட்சியின் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியதாவது: பார்லிமென்ட் கூட்டத்தொடர் துவங்குவதற்கு முன்னர், அனைத்து எதிர்க்கட்சிகளும் கருத்துகளை பரிமாறி கொள்ள வேண்டும் என்பதற்காக அழைப்பு விடுத்தோம். இந்த கூட்டத்தில் பங்கேற்பது அல்லது புறக்கணிப்பது என்பது திரிணமுல்லின் முடிவு எனக்கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
29-நவ-202104:41:53 IST Report Abuse
J.V. Iyer காங்கிரேஸை காணாமல் செய்வதற்கு திரிணமூல் காங்கிரஸ் ஒத்துழைப்பு அவசியம்.
Rate this:
Cancel
unmaitamil - seoul,தென் கொரியா
29-நவ-202100:41:04 IST Report Abuse
unmaitamil இதுதான் பிஜேபி யின் ராஜ தந்திரம். அடுத்த தேர்தலுக்கு முன்பு கான்கிராஸை இந்தியாவில் செல்லாக் காசாக மாற்ற வேண்டும் . கட்சியை இல்லாது ஆக்க வேண்டும் . அது செவ்வனே நடக்கிறது
Rate this:
Cancel
Nagercoil Suresh - India,இந்தியா
28-நவ-202122:52:36 IST Report Abuse
Nagercoil Suresh மம்தாவை அண்ட விடாமல் பார்த்துக்கொள்வது காங்கிரஸ் கட்சிக்கு நல்லது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X