பொது செய்தி

தமிழ்நாடு

மூடும் நிலையில் அரசு கேபிள் 'டிவி': முதல்வர் தலையிட கோரிக்கை

Updated : நவ 30, 2021 | Added : நவ 28, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
சென்னை:'செட் - டாப் பாக்ஸ்கள் இன்றி, வாடிக்கையாளர்களை இழந்து, அரசு கேபிள் 'டிவி'யை விட்டு வெளியேறும் நிலையில் இருக்கிறோம்; முதல்வர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அரசு கேபிள் 'டிவி' ஆப்பரேட்டர்கள் தெரிவித்துள்ளனர்.தமிழக அரசு கேபிள் 'டிவி' நிறுனத்தின் கீழ், 25 லட்சத்துக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள்; இவர்களுக்கு சேவை வழங்க, 15 ஆயிரத்துக்கும்
மூடும் நிலையில் அரசு கேபிள் 'டிவி': முதல்வர் தலையிட கோரிக்கை

சென்னை:'செட் - டாப் பாக்ஸ்கள் இன்றி, வாடிக்கையாளர்களை இழந்து, அரசு கேபிள் 'டிவி'யை விட்டு வெளியேறும் நிலையில் இருக்கிறோம்; முதல்வர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அரசு கேபிள் 'டிவி' ஆப்பரேட்டர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசு கேபிள் 'டிவி' நிறுனத்தின் கீழ், 25 லட்சத்துக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள்; இவர்களுக்கு சேவை வழங்க, 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கேபிள் ஆப்பரேட்டர்கள் உள்ளனர்.இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதால், அரசு கேபிள் 'டிவி' நிறுவனம், மூடு விழாவை நோக்கி செல்கிறது என்று ஆப்பரேட்டர்கள் கூறுகின்றனர்.
இது தொடர்பாக, அரசு கேபிள் 'டிவி' ஆப்பரேட்டர் கள் கூறியதாவது:அரசு கேபிள் 'டிவி' அனலாக் முறையில் சேவை வழங்கிய போது, 60 லட்சம் வாடிக்கையாளர்கள் இருந்தனர். டிஜிட்டலுக்கு மாறிய பின், 36 லட்சத்துக்கும் மேலான வாடிக்கையாளர்கள் இருந்தனர்.தற்போது, 25 லட்சம் வாடிக்கையாளர்களே உள்ளனர்.
மூன்று ஆண்டுகளில், புதிய செட் - டாப் பாக்ஸ்கள் ஒன்று கூட வழங்கப்படவில்லை. பழுதான பாக்ஸ்களுக்கும் மாற்று பாக்ஸ்கள் வழங்குவதில்லை.இதனால், இருக்கும் வாடிக்கையாளர்களும், தனியார் கேபிள் 'டிவி' ஆப்பரேட்டர்களை நோக்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து நாங்கள் வாடிக்கையாளர்களை இழந்து வருகிறோம்.அனலாக் முறையின் போது உள்ள நிலுவையை செலுத்த வற்புறுத்தி வருகின்றனர்.
அரசு கேபிள் சேவையில் இருந்து விலகியோரிடம் கேட்பதில்லை; இருக்கும் ஆப்பரேட்டர் களிடம் வற்புறுத்துவதால், அவர்களும் தனியார் கேபிள் 'டிவி' நிறுவனங்களை நோக்கி செல்கின்றனர்.இதே நிலை நீடித்தால், அரசு கேபிள் 'டிவி' நிறுவனம் விரைவில் மூடும் விழாவை சந்திக்கும். அதற்குள், முதல்வர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
29-நவ-202119:56:44 IST Report Abuse
ஆரூர் ரங் முன்பு கருணா 😎காலத்தில் அரசு கேபிள் //அடக்கமாக// செயல்பட்டது .இப்போது அடக்கம்🤧 செய்யப்படுகிறது. அவ்வளவுதான்
Rate this:
Cancel
29-நவ-202117:33:02 IST Report Abuse
saravanapandi cable operators pinnadi alaiyurathukku dth vaangittu poidalam.customer complaint sonna etho virothi mathiri peasureanga apparam eppadi customer iruppanga
Rate this:
Cancel
Elango - Sivagangai,இந்தியா
29-நவ-202117:15:43 IST Report Abuse
Elango Sun direct
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X