பொது செய்தி

தமிழ்நாடு

2 கி.மீ., நடந்து சென்றார் : மழை பாதிப்புகளை ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்

Updated : நவ 30, 2021 | Added : நவ 28, 2021 | கருத்துகள் (41)
Share
Advertisement
சென்னை:சென்னை புறநகரில் மழைநீர் தேங்கிய பகுதி களை, முதல்வர் ஸ்டாலின் நேற்று பார்வையிட்டார். அவர் 2 கி.மீ., நடந்து சென்று ஆய்வு செய்தார். முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு நிவாரண பொருட்களையும் வழங்கினார்.வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று, முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார். சென்னை புறநகர், திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் ஆய்வு
 2 கி.மீ., நடந்து ,சென்றார் ,மழை பாதிப்புகளை, ஆய்வு செய்த முதல்வர் ,ஸ்டாலின்

சென்னை:சென்னை புறநகரில் மழைநீர் தேங்கிய பகுதி களை, முதல்வர் ஸ்டாலின் நேற்று பார்வையிட்டார். அவர் 2 கி.மீ., நடந்து சென்று ஆய்வு செய்தார். முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு நிவாரண பொருட்களையும் வழங்கினார்.
வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று, முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார். சென்னை புறநகர், திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் ஆய்வு செய்தார்; தேங்கியுள்ள மழைநீரை அகற்ற அதிகாரி களுக்கு உத்தரவிட்டார். வேலப்பன் சாவடி பத்மாவதி நகரில் இருந்து, அங்குள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி வரை 2 கி.மீ., நடந்து சென்று, வெள்ள பாதிப்புகளை அவர் பார்த்தார்; பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
அங்குள்ள நிவாரண முகாமிற்கு சென்ற முதல்வர், 300க்கும் மேற்பட்டோருக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். அங்கு நடந்து வரும் சிறப்பு மருத்துவ முகாம்; கொரோனா தடுப்பூசி முகாமையும் பார்வையிட்டார்.க்ஷ


பூந்தமல்லி

இதைத்தொடர்ந்து, பூந்தமல்லி நகராட்சி அம்மன் கோவில் தெரு, போலீஸ் குடியிருப்பு; ஆவடி ஸ்ரீராம் நகர், திருமுல்லைவாயில் கணபதி நகர் பகுதிகளில், கன மழையால் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் பணிகளை ஆய்வு செய்தார். அங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.
முதல்வர் ஆய்வு செய்த இடங்களில் நின்றிருந்த பொதுமக்களிடம், மழைக்காலங்களில் நோய் தொற்று பரவாத வகையில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.


டீ குடித்த முதல்வர்

கொரோனா காலம் என்பதால் அனைவரும் முககவசம் அணிய வேண்டும். கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் ஸ்டாலின் எடுத்துரைத்தார்.பாதிப்புகளை ஆய்வு செய்ய சென்ற போது, ஆவடி மூர்த்தி நகர் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள கடையில் டீ குடித்தார்; அங்கிருந்த பொதுமக்களிடம் கலந்துரையாடினார்.
வில்லிவாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமிற்கு சென்ற முதல்வர், எத்தனை பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர் என கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது, பால்வளத்துறை அமைச்சர் நாசர், பூந்தமல்லி எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி, திரு வள்ளூர் கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வக்கீல் வண்டுமுருகன் - Phoenix, Arizona,யூ.எஸ்.ஏ
29-நவ-202121:10:39 IST Report Abuse
வக்கீல் வண்டுமுருகன் ஐபேக் இன்னும் ப்ரோமோஷன் ஐடியா கொடுத்துட்டு இருக்கா ?
Rate this:
Cancel
ராஜா - Chennai,இந்தியா
29-நவ-202116:36:46 IST Report Abuse
ராஜா கடைசி வரை மக்களை ஏமாளியாகவும், பிச்சைக்காரர்களாகவும் வைத்திருப்பது தான் திரவிட கழகங்களின் நோக்கம்.
Rate this:
Cancel
velimalaya - Chennai,இந்தியா
29-நவ-202113:42:41 IST Report Abuse
velimalaya எல்லாம் கழக உடன் பிரபுக்களின் அக்கிரமிப்புகள் ....முற்றிலும் நாடக மேடை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X