பொது செய்தி

இந்தியா

இந்தியாவையும், ஹிந்துக்களையும் பிரிக்க முடியாது: மோகன் பாகவத்

Updated : நவ 30, 2021 | Added : நவ 28, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
குவாலியர்:''இந்தியாவையும், ஹிந்துக்களையும் பிரிக்க முடியாது,'' என, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.மத்திய பிரதேசத்தின் குவாலியரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் பேசியதாவது:ஹிந்துக்கள் இல்லாமல் இந்தியா கிடையாது; இந்தியா இல்லாமல் ஹிந்துக்களும் இல்லை. இந்தியாவையும், ஹிந்துக்களையும் பிரிக்க முடியாது.
 இந்தியாவையும், ஹிந்துக்களையும் பிரிக்க முடியாது: மோகன் பாகவத்

குவாலியர்:''இந்தியாவையும், ஹிந்துக்களையும் பிரிக்க முடியாது,'' என, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தின் குவாலியரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் பேசியதாவது:ஹிந்துக்கள் இல்லாமல் இந்தியா கிடையாது; இந்தியா இல்லாமல் ஹிந்துக்களும் இல்லை. இந்தியாவையும், ஹிந்துக்களையும் பிரிக்க முடியாது. வேதங்கள், சிந்து நதிக்கரையில் தான் தோன்றின. சிந்து நதியால் தான் பாரத நாட்டுக்கு இந்தியா என்றும், இங்குள்ள மக்களுக்கு ஹிந்து என பெயரும் ஏற்பட்டது.
அதனால் இந்தியா, ஹிந்து ஸ்தான் என கூறினால், அது பாரத நாட்டை தான் குறிக்கும். பாரதத்தின் கலாசாரம் ஹிந்து கலாசாரம் தான்; இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஹிந்துக்கள் தங்கள் அடையாளத்தை மறந்தபோது, நாடு பெரும் நெருக்கடியை சந்தித்தது. ஹிந்துக்கள் தங்கள் அடையாளத்தை மறந்ததால் தான், சுதந்திரத்தின் போது நாடு துண்டாடப்பட்டு, பாகிஸ்தான் உருவானது.
நம் ஹிந்துத்வா அடையாளத்தை உடைத்து, மதத்தின் அடிப்படையில் நாட்டை ஆங்கிலேயர்கள் பிரித்து விட்டனர். ஹிந்துக்கள் தங்கள் அடையாளத்தை மறந்துவிடக் கூடாது. அப்போது தான் அகண்ட பாரதமாக உருவாகும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nachiar - toronto,கனடா
29-நவ-202119:10:41 IST Report Abuse
Nachiar பகவத்ஜியின் இந்த உண்மை அடிக்கடி உரக்க பேசப்பட வேண்டும். உலஹேங்கிலும் உள்ள இந்துக்களுக்கு தாய் தந்தை பாரத மாதாவே. நம் மண்ணிலே பிறந்து நம் DNA உடன் கலந்த தாய் தந்தை நம் இந்து மத தேவன் தேவியே. எத்தனை நூற்றாண்டுகளாக வேறு நாடுகளில் பிறந்து வாழ்ந்து இருந்தாலும் வெளி நாட்டில் உள்ள இந்துக்களுடன் பேசிப்பார்த்தால் இந்த கூற்றின் உண்மை தெரியும். இந்தியாவில் உள்ள இந்துக்களுக்கு இதை உணர்த்தியததிற்கு நன்றி. you can take an Indian out of India but you cannot take India out of him என்பது உண்மையே. வாழ்க பாரதம்
Rate this:
Cancel
Nachiar - toronto,கனடா
29-நவ-202118:54:00 IST Report Abuse
Nachiar பொய்கள் பரவும் வேகமும் பதியும் ஆழமும் அதிகம். உண்மை செருப்பை காலில் மாட்ட முதல் பொய் உலகை பன்முறை சுற்றி வந்து விடும் என்பார்கள். அதனால் உண்மைகள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட வேண்டும். பொய் புரட்டலிலில் புனையப்பட்ட சரித்திர பாடங்களை திருத்துவதெப்போ?
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
29-நவ-202114:44:38 IST Report Abuse
jayvee அதனால்தான் ஹிந்துக்களை ஹிந்துக்களிடமிருந்து பிரிக்கும் வேலையை மினாரிட்டி ஏஜெண்டுகளும், திராவிஷ கம்யூனிஸ்ட் ஏஜெண்டுகளும் செய்கிறார்கள்.. ஜெய் பீம் படம் அதற்க்கு ஒரு நல்ல உதாரணம்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X