எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

தத்தளிப்பு! மீண்டும் வெள்ளத்தில் மிதக்கிறது சென்னை: மழை தொடர்வதால் இயல்பு நிலை முடக்கம்

Added : நவ 29, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
வரலாறு காணாத வடகிழக்கு பருவமழையால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் தண்ணீரில் மிதக்கின்றன. குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்ததால், மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், நீர் நிலைகளில் இருந்து உபரி நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளம் வடியாத நிலையில்,
தத்தளிப்பு! மீண்டும் வெள்ளத்தில் மிதக்கிறது சென்னை: மழை தொடர்வதால் இயல்பு நிலை முடக்கம்

வரலாறு காணாத வடகிழக்கு பருவமழையால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் தண்ணீரில் மிதக்கின்றன. குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்ததால், மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், நீர் நிலைகளில் இருந்து உபரி நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளம் வடியாத நிலையில், தொடர்ந்து கனமழை கொட்டி தீர்ப்பதால், மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில், கடந்த மாத இறுதியில் வடகிழக்கு பருவமழை துவங்கியது. இம்மாத துவக்கத்தில் இருந்தே, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது.கடந்த, 6ம் தேதி இரவு துவங்கி 7ம் தேதி காலை வரை சென்னையில் 23 செ.மீ., கனமழை கொட்டித் தீர்த்தது. இது, 2015ம் ஆண்டுக்குப் பின், சென்னையில், ஒரே நாளில் பெய்த அதிகபட்ச மழை அளவாக பார்க்கப்பட்டது.


தொற்று அபாயம்

இதனால், சென்னை யில் எப்போதும் இல்லாத வகையில், நகரின் மையப்பகுதியாக விளங்கும் மேற்கு மாம்பலம், கோடம்பாக்கம், கே.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளும் வெள்ளத்தில் மிதந்தன. சென்னை மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, குடிநீர் வாரியம் உள்ளிட்ட பல்துறை அதிகாரிகள், ஊழியர்கள் இரவு, பகல் பணியாற்றி, வெள்ள நீரை வடியச் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன் பலனாக, பல பகுதிகளில் வெள்ளம் வடிந்தாலும், சில பகுதிகளில் வெள்ளம் வடியவில்லை. அதற்குள், மீண்டும் பருவமழை தீவிரமடைந்துள்ளது. சென்னையில் வரலாறு காணாத வகையில், வடகிழக்கு பருவமழை ௧௦௦ செ.மீ., அளவை கடந்து, பெய்து வருகிறது. இது, 200 ஆண்டுகளில் இதுவரை இல்லாத மழைப்பொழிவாக பார்க்கப்படுகிறது.
தொடர் கனமழையால், வட சென்னையில், திருவொற்றியூரில் பிரதான சாலை மற்றும் வீடுகளை மழை நீர் சூழ்ந்தது.மணலி புதுநகரில், கொசஸ்தலை ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளநீர் வடியாத நிலையில், தொடர் மழை பெய்து வருவதால், தெருக்களில் தேங்கிய மழை நீர் மேலும் அதிகரித்தது.
மாதவரம், கொரட்டூர், போன்ற இடங்களில் தேங்கிய மழை நீருடன் கழிவுநீரும் கலப்பதால், நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது. புழல் உபரி நீர் திறப்பால், வெஜிடேரியன் வில்லேஜ் பகுதியை உபரி நீர் மூழ்கடித்து, மாதவரம் நெடுஞ்சாலையில், ௨ அடி உயரத்திற்கு ஆர்ப்பரித்து சென்றது.


மக்கள் அவதி

ஆவடி, பட்டாபிராம் போன்ற பகுதிகளிலும் வெள்ள நீர் சூழ்ந்தது. திருமுல்லைவாயில், சோழம்பேடு பகுதியில், முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கியதால், மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கினர்.கொளத்துார், ஜி.கே.எம்., காலனி, புளியந்தோப்பு, பட்டாளம், சூளை, தட்டாங்குளம், ஓட்டேரி, பெரம்பூர், அருந்ததி நகர், மேட்டுபாளையம் போன்ற பகுதிகளில், குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்துள்ளது.பிராட்வே, மண்ணடி, வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, வியாசர்பாடி உள்ளிட்ட பகுதிகள், மழை வெள்ளத்தில் தத்தளிக்கிறது.
மாநகராட்சியினர் மோட்டரால், மழை நீரை அகற்றி வருகின்றனர். ஆனால், அத்தியாவசிய மான உணவு உள்ளிட்டவை கிடைக்காமல் அப்பகுதி மக்கள் அவதியுறுகின்றனர்.வளசரவாக்கம் கடம்பாடியம்மன் கோவில் தெரு, எஸ்.வி.எஸ்., நகர், ஆற்காடு சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளது. ஆற்காடு சாலையில் மழைநீர் தேங்கியுள்ளதால், வாகனங்கள் ஊர்ந்து சென்றன.
சவுத்ரி நகர் பிரதான சாலை, உள்வாங்கி பள்ளம் ஏற்பட்டுள்ளது. கோடம்பாக்கம் மண்டலத்தில், வழக்கம் போல, கே.கே.நகர் ராஜமன்னார் சாலை, வடபழநி, 100 அடி சாலை, மேற்கு மாம்பலம் ஆரிய கவுடா சாலை, போஸ்டல் காலனி உள்ளிட்டவை மழை நீரில் மூழ்கின. தி.நகர் மேட்லி சுரங்கப்பாதை, ரங்கராஜபுரம் டூ - வீலர் சுரங்கப்பாதை என, பல்வேறு பகுதிகளிலும் மழை நீர் தேங்கியுள்ளது.
மேற்கு மாம்பலம், சீனிவாச தெரு, கே.கே., நகர் கிழக்கு வன்னியர் தெரு, விருகம்பாக்கம் அருணாச்சலம் சாலை, கே.கே., சாலை, காந்தி நகர், வடபழநி அழகிரி நகர் உள்ளிட்ட பகுதிகளில், குடியிருப்புகளுக்குள் மழை நீர் புகுந்தது.


வடியாத நீர்

வேளச்சேரி, அடையாறு, கிண்டி, துரைபாக்கம், தரமணி, ஆலந்துார் போன்ற பகுதிகளிலும், மழை நீர் தேங்கி உள்ளது. செம்மஞ்சேரியின் சில பகுதிகளில், வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால், மக்கள் தவிக்கின்றனர்.
புறநகர் பகுதிகளான தாம்பரம் மாநகராட்சி மற்றும் அதை ஒட்டிய ஊராட்சிகளின், பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேற்கு தாம்பரம், சி.டி.ஓ., காலனி, பெருங்களத்துார், குட்வில், மூவேந்தர், எஸ்.ஆர்.எஸ்., பாலாஜி, எப்.சி.ஐ., சசிவரதன் நகர்கள், ராகவேந்திரா கார்டன், காசா கிராண்ட் ஆகிய பகுதிகளில், 10 நாட்களுக்கும் மேலாக வெள்ளம் வடியவில்லை.
குரோம்பேட்டை, அஸ்தினாபுரம், ஜி.எஸ்.டி., சாலை, நியு காலனி, பம்மல், பொழிச்சலுார், திருநீர்மலை, பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளும் வெள்ளக்காடானது. தொடர் கனமழையால், குடிநீர் ஏரிகளில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோரங்களில் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழை தொடரும் என, வானிலை மையம் எச்சரித்துள்ளதால், மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
திருவள்ளூர்திருவள்ளூர் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழையால், நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. பூண்டி நீர்தேக்கத்தின் உபரி நீர், கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டு உள்ளது. கொசஸ்தலை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து, 20 நாட்களில், 16 டி.எம்.சி., உபரி நீர் எண்ணுார் கடலுக்கு சென்றுள்ளது. ஆரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், ஏராளமான விவசாய நிலங்கள் நீரில் மூழ்கின.
ஊத்துக்கோட்டை, திருவாலங்காடு, சோழவரம், பொன்னேரி, மீஞ்சூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள நெல் மற்றும் தோட்டக்கலை பயிர்கள், தண்ணீரில் மூழ்கி உள்ளன. தொடரும் மழையால், ௩௦ ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி, பயிர்கள் சேதமடைந்துளன.


காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்துார் தாலுகாவை மழை நீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாக வரதராஜபுரம், முடிச்சூர் பகுதிகளில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மழைநீர் சூழ்ந்த பகுதியில் சிக்கிய ௨௦௦க்கு மேற்பட்டோர், தேசிய பேரிடர் மீட்பு படையினர் மூலம் மீட்கப்பட்டனர்.ஒரத்துார் - ஆரம்பாக்கம் ஆகிய இரு ஏரிகளை இணைத்து அமைக்கப்பட்டு வந்த புதிய நீர்த்தேக்கத்தின் கரைகள் மழை நீரால் கரைந்து தண்ணீர் வெளியேறியது. இதனால், தேக்கிவைத்த நீர் பெருமளவு வீணாகியது. கரைகளை சீரமைக்கும் பணியில் பொதுப்பணித்துறை ஈடுபட்டுள்ளனர்.


செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டத்தில், சென்னை புறநகரான, வண்டலுார், ஊரப்பாக்கம் மற்றும் நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சி உள்ளிட்ட பகுதிகளில், குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. இப்பகுதிகளில், மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது. கூடுவாஞ்சேரி மற்றும் அதை அடுத்த காயரம்பேடு பகுதியிலும் மழைநீர் தேங்கி உள்ளது. மாவட்டத்தில், 2,463 ஏக்கர் விவசாய நிலங்களில் நெற் பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளது.
பொதுப்பணித் துறை பராமரிப்பில் உள்ள 528 ஏரிகளில், 519 ஏரிகள் நிரம்பி வழிகிறது. ஒன்பது ஏரிகளில், முழுவதுமாக நிரம்பி உள்ளன. ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 2,512 குளங்களும், 620 ஏரிகளிலும் நிரம்பி வழிகிறது.
- நமது நிருபர் குழு -

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
30-நவ-202101:44:42 IST Report Abuse
Natarajan Ramanathan கேடுகெட்ட கேவலமான ஆட்சி....
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
29-நவ-202114:02:39 IST Report Abuse
raja கேடுகெட்ட விடியா அரசின் ஆறு மாத கால சாதனை....இதுல பலகாலமா கொளத்தூருக்கு சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் சென்னை மேயர்... விடியலின் கேடுகெட்ட ஆட்சியை பாருங்க.. அடுத்த முறையும் அவனுக்கே ஒட்டு போடுங்க.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X