பொது செய்தி

இந்தியா

கான்பூர் டெஸ்ட்:இந்தியா ஆதிக்கம்

Updated : நவ 28, 2021 | Added : நவ 28, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
கான்பூர்: கான்பூர் கிரிக்கெட் டெஸ்டில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்துகிறது.இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் கான்பூரில் நடக்கிறது. ஸ்ரேயாஸ் சதம் கைகொடுக்க, இந்திய அணி முதல் இன்னிங்சில் 345 ரன் எடுத்தது. நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 296 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின் 49 ரன்

கான்பூர்: கான்பூர் கிரிக்கெட் டெஸ்டில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்துகிறது.



latest tamil news


இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் கான்பூரில் நடக்கிறது. ஸ்ரேயாஸ் சதம் கைகொடுக்க, இந்திய அணி முதல் இன்னிங்சில் 345 ரன் எடுத்தது. நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 296 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின் 49 ரன் முன்னிலையுடன் களமிறங்கிய இந்திய அணிக்கு சுப்மன் கில்(3) ஏமாற்றினார். இந்திய அணி ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 14 ரன் எடுத்திருந்தது.


latest tamil news



இன்றைய நான்காவது நாள் ஆட்டத்தின் துவக்கத்தில் இந்திய அணி திணறியது. புஜாரா(22), கேப்டன் ரகானே(4), மயங்க் அக்ர்வால்(17), ஜடேஜா(0) விரைவில் அவுட்டாக, 5 விக்கெட்டுக்கு 51 ரன் எடுத்து தத்தளித்தது. பின் அரைசதம் கடந்த ஸ்ரேயாஸ்(65), அஷ்வின்(32) கைகொடுத்தனர். கடைசி கட்டத்தில் சகா(61*), அக்சர் படேல்(28*) அசத்தினர். இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 234 ரன்கள் எடுத்து துணிச்சலாக 'டிக்ளேர்' செய்தது.


latest tamil news


முதல் இன்னிங்ஸ் முன்னிலை(49 ரன்) சேர்த்து, நியூசிலாந்துக்கு 284 ரன்களை வெற்றி இலக்காக இந்தியா நிர்ணயித்தது.


latest tamil news


கடின இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணியின் யங்(2) விக்கெட்டை அஷ்வின் வீழ்த்தினார். ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் ஒரு விக்கெட்டுக்கு 4 ரன் எடுத்திருந்தது. தற்போது 280 ரன்கள் பின்தங்கியுள்ள நியூசிலாந்து அணி, இந்திய அணியின் பிடியில் தப்புவது கடினம்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
29-நவ-202104:35:48 IST Report Abuse
சம்பத் குமார் 1). ஓப்பனிங் நல்லாதான் பண்ணாறாங். ஆனால் பினிசிங்கில் கோட்டை விட்டு விடுகிறார்கள்.2). உலக கோப்பை போட்டிகளில் குறிப்பாக ஒன்டே போட்டியில் ஜொலிப்பது கிடையாது.3). காரணம் IPL கேம். கிரிக்கெட்டின் மாண்பை கெடுத்து விட்டது. 4). ஆரம்பத்தில் IPL பார்க்க நல்லாத்தான் இருந்தது. போக போக பர்க்கர் பிஸ்தா மாதிரி கிரிக்கெட் கலாச்சாரத்தை கெடுத்து குட்டி சுவர் ஆக்கிவிட்டது.5). வீரர்கள் உள்ளுர் விளையாட்டு போட்டிகளில் கண்டிப்பாக விளையாட வேண்டும் அதாவது ரஞ்சி டிரோப்பி போன்ற ஒருநாள் மற்றும் டெஸ்ட் விளையாட்டுகளை. நன்றி வணக்கம் ஐயா
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
28-நவ-202118:02:02 IST Report Abuse
M  Ramachandran அஸ்வின்னை ஏன் கோகிலுக்கு பிடிக்க வில்லய் என்பது தெரியவில்லை. அவருக்கு சந்தர்ப்பம் கொடுப்பதில்லை. கோகிலு இல்லாத ஆட்டங்களில் அஸ்வினுக்கு சந்தர்ப்பம் கிடைக்கிறது. அதைய அவர் நிரூபிக்கிறார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X