அன்னுார்,:அன்னுார் அருகே நெடுஞ்சாலைத் துறையின் அறிவிப்பு பலகையை திருடிய மூவர் கைது செய்யப்பட்டனர்.அன்னுார் அருகே கரியாம்பாளையத்தில் இருந்து, பொன்னே கவுண்டன்புதுார் செல்லும் சாலையில் விரிவாக்க பணிகள் நடந்துவருகின்றன. அங்கு தெலுங்குபாளையம் மற்றும் பொன்னே கவுண்டன்புதுாருக்கான துாரத்தை குறிப்பிடும், நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான பெயர் பலகை மற்றும் இரு ஆங்கிள்கள் வைக்கப்பட்டிருந்தன.அவற்றை நேற்றுமுன்தினம் இரவு எஸ். குரும்பபாளையத்தை சேர்ந்த தேவராஜ், 37, ஒன்னகரசம்பாளையம் வெள்ளியங்கிரி, 39, சாலையூர் பிரகாஷ், 37 ஆகிய மூவரும் திருடியுள்ளனர். இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் சதாசிவம் கொடுத்த புகாரின் பேரில், அன்னுார் போலீசார் மூவரையும் கைது செய்து, பெயர் பலகை மற்றும் ஆங்கிள்களை கைப்பற்றினர். மூவரும் மேட்டுப்பாளையம் மாஜிஸ்ட்ரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE