பொது செய்தி

இந்தியா

உலகின் மிக உயரமான பாலம்: மணிப்பூரில் பணிகள் மும்முரம்

Updated : நவ 28, 2021 | Added : நவ 28, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
இம்பால்:உலகிலேயே மிக உயரமான ரயில்வே மேம்பாலம் மணிப்பூர் மாநிலத்தில், 141 மீட்டர் உயரத்தில் கட்டப்படுகிறது.வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர், மிசோரம், மேகாலயா, சிக்கிம் மற்றும் நாகாலாந்து ஆகியவற்றில் ரயில் போக்குவரத்து போதுமான அளவில் இல்லை. புதிய ரயில் பாதைஇந்த மாநிலங்களின் தலைநகரங்களை ரயில் போக்குவரத்து வாயிலாக இணைக்க மத்திய அரசு திட்டமிட்டது.இதற்காக

இம்பால்:உலகிலேயே மிக உயரமான ரயில்வே மேம்பாலம் மணிப்பூர் மாநிலத்தில், 141 மீட்டர் உயரத்தில் கட்டப்படுகிறது.வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர், மிசோரம், மேகாலயா, சிக்கிம் மற்றும் நாகாலாந்து ஆகியவற்றில் ரயில் போக்குவரத்து போதுமான அளவில் இல்லை.latest tamil news
புதிய ரயில் பாதை

இந்த மாநிலங்களின் தலைநகரங்களை ரயில் போக்குவரத்து வாயிலாக இணைக்க மத்திய அரசு திட்டமிட்டது.இதற்காக மணிப்பூர் மாநில தலைநகர்-இம்பால் மற்றும் ஜிராபம் நகரங்களுக்கு இடையே புதிய ரயில் பாதை அமைக்கப்படுகிறது. இதற்காக, நோனி பள்ளத்தாக்கின் குறுக்கே 141 மீட்டர் உயரத்தில் மேம்பாலம் கட்டும் பணி நடக்கிறது. இதுவே உலகின் மிக உயரமான ரயில்வே மேம்பாலம் என்ற பெருமையையும் அடைய உள்ளது.

தற்போது, தென் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள பால்கன்ஸ் என்ற நாட்டில் 139 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ரயில்வே பாலம் தான், உலக அளவில் மிக உயரமானது என்ற பெருமையை பெற்றுஉள்ளது. மணிப்பூர் பாலம் உபயோகத்துக்கு வந்தவுடன் ஐரோப்பாவின் சாதனையை முறியடிக்கும்.


latest tamil news
இந்த திட்டத்தின் தலைமை பொறியாளர் சந்தீப் ஷர்மா கூறியதாவது: ஜிராபம் மற்றும் இம்பால் ஆகிய நகரங்களுக்கு இடையேயான 220 கி.மீ., துாரத்தை கடக்க இப்போது 10- - 12 மணி நேரம் வரை ஆகிறது.


இரண்டரை மணி நேரம்

இந்தப் பாலம் கட்டி முடிக்கப்பட்டால், இரு நகரங்களுக்கு இடையேயான துாரம் 111 கி.மீ-., ஆக குறையும். இரண்டு அல்லது இரண்டரை மணி நேரத்தில் இந்த துாரத்தை கடந்து விடலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
29-நவ-202104:39:13 IST Report Abuse
J.V. Iyer மோடிஜியின் மகுடத்தில் மற்றொரு வைரக்கல். இந்தியாவின் பெருமை.
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
28-நவ-202123:12:51 IST Report Abuse
M  Ramachandran இது தீவிரா வாதிகளின் ( பாகிஸ்தான், சீனா) கண்ணில் உறுத்தும்.
Rate this:
Cancel
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் இது "மேம்பாலம்" என குறிப்பிடுவது தவறு "பாலம்" என்றே குறிப்பிடப்படவேண்டும் தரைப்பாலம் (CAUSEWAY) பாலம் (BRIDGE) இவையிரண்டும் நீர்நிலைகள் பள்ளத்தாக்குகளில் மீதுள்ளவை மேம்பாலம் (OVER BRIDGE) எனப்படுவது சாலை ரயில்பாதை போன்றவற்றைக் கடக்க கட்டப் படுவது தமிழும் மெல்ல சாகடிக்கப் படுகிறது சோகம் ஹூம்
Rate this:
29-நவ-202107:40:43 IST Report Abuse
ஆரூர் ரங்மிக மேன்மையான பாலத் திட்டம் என்பதால் மேம்பாலம்தான்😁...
Rate this:
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன்VIADUCT - A LONG, HIGH BRIDGE WHICH CARRIES A RAILWAY OR ROAD ACROSS A VALLEY இதையும் "HIGH BRIDGE" என்றுதான் குறிப்பிட்டுள்ளார்கள் எனக் காண்க...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X