மேட்டுப்பாளையம்:''மக்களின் குறைகளை கேட்டறிந்து உடனடியாக தீர்வு காண வேண்டும்,'' என, அ.தி.மு.க., எம்.எல்.ஏ., செல்வராஜ் பேசினார்.சிறுமுகையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், அ.தி.மு.க., செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், வரும் பேரூராட்சி தேர்தலில், வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்ந்தெடுப்பது, தேர்தல் பிரசாரம், மக்கள் குறைகளுக்கு தீர்வு காண்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.அப்போது, பேசிய மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., செல்வராஜ்,''மக்கள் நமக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை பணியாற்றுவதற்கு கொடுத்துள்ளனர். எனவே, ஒவ்வொரு பகுதியாக சென்று, மக்களிடம் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்ய வேண்டும். அதேபோல், பிரச்னைகளை கண்டறிந்து, அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று, உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில் சொன்னதை எதுவும் செய்யவில்லை. அ.தி.மு.க., ஆட்சியில் செய்து முடித்தவற்றை இந்த அரசு தற்போது திறந்து வைத்து விழா நடத்தி வருகிறது. கோவை மாவட்டம் அ.தி.மு.க.,வின் கோட்டை. இளைஞர்களுக்கு அந்தஸ்து கொடுத்து, அவர்களுக்கு கட்சியினர் வழிவிடவேண்டும்,'' என்றார்.முன்னாள் எம்.எல்.ஏ., சின்னராஜ், மாவட்ட துணை செயலாளர் கந்தசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE