பொது செய்தி

இந்தியா

அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு...எச்சரிக்கை!:'ஒமைக்ரான்' அச்சுறுத்தலால் உஷார்

Updated : நவ 30, 2021 | Added : நவ 28, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி:உருமாற்றம் அடைந்த 'ஒமைக்ரான் வைரஸ்' உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில் தொற்று பரிசோதனை, கண்காணிப்பு, கட்டுப்படுத்துதல், 'ஹாட் ஸ்பாட்'களை கண்டறிதல், தடுப்பூசி போடும் பணிகளை வேகப்படுத்துவது உள்ளிட்ட பணிகளை தீவிரப்படுத்தும்படி, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளில்
அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு...எச்சரிக்கை!:'ஒமைக்ரான்' அச்சுறுத்தலால் உஷார்

புதுடில்லி:உருமாற்றம் அடைந்த 'ஒமைக்ரான் வைரஸ்' உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில் தொற்று பரிசோதனை, கண்காணிப்பு, கட்டுப்படுத்துதல், 'ஹாட் ஸ்பாட்'களை கண்டறிதல், தடுப்பூசி போடும் பணிகளை வேகப்படுத்துவது உள்ளிட்ட பணிகளை தீவிரப்படுத்தும்படி, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளில் அதிக முறை உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் சமீபத்தில் கண்டறியப்பட்டது. இந்த வைரசுக்கு ஒமைக்ரான் என, உலக சுகாதார நிறுவனம் பெயரிட்டுள்ளது.இது, விரைவில் பரவக்கூடியது என்றும், நோய் எதிர்ப்பை எளிதில் தவிர்க்கக் கூடிய தன்மை உடையது என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இது தொடர்பான ஆய்வுகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த தலைமை செயலர்களுக்கு, மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷண் கடிதம் அனுப்பி உள்ளார். அதன் விபரம்:ஒமைக்ரான் வைரஸ் பரவல் கண்டறியப்பட்டுள்ள நாடுகள், 'ஆபத்தான நாடுகள்' வரிசையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த வைரஸ் கண்டறியப்பட்ட நாடுகளில் இருந்து வருபவர்கள் உட்பட அனைத்து சர்வதேச பயணியரும் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். பயணியரின் முந்தைய பயண விபரங்களும் பெறப்பட வேண்டும். தொற்று உறுதி செய்யப்படும் நபர்களின் மாதிரிகள் மரபணு மாற்ற பரிசோதனைக்காக, 'இன்சாகாக்' பரிசோதனை கூடத்திற்கு அனுப்பப்பட வேண்டும். தொற்று பரிசோதனை போதிய அளவில் செய்யப்படவில்லை எனில், உண்மையான நிலவரத்தை அறிய முடியாமல் போய்விடும். எனவே, பரிசோதனைக்கான கட்டமைப்புகள் வலுப்படுத்தப்பட வேண்டும்.
பரிசோதனை வழிமுறைகளை கண்டிப்புடன் செயல்படுத்த வேண்டும்.சமீபத்தில் தொற்று பரவல் அதிகரித்த ஹாட் ஸ்பாட்களை கண்டறிந்து, கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். பரிசோதனை எண்ணிக்கையை அதிகப்படுத்துவதோடு, தொற்று உறுதி செய்யப்படும் விகிதம் 5 சதவீதத்திற்கு மேல் செல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
டாக்டர்கள், செவிலி யர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் தேவையான அளவு இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.மருத்துவ கட்டமைப்புகளை மேம்படுத்தி தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். நோயாளிகளுக்கு தரமான உடனடி சிகிச்சை கிடைப்பதில் எந்த சமரசமும் இருக்கக் கூடாது.
கொரோனா முந்தைய அலைகளின் போது, தவறான தகவல்கள் பரப்பப்பட்டதால் மக்கள் பீதி அடைந்த சம்பவங்களை பார்த்தோம். இந்த முறை அது போன்ற சம்பவங்களை தவிர்க்க வேண்டும். எனவே, ஊடகங்களுக்கு அவ்வப்போது முறையாக தகவல்கள் அளிக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தடுப்பூசியின் செயல்திறனை குறைக்குமா?

டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தலைவர் டாக்டர் ரன்தீப் குலேரியா கூறியதாவது:புதிய வகை ஒமைக்ரான் வைரஸ், 'ஸ்பைக் புரோட்டீன்' எனப்படும், புரதத்தின் மேற்புறத்தில் 30க்கும் மேற்பட்ட முறை உருமாற்றம் அடைந்துள்ளது. இந்த ஸ்பைக் புரோட்டீனுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதே பெரும்பாலான தடுப்பூசிகளின் வேலை.
இங்கு, 30க்கும் அதிகமான முறை உருமாற்றம் நிகழ்ந்தால், அது தடுப்பூசியின் செயல்திறனை குறைக்கக் கூடிய அபாயம் உள்ளது. அப்படிப்பட்ட சூழலில் தற்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகளின் செயல்திறனை மறு மதிப்பீடு செய்ய வேண்டிய நிலை ஏற்படும். ஒமைக்ரானின் தீவிரம் பரவும் தன்மையை பொறுத்து, அடுத்தகட்ட நடவடிக்கை அமையும்.இவ்வாறு அவர் கூறினார்.


12 நாடுகளுக்கு கட்டுப்பாடு

வழக்கமான சர்வதேச விமான போக்குவரத்து சேவையை அடுத்த மாதம் 15ல் துவக்கும் முடிவை, மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய உள்ளதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லா தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம், டில்லியில் நடந்தது. இதை தொடர்ந்து தென் ஆப்ரிக்கா, பிரேசில், பிரிட்டன், சீனா, ஜிம்பாப்வே, வங்கதேசம் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணியருக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்த நாடுகளில் இருந்து வருவோர், 'கொரோனா இல்லை' என, உறுதி செய்யப்பட்ட சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.இந்தியா வந்ததும் அவர்களுக்கு பரிசோதனை செய்யப்படும். தொற்று இல்லை என பரிசோதனையில் தெரிந்தாலும், ஏழு நாட்கள் அவர்கள் தனிமைப் படுத்தப்படுவர். எட்டாவது நாளில் மீண்டும் அவர்களுக்கு பரிசோதனை செய்யப்படும்.மேலும், மற்ற நாடுகளிலிருந்து வரும் பயணியருக்கும், முந்தைய பயண விபரங்கள், கண்காணிப்பு உள்ளிட்ட சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.


மும்பை, பெங்களூரில் தீவிர சோதனை


மஹாராஷ்டிராவின் மும்பை விமான நிலையத்தில், சர்வதேச விமான பயணியரை கண்காணிக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.ஆப்ரிக்க நாடுகளில் இருந்து மும்பைக்கு நேரடி விமானம் இல்லை என்ற போதும், சர்வதேச பயணியரின் முந்தைய பயண விபரங்களை 'பாஸ்போர்ட்' வாயிலாக கண்டறிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதிக ஆபத்து உள்ளதாக வகைப்படுத்தப்பட்ட 10 நாடுகளில் இருந்து, 584 பயணியர் சமீபத்தில் கர்நாடகாவின் பெங்களூரு வந்தனர். இதில், தென் ஆப்ரிக்காவில் இருந்து வந்த இருவருக்கு தொற்று உறுதியானது. மரபணு மாற்ற பரிசோதனையில் இவர்களுக்கு, 'டெல்டா' வகை தொற்று பாதிப்பு ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. மேற்கொண்டு சோதனைகள் நடக்கின்றன.
பெங்களூரு விமான நிலையத்தில், சர்வதேச விமான பயணியருக்கான பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. மஹாராஷ்டிரா மற்றும் கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு தொற்று இல்லை என்ற சான்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், முன்களப் பணியாளர்களுக்கு 'பூஸ்டர் டோஸ்' தடுப்பூசி போட அனுமதி அளிக்குமாறு, மத்திய அரசிடம் கர்நாடக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழன் - madurai,இந்தியா
29-நவ-202119:24:54 IST Report Abuse
தமிழன் ஏற்கனவே கெளம்பிருச்சா?
Rate this:
Cancel
Gopal - Chennai,இந்தியா
29-நவ-202111:38:10 IST Report Abuse
Gopal கைதட்டுங்கள்....கொரோனவை ஜெயித்துவிட்டோம் என்று சொல்லுங்கள்....புதிய கொரோனாவும் போய்விடும்.
Rate this:
sankar - Nellai,இந்தியா
29-நவ-202114:32:19 IST Report Abuse
sankarகோபால் - கோபால் - நீர் கைதட்ட வேண்டாம் ஐயா - கையை மூடி குழிக்குள் போயி படுத்துக்கொள்ளுங்கள்...
Rate this:
yavarum kelir - yadhum vore ,இந்தியா
29-நவ-202114:43:32 IST Report Abuse
yavarum kelirநீங்கள் முழு இரவு ஜபம் பண்ணுங்கள்.போய்விடும்...
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
29-நவ-202105:31:04 IST Report Abuse
Kasimani Baskaran ஆப்பிரிக்க நாடுகளுக்கு சென்றவர்களை மூன்று வாரங்களுக்கு தனிமைப்படுத்தி புதிதாக வருவோருக்கு தடை என்பதை அமல்ப்படுத்த வேண்டும். இல்லை என்றால் தெனாவெட்டாக முகக்கவசம் கூட அணியாமல் சுற்றித்திரிவோருக்கு ஆபத்து காத்திருக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X