விபத்தில் காயமடைந்த பெண்ணுக்கு ரூ.20 லட்சம்

Added : நவ 28, 2021
Advertisement
சென்னை--விபத்தில் மாற்றுத் திறனாளியான பெண் விவசாயிக்கு, 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது.ஆந்திர மாநிலம் சித்துார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சரிதா 31; விவசாயி. இவர் 2019 ஜூலையில், ரேணிகுண்டா -- கோடூர் சாலையில் நடந்து சென்றார். அப்போது, அதிவேகமாக வந்த லாரி, சரிதா மீது மோதியது; பலத்த காயமடைந்த அவர், மாற்றுத்

சென்னை--விபத்தில் மாற்றுத் திறனாளியான பெண் விவசாயிக்கு, 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது.

ஆந்திர மாநிலம் சித்துார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சரிதா 31; விவசாயி. இவர் 2019 ஜூலையில், ரேணிகுண்டா -- கோடூர் சாலையில் நடந்து சென்றார். அப்போது, அதிவேகமாக வந்த லாரி, சரிதா மீது மோதியது; பலத்த காயமடைந்த அவர், மாற்றுத் திறனாளியானார்.மாற்றுத் திறனாளியானதற்கு, 42 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரி, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணை, நீதிபதி ஆர்.வேல்ராஜ் முன் நடந்தது. விசாரணையில் மனுதாரருக்கு 50 சதவீத செயல்பாட்டு இயலாமை ஏற்பட்டுள்ளது. இதற்கு லாரியை அதி வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் இயக்கியதே காரணம் என்பது தெளிவாகிறது. எனவே, மனுதாரருக்கு இழப்பீடாக 20.25 லட்சம் ரூபாயை, ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன், தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X