‛மன் கி பாத்' நிகழ்ச்சியை அரசியலுக்கு பிரதமர் பயன்படுத்தியதில்லை: ஜே.பி.நட்டா

Updated : நவ 28, 2021 | Added : நவ 28, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி: ‛‛பிரதமர் மோடி ‛மன் கி பாத்' வானொலி நிகழ்ச்சியை ஒருபோதும் அரசியல் ஆதாயத்துக்காகப் பயன்படுத்தியது இல்லை,'' என்று பா.ஜ., தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா பெருமிதம் தெரிவித்தார்.பிரதமர் மோடி வானொலி மூலம் மக்களுக்கு உரையாற்றும் ‛மன் கி பாத்' நிகழ்ச்சி முதன்முதலில் 2014ம் ஆண்டு அக்டோபர் 3ம் தேதி தொடங்கப்பட்டது. ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிறு நடக்கும் இந்நிகழ்ச்சி,
Prime Minister, Modi, Never, Used, Mann Ki Baat, Politics, Bjp Leader, JP Natta, பிரதமர் மோடி, மன் கி பாத், நிகழ்ச்சி, அரசியல், பயன்படுத்தியதில்லை, பாஜ தலைவர் ஜேபிநட்டா,

புதுடில்லி: ‛‛பிரதமர் மோடி ‛மன் கி பாத்' வானொலி நிகழ்ச்சியை ஒருபோதும் அரசியல் ஆதாயத்துக்காகப் பயன்படுத்தியது இல்லை,'' என்று பா.ஜ., தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா பெருமிதம் தெரிவித்தார்.

பிரதமர் மோடி வானொலி மூலம் மக்களுக்கு உரையாற்றும் ‛மன் கி பாத்' நிகழ்ச்சி முதன்முதலில் 2014ம் ஆண்டு அக்டோபர் 3ம் தேதி தொடங்கப்பட்டது. ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிறு நடக்கும் இந்நிகழ்ச்சி, 83வது வாரத்தை எட்டியுள்ளது.


latest tamil news


இந்நிலையில் பா.ஜ., தொண்டர்கள் மத்தியில் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா இன்று (நவ.,28) பேசியதாவது: பிரதமர் மோடி அரசியல் குறித்து ஒருபோதும் வானொலி நிகழ்ச்சியான மன்கி பாத்தில் பேசியதில்லை. அந்நிகழ்ச்சி மூலம் அரசியல் ஆதாயமும் தேடியதில்லை. பிரதமர் மோடி தேசத்தின் கலாச்சாரம், தேசத்தின் விழாக்கள், சுற்றுச்சூழல், பெண்கள் முன்னேற்றம், சுகாதாரம், மருத்துவம், விளையாட்டு, இளைஞர்கள் நலன், குழந்தைகள் நலன், சாதனையாளர்கள் பற்றி மட்டுமே பேசுவார்.

ஒவ்வொரு மாதமும் நடக்கும் மன் கி பாத் நிகழ்ச்சியை பா.ஜ.,வினர் கேட்க வேண்டும். அது குறித்து விவாதிக்க வேண்டும் என்பதை இலக்காக வைத்திருக்கிறது. இதற்காக 10.40 லட்சம் பூத்களில் பா.ஜ.,வினர் மன் கி பாத் நிகழ்ச்சியை கேட்கிறார்கள். இவ்வாறு ஜே.பி.நட்டா பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
elakkumanan - Naifaru,மாலத்தீவு
28-நவ-202118:48:00 IST Report Abuse
elakkumanan அது உங்கள் இஷ்டம் சார்.....நாங்க எழவு வீட்டில் தான் ஒட்டு வேட்டையை (இழப்பீடு கொடுத்து ஓட்டை மொத்த விலைக்கு வாங்குவது ) ஆரம்பிப்போம்..........திராவிடம் நா சும்மாவா..............ஊரே தண்ணியில் மிதந்துகொண்டு இருக்கும்பொழுது, நாங்க போட்டோசூட் போடுறோம், நீட் ஒழிப்பு கோசம் போடுறோம், தமிழை காப்பாத்த உரம் வாங்குறோம்,.............எந்த இடத்திலும் ஒட்டு பொறுக்குவோம்................
Rate this:
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
28-நவ-202121:27:36 IST Report Abuse
Mirthika Sathiamoorthiஇவளவு கூவிட்டு ஆனா நாங்கள் தேர்தல் நேரத்தில் ஓட்டைபோடவே வரமாட்டோம்...சென்னை 2015 வெள்ளத்தால் பாதிக்கப்பட்டும் அப்போ நடந்த 2016 சட்டசபை தேர்தலில் வெறும் 55% மட்டுமே ஓட்டு போட்டனர். 2021 தேர்தலில் 59% தமிழகத்தில் குறைந்த வாக்குபதிந்த இடம். திராவிடம் நா சும்மாவா? போட்டோசூட் போடுறோம், நீட் ஒழிப்பு கோசம் போடுறோம், தமிழை காப்பாத்த உரம் வாங்குறோம்,...சென்னை மக்கள்? அதுக்குமேல ஒருபடி போயி வீட்டுக்குள் உக்காந்துகிட்டு வாயால் வடை சுடுரோம். ஒருவேளை ஈமெயில் மூலம் ஒட்டு வாட்ஸாப்ப் மூலம் ஒட்டுன்னா 100% ஓட்டைபோட்டிருப்பானுகளோ? இங்கே பிரச்னை அரசியல்வாதிகள்ல ..எவனுக்கு ஓட்டைபோடணும்ன்னு தெரியாம பேந்தப்பேந்த முழிக்கும் முட்டாப்பயலுங்கள். இந்த லிஸ்டில் இலாதவனுக மேல்தட்டு வர்க்கம். தெளிவா இருக்கும் யார் ஆட்சிக்குவந்தால் தங்களின் பொருளாதாரம் உயரும்ன்னு தெளிவா தெரிஞ்சவனுக அடுத்தவனுக கீழ்த்தட்டுமக்கள் அரசியல்வாதிகளிடம் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள். நலத்திட்டங்கள் இலவசங்கள் நேரடியா அனுபவிப்பவர்கள் . இவர்களுக்கு தெரியும் யாருக்கு ஓட்டுன்னு..இந்த நடுவில இருக்கும் வர்க்கம் இருக்கே இவனுகதான் பேந்த பேந்த முழிப்பவனுக.. யாருக்கு ஓட்டைபோடக்கூடாதுன்னு கேளுங்கள் இன்னாரு பெரு அவரு விலாசம் மொபில் நம்பர் முதற்கொண்டு சொல்லுவானுக..அவங்ககிட்டே யாருக்கு ஓட்டைபோடணும்ன்னு கேளுங்க அப்போ முழிப்பானுக பாரு...உடனே நல்லவனுக்கு ஊழல் செய்யாதவனுக்கு மக்களுக்கு உழைப்பவனுக்கு அப்டீன்னு சொல்லுவானுக அவனுக்கு பெயர் விலாசம் எதுவும் சொல்லமா பொத்தம் பொதுவா சொல்லுவானுக..நல்லவன் ஊருக்கு உழைப்பவன்னு நெத்தியிலையா எழுதியிருக்கும்? அவனுக என்ன பண்ணுவானுக பாவம் தெரிஞ்சாதானே சொல்லமுடியும்...தங்கள் மீதுள்ள அழுக்கை மறைக்க இவனுக கூவுவானுக பாரு அரசியல்வாதிங்க மேல புகார்...யப்பா..இப்போ நம்ம எதார்த்தத்தை பேசுவோம். சென்னையின் வெள்ளப் பிரச்சனை இன்னும் 10 ஆண்டுகளுக்கு தீர்க்கப்படாது. இது எல்ல அரசியல் கட்சிகளுக்கும் தெரியும் படகு விட்ட அன்னமலை உட்பட. இருந்தும் கூவுவோம் அதுதானே அரசியல்...ஏன் தீர்க்கப்படாது? கடல் மட்டத்திற்கு மிக அருகில் உள்ள பகுதியில் விவசாய நடவடிக்கைகளுக்கு ஆயிரக்கணக்கான பெரிய மற்றும் ஆழமற்ற ஏரிகள் தொண்டப்பட்டது. மழைநீர் அங்கே சென்று வடிய அமைக்கப்பட்டது..பல ஆண்டுகளாக நகரத்தின் அளவு வளர்ந்தது தென் சென்னை போன்ற பல இடங்கள் தாழ்வான பகுதிகள் மற்றும் ஈரநிலங்களாக விரிவடைந்தது. அடையாறு ஆற்றின் வெள்ளப்பெருக்கு மற்றும் பிற ஓடைகளை நகர்ப்புறங்களாக மாற்றியது, குடியிருப்பு, வணிக மற்றும் தொழில்துறை நடவடிக்கைகளுக்கு இடமளித்தது. இன்று, இந்த வளாகங்களில் பலவற்றை காலி செய்ய இயலாது.எப்புடி என் வீடு தண்ணிவராம எனக்கு வேணும் அவனை காலிசெயுங்கன்னு சொன்ன, அவன் உன் வீட்டை காலிபண்ணிட்டு ஓடிப்போயிடும்பங்க. சென்னையில் இயற்கையாய் மழை நீர் வடியாதபோது, செயற்கையான உள்கட்டமைப்புகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம். இருப்பினும், நகரின் தெருக்கள் மற்றும் மழைநீர் வடிகால்களின் வடிவமைப்பு மற்றும் கட்டுமானம் மிகவும் மோசமான தரத்தில் உள்ளன, மேலும் அவை நகரத்திற்கு உதவவே இல்லை.ஒரு காலத்தில் விவசாய நிலங்களுக்கு இடையகமாக சேவையாற்றிய செயற்கை ஏரிகளை எந்த அரசாங்கமும் மறுசீரமைத்து மறுவடிவமைப்பு செய்திருக்க முடியும். இருப்பினும், அவற்றில் பல தொலைந்துவிட்டன அல்லது நிறைய கழிவுநீரைக் சேகரிக்கும் இடமாக கொண்டிருக்கின்றன. எனவே, அவை buffers ஆக செயல்படும் திறன் குறைவாக உள்ளது. சென்னை நகரின் மாஸ்டர் பிளானோ அல்லது நகரத்தின் பேரிடர் மேலாண்மை திட்டமோ இந்த பிரச்சனைகளை அறிவியல் பூர்வமாக கையாளவில்லை. பேரிடர் மேலாண்மை திட்டம், ( 2017 தேதியிட்டது) சில நிலையான இயக்க நடைமுறைகளைக் கொண்டுள்ளது அவ்வளவே. இருப்பினும், நகரத்தின் நீர் ஆதாரங்களைப் பற்றி விரிவான, இருப்பிடம் சார்ந்த செயல் திட்டங்கள் அல்லது அவற்றை அடைவதற்கான எந்த roadmaps இல்லை. சென்னையின் வெள்ளப் பிரச்சினைக்கான தீர்வு தொழில்நுட்ப வெற்றியில் இல்லை மாறாக சிறந்த நிர்வாகத்தில் உள்ளது. ஆறு ஆண்டுகளாக, நகரத்திற்கு மேயர் அல்லது கவுன்சிலர்கள் இல்லை. தெரு வடிவமைப்புகளை புதுப்பித்தல், அறிவியல் பூர்வமாக வடிவமைத்து மழைநீர் வடிகால்களை உருவாக்குதல் மற்றும் இரண்டையும் முறையாகப் பராமரித்தல் ஆகியவை கோடிக்கணக்கான ரூபாய் செலவாகும் மற்றும் பல ஆண்டுகளாகும் நிலத்தடி வேலைகள் முடிய - நாம் இன்று தொடங்கினாலும் கூட. இதனால் அடுத்த 10 ஆண்டுகளில் சென்னையின் வெள்ளப் பிரச்னை தீர்ந்துவிடாது. 2011 இலிருந்து 2021 வரை இருந்த அதிமுக இதை செய்திருந்தால் இந்த பிரச்சனையே இல்லை..முடிஞ்சுபோச்சு அதை பேசவேண்டாம். இனிவரும் 10 ஆண்டுகளில், சென்னை ஒப்பீட்டளவில் மிகவும் பாதுகாப்பானதாகவும், வாழக்கூடியதாகவும் இருக்கும் வகையில் - குறைந்தபட்சம் இன்றாவது - ஒரு long-term roadmap தயாரிக்கப்படும் என நான் நம்புகிறேன். அதுவரைக்கும் ஊரே தண்ணியில் மிதந்துகொண்டு இருக்கும்..இதை வச்சுக்கிட்டு யார் வேணும்னாலும் ஆளும் அரசை குறைகூறலாம்..இதோ நம் மாலதீவு நண்பர் அதைத்தானே செயுறார்....
Rate this:
elakkumanan - Naifaru,மாலத்தீவு
29-நவ-202108:15:35 IST Report Abuse
elakkumananஅம்மா தாயே, இதெல்லாம் போன பத்து வருஷ ஆட்சியின் லச்சனம் என்று நினைத்தால், உங்களுக்கு வயசு மற்றும் அனுபவம் போதாது...முரசொலி மற்றும் சன் டிவி பார்த்து அறிவு வளருங்கள்..ஆனால், உண்மை வேண்டுமானால், உண்மை செய்திகளை படிக்கணும்...நம்ம திருட்டு த்ராவிடால்ஸ் அம்பது வருசமா திருடி, திருடி, திருடி...இன்றய இந்த இழி நிலை... அதிமுக, மற்றும் திமுக ரெண்டு களவாணிகளுமே பொறுப்பு..நீங்க ஏதாவது ஒரு களவாணிக்கு முட்டு கொடுங்க.. அது, உங்கள் இஷ்டம், அல்லது பிடிக்கலாம்...இந்த ரெண்டு திருட்டு கும்பலும் ஒழிந்தால்தான், தமிழகம் உருப்படும்..இதை, உங்களால் ஏற்க முடியாது..ஏனெனில், உங்களுக்கு இருட்டில் மற்றும் கழிவு நீரில் விடியலை தேடும் சுகம் பிடித்திருக்கிறது... எனக்கு, உண்மை மட்டுமே...அஞ்சு லச்சம் கோடி கடனில் இருக்கும் மாநிலம்...வறுமை ஒழிந்திருந்தால், இலவசம் எதற்கு, யாருக்கு...அஞ்சு லச்சம் கோடி, மக்களின் வறுமையை நீக்கவில்லையென்றால், யாரது வறுமையை அகற்ற உதவியது? சும்மா, மொக்கையா கருத்து போடாம, படிச்சு, புரிஞ்சு , உண்மையா எழுதுங்க மேடம்......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X