இன்னும் ஜாதி ஒழியவில்லை: சுப்ரீம் கோர்ட் வேதனை

Updated : நவ 28, 2021 | Added : நவ 28, 2021 | கருத்துகள் (61)
Share
Advertisement
புதுடில்லி:'நாடு சுதந்திரம் பெற்று, 75ஆண்டுகளாகியும் ஜாதிகள் ஒழியாதது பெரும் வேதனை அளிக்கிறது' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உத்தர பிரதேசத்தில் 1991ல் இளம் காதல் ஜோடி கலப்பு திருமணம் செய்துக் கொண்டனர். காதலனின் ஜாதியை சேர்ந்தோர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இளம் ஜோடியுயையும், அவர்களது திருமணத்துக்கு உதவி செய்த ஒருவரையும் தேடி கண்டுபிடித்தனர்.

புதுடில்லி:'நாடு சுதந்திரம் பெற்று, 75ஆண்டுகளாகியும் ஜாதிகள் ஒழியாதது பெரும் வேதனை அளிக்கிறது' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.



latest tamil news



உத்தர பிரதேசத்தில் 1991ல் இளம் காதல் ஜோடி கலப்பு திருமணம் செய்துக் கொண்டனர். காதலனின் ஜாதியை சேர்ந்தோர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இளம் ஜோடியுயையும், அவர்களது திருமணத்துக்கு உதவி செய்த ஒருவரையும் தேடி கண்டுபிடித்தனர். மூன்று பேரையும் கட்டி வைத்து சித்ரவதை செய்து அடித்துக் கொன்றனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து 35 பேரை கைது செய்து மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் எட்டு பேருக்கு மரண தண்டனையும், மற்றவர்களுக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது.இதை எதிர்த்து தாக்கல் செய்யப்ட்ட மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், எட்டு பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி உத்தரவிட்டது.

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டோரின் மூன்று பேரை மட்டும் விடுவித்து, மற்றவர்களின் தண்டனையை ஏற்றுக் கொண்டது.இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தண்டனை பெற்றோர் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர்.இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் நாகேஸ்வரராவ், சஞ்சீன் கன்னா, கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு, அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ஏற்று கொண்டது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:


latest tamil news



நாடு சுதந்திரம் பெற்ற 75ம் ஆண்டை கொண்டாடி வருகிறோம். ஆனால் நாட்டில் இன்னும் ஜாதிகள், இனவாதம் ஒழிக்கப்படாதது பெரும் வேதனை அளிக்கிறது.

'மேஜர்'ஆன பெண்ணுக்கும், ஆணுக்கும் திருமணம் பற்றி முடிவு எடுக்க அனைத்து உரிமைகளும் உள்ளன. இதில் தலையிட யாருக்கும் உரிமையில்லை.கவுரவ கொலை என்ற பெயரில் நடக்கும் இதுபோன்ற கொடூரங்களை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் பல முறை உத்தரவிட்டுள்ளது.இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (61)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
29-நவ-202115:40:46 IST Report Abuse
raja டெல்லி காரணுவோ நம்ப மதுர காரணுவோலை மிஞ்சிடுவானுவோ போல.... மதுர காரணுவோதான் வேதனை படுவானுவோ கன்ணீர் விடுவானுவோ..... டெல்லி காரனும் செய்ய ஆரமிச்சுட்டானே....
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
29-நவ-202111:27:10 IST Report Abuse
Ramesh Sargam கணம் கோர்ட்டார் அவர்களே, ஜாதி ஒழிந்தால் அரசியல்வாதிகள் பிழைப்பு என்னவாகும். ஜாதியை வைத்து பிழைப்பை நடத்தும் அரசியல்வாதிகள் இருக்கும்வரை, ஜாதிகள் ஒழியாது. மெத்த படித்த உங்களுக்கே இது புரியாமல் போனது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளிக்கிறது.
Rate this:
Cancel
Kumar - Madurai,இந்தியா
29-நவ-202111:18:38 IST Report Abuse
Kumar கலப்பு திருமணம் செய்தால் ஜாதி இல்லை என்ற சான்றிதழ் இருவருக்கும் வழங்கப்படும். இனி அவர்களுக்கும்,அவர்களின் வாரிசுகளுக்கும் ஜாதியே இல்லை என்று ஒரு சட்டம் கொண்டு வரட்டும், அப்பறம் ஒரு பய கலப்பு திருமணமே செய்ய மாட்டார்கள். வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X