பொது செய்தி

இந்தியா

மனைவியை கணவர் அடிப்பது சரியே: 30 சதவீத பெண்கள் அதிர்ச்சி கருத்து

Added : நவ 28, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
புதுடில்லி:நாட்டில், 14 மாநிலங்களைச் சேர்ந்த 30 சதவீதத்திற்கும் மேலான பெண்கள், மனைவியை கணவர் அடிப்பது சரியே என அதிர்ச்சி அளிக்கும் வகையிலான கருத்தை தெரிவித்துள்ளனர். நாட்டின் 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேசிய குடும்ப சுகாதார ஆய்வு சமீபத்தில் நடந்தது. இதில் 14 மாநிலங்களைச் சேர்ந்த 30 சதவீதம் பெண்கள், வீடுகளில் கணவர் மனைவியை அடிப்பது சரி தான் என கூறி
மனைவியை கணவர் அடிப்பது சரியே: 30 சதவீத பெண்கள் அதிர்ச்சி கருத்து

புதுடில்லி:நாட்டில், 14 மாநிலங்களைச் சேர்ந்த 30 சதவீதத்திற்கும் மேலான பெண்கள், மனைவியை கணவர் அடிப்பது சரியே என அதிர்ச்சி அளிக்கும் வகையிலான கருத்தை தெரிவித்துள்ளனர்.
நாட்டின் 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேசிய குடும்ப சுகாதார ஆய்வு சமீபத்தில் நடந்தது. இதில் 14 மாநிலங்களைச் சேர்ந்த 30 சதவீதம் பெண்கள், வீடுகளில் கணவர் மனைவியை அடிப்பது சரி தான் என கூறி உள்ளனர்.அதுதொடர்பான அறிக்கை விபரம் வருமாறு:
தெலுங்கானாவில் 84 சதவீதம் பெண்கள், கணவர் மனைவியை அடிப்பது சரி என்கின்றனர். ஆந்திராவில் 84; கர்நாடகாவில் 77 சதவீதம் பேர் இதே கருத்தை முன்வைக்கின்றனர். மணிப்பூரில் 66, கேரளாவில் 55, ஜம்மு - காஷ்மீரில் 49, மஹாராஷ்டிராவில் 44, மேற்கு வங்கத்தில் 42 சதவீதம் பெண்கள் இதே கருத்தைத் தெரிவித்துள்ளனர். ஹிமாச்சல் பிரதேசத்ததில் 14.8 சதவீதம் பேர் மட்டும் சரி என்றனர்.
இதன்படி 14 மாநிலங்களை சேர்ந்த 30 சதவீதம் பெண்கள், மனைவியை கணவர் அடிப்பது நியாயம் என பதில் அளித்துள்ளனர்.தனக்கு துரோகம் செய்வதாக சந்தேகிப்பது, மாமியாரை மதிக்காதது, தெரியாமல் வெளியே செல்வது, குழந்தைகள் மற்றும் வீட்டை பராமரிக்காதது மற்றும் நல்ல உணவு தயார் செய்யாதது உள்ளிட்டவை, மனைவியை கணவர் அடிப்பதற்கான முக்கிய காரணங்களாக கூறப்பட்டன.
வீடு, குழந்தைகளை கவனிக்காதது மற்றும் மாமியாரை அவமானப்படுத்துவதே பெரும்பாலானோரின் கருத்தாக இருந்தன.இதே கேள்விக்கு கர்நாடகாவைச் சேர்ந்த 81.9 சதவீதம் ஆண்கள், மனைவியை அடிப்பது சரி என்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
T.S.SUDARSAN - Chennai,இந்தியா
30-நவ-202111:30:08 IST Report Abuse
T.S.SUDARSAN மனைவி கணவனை அடிக்கக்கூடாது. கணவன் மனைவியை அடிக்கக்கூடாது. இருவரும் வேறு வேறு குடும்பத்தில் பிறந்தவர்கள். இருவரும் இணையும்போது ரத்தஉறவு ஏற்படுகிறது. இருவரும் விட்டுக்கொடுத்து சென்றால் வாழ்கை இனிமையாக இருக்கும். அடிதடி இருக்காது. இதுவே வாழ்கை தத்துவம்.
Rate this:
Cancel
Kundalakesi - Coimbatore,இந்தியா
29-நவ-202123:44:26 IST Report Abuse
Kundalakesi Aangalai avamanapaduthum adikum pengal patri survey podunga
Rate this:
Cancel
ford Ahmed -  ( Posted via: Dinamalar Android App )
29-நவ-202121:26:22 IST Report Abuse
ford Ahmed ஆக ஆக இப்போது தான் ஆண்களின் கஷ்டம் தெரியும் போல.... இவளுக தொல்லை தாங்க முடியல யுவர் ஹானர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X