பொது செய்தி

இந்தியா

வங்கி கணக்கிற்கு நேரடியாக பணம் அரசுக்கு ரூ.45 ஆயிரம் கோடி மிச்சம்

Updated : நவ 30, 2021 | Added : நவ 28, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
புதுடில்லி:அரசு வழங்கும் நிதி உதவி திட்டங்கள், ஆதார் அட்டை அடிப்படையில் பயனாளர்களின் வங்கி கணக்குக்கு நேரடியாக சென்று சேர்ந்ததன் வாயிலாக, கடந்த நிதியாண்டில் 45 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு மிச்சப்படுத்தி உள்ளது.நேரடி வங்கி முதலீடுவிவசாய நல திட்டம், வீட்டு வசதி திட்டம், மருத்துவ காப்பீடு, சமையல் எரிவாயு மானியம், பொது வினியோக திட்டம் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட
வங்கி கணக்கிற்கு நேரடியாக பணம் அரசுக்கு ரூ.45 ஆயிரம் கோடி மிச்சம்

புதுடில்லி:அரசு வழங்கும் நிதி உதவி திட்டங்கள், ஆதார் அட்டை அடிப்படையில் பயனாளர்களின் வங்கி கணக்குக்கு நேரடியாக சென்று சேர்ந்ததன் வாயிலாக, கடந்த நிதியாண்டில் 45 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு மிச்சப்படுத்தி உள்ளது.
நேரடி வங்கி முதலீடுவிவசாய நல திட்டம், வீட்டு வசதி திட்டம், மருத்துவ காப்பீடு, சமையல் எரிவாயு மானியம், பொது வினியோக திட்டம் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட மத்திய அரசு திட்டங்களுக்கான நிதி உதவிகள் 2014 முதல் பயனாளர்களின் வங்கி கணக்குக்கு நேரடியாக சென்று சேர்கின்றன.ஆதார் அட்டையின் அடிப்படையில் இந்த உதவி திட்டங்கள் வழங்கப்படுகின்றன.
தகுதி வாய்ந்தவர்களுக்கு அரசு திட்டங்கள், பணப் பலன்கள் முறையாக சென்று சேரவும், இடையே நடைபெறும் முறைகேடுகளை தடுக்கவும் இந்த நேரடி வங்கி முதலீடு துவங்கப் பட்டது. இதன் வாயிலாக மத்திய அரசு பல ஆயிரம் கோடி ரூபாயை மிச்சப்படுத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சக செயலர் அஜய் பிரகாஷ் சாவ்னி கூறியதாவது:கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்ட கடந்த நிதியாண்டில் பயனாளர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக பணம் செலுத்தப்பட்டதன் வாயிலாக அரசு மிகப் பெரிய அளவில் பலன் அடைந்துள்ளது. 5.5 லட்சம் கோடி ரூபாய்கடந்த நிதியாண்டில் இதன் வாயிலாக 98 கோடி பயனாளர்கள் பயன் அடைந்துள்ளனர்.
இந்த திட்டத்தின் கீழ் 2020 - 21ம் நிதியாண்டில் 5.5 லட்சம் கோடி ரூபாய் நிதி அளிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 40 சதவீதம் அதிகம். பயனாளர்களின் வங்கி கணக்குகளில் நேரடி முதலீடு செய்ததன் வாயிலாக கடந்த நிதியாண்டில் 45 ஆயிரம் கோடி ரூபாய் மிச்சப்படுத்தப் பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chidambaram - bangalore,இந்தியா
30-நவ-202100:03:57 IST Report Abuse
chidambaram ஏண்டா புருடா விடற. பாதி பேர விஸ்ட்ல இருந்து எடுத்தாச்சு கேஸ்கார ஏமாத்தறா நான் அக்கவுண்ட்ல போடறேன்னு பாதிபைருக்குமேல வரலை பாதிப்பைரு முறை தெரியாம அப்ளை பண்ல. மொத்ததுல ஏமாத்தி ஏப்பம் போட்டுட்டு பீத்தற. சரி இந்த காசு வந்துச்சுல்ல வருமானம் கூடுசாசுனானா ஜீஸ்டி வரிய குறைச்சிருக்கணுமில்ல. எவ்வளவு பளுவ ஏத்திருக்க. எவ்வளவு பணம் மிச்ஞம்பண்ண எவ்வளவு கருப்புபணம் மீட்டு எடுத்தன்னு மொதாத பீலாவையும் சொல்லிட்டு எங்க வரிய குறைச்ச எவ்வளவு கார்ப்பரேட் லோன் தளாளுபடி பண்ணினே சொல்லு. பிஜேபி. பரிவார உனான போல சங்கி வாய்கூசாம புளுகியே நாட்ட ஏமாத்தற.
Rate this:
Cancel
sankar - Nellai,இந்தியா
29-நவ-202119:50:05 IST Report Abuse
sankar தம்பி - அன்று ராஜிவ் காந்தி சொன்னது - அரசு நூறு ரூபாய்க்கு ஒரு திட்டம் போட்டால் - அதில் தொண்ணூற்று ஐந்து ரூபாய் வீணாகி வெறும் ஐந்து ரூபாய் தான் மக்களுக்கு சேருகிறது என்று - அது இப்போது தவிர்க்கப்பட்டு இருக்கிறதா இல்லையா
Rate this:
Cancel
yavarum kelir - yadhum vore ,இந்தியா
29-நவ-202117:08:34 IST Report Abuse
yavarum kelir நீங்கபாட்டுக்கு சொல்லிடீங்க . எங்களுக்கு எவ்வளவு நஷ்டம் தெரியுமா ? ....... ரவுல் வின்சி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X