பொது செய்தி

இந்தியா

சபரிமலை வருமானம் ரூ.10 கோடியை கடந்தது: கடைகள் ஏலம் போகாததால் மாற்று ஏற்பாடு

Updated : நவ 29, 2021 | Added : நவ 29, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சபரிமலை-சபரிமலை வருமானம் ரூ.10 கோடியை கடந்தது. கடைகள் ஏலம் போகாததால் தேவசம்போர்டு மாற்று ஏற்பாடுகளில் இறங்கியுள்ளது.கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஆன்லைன் முன்பதிவு மூலம் சபரிமலையில் தினமும் 45 ஆயிரம் பக்தர்கள் வீதம் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். முன்பதிவு செய்தவர்களில் 70 சதவீதம் வரைதான் வருகின்றனர். நடை திறந்த 11 நாட்களில் ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 238

சபரிமலை-சபரிமலை வருமானம் ரூ.10 கோடியை கடந்தது. கடைகள் ஏலம் போகாததால் தேவசம்போர்டு மாற்று ஏற்பாடுகளில் இறங்கியுள்ளது.



latest tamil news


கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஆன்லைன் முன்பதிவு மூலம் சபரிமலையில் தினமும் 45 ஆயிரம் பக்தர்கள் வீதம் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். முன்பதிவு செய்தவர்களில் 70 சதவீதம் வரைதான் வருகின்றனர். நடை திறந்த 11 நாட்களில் ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 238 பேர் தரிசனம் செய்துள்ளனர். அதிக பட்சமாக நவ.26 ல் 18 ஆயிரத்து 427 பேர் தரிசனம் நடத்தினர். அப்பம் ,அரவணை விற்பனை மற்றும் கடைகள் ஏலம் மூலம் இந்த நாட்களில் தேவசம்போர்டின் வருமானம் ரூ. 10 கோடியை கடந்துள்ளது. முன்பதிவு செய்த பக்தர்கள் அனைவரும் தரிசனத்துக்கு வந்தால் வருமானம் மேலும் அதிகரிக்கும்.

மாற்று ஏற்பாடு

பல முறை ஏலம் விட்ட பின்னரும் கடைகளை எடுக்க வியாபாரிகள் தயாராக வில்லை. பக்தர்கள் கூட்டம் குறைவு, அவர்கள் சன்னிதானத்தில் தங்க முடியாது என்பதாலும் வியாபாரிகள் இணைந்து ஏலம் கேட்காமல் உள்ளனர். இதனால் தேவசம்போர்டு மாற்று ஏற்பாடுகளில் தீவிரமாக இறங்கியுள்ளது. அரசு மற்றும் கூட்டுறவு அமைப்புகள் மூலம் கடைகளை திறப்பதற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இதுகுறித்து தேவசம்போர்டு தலைவர் அனந்தகோபன் கூறியதாவது:வியாபாரிகள் இணைந்து பேரம் பேசுவதை அனுமதிக்க முடியாது. பக்தர்கள் பாதிக்காமல் இருக்க அரசு ஏஜன்சிகள் மூலம் கடைகள் திறக்கப்படும். கழிவறைகளில் தொழிலாளர்கள் இல்லை என்ற நிலை ஏற்பட்டால் தேவசம்போர்டு நேரடியாக ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்களை நியமிக்கும், என்றார். பத்தணந்திட்டையில் கேரள அரசு போக்குவரத்துக்கழகத்தின் 'கே.எஸ்.ஆர்.டி.சி.ஹப்' என்ற திட்டத்தை அமைச்சர் வீணாஜார்ஜ் தொடங்கி வைத்தார்.


latest tamil news


இதன்படி தொலை துாரங்களில் இருந்து பஸ்களில் பம்பைக்கு டிக்கெட்டு எடுத்து பயணிக்கும் பக்தர்கள் இங்கு இறங்கி நான்கு மணி நேரம் ஓய்வு எடுத்த பின்னர் அதே டிக்கெட்டில் பம்பைக்கு பயணிக்கலாம். அவர்கள் ஓய்வெடுக்க பத்தணந்திட்டை பஸ்ஸ்டாண்டில் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் இயக்கப்படும் பஸ்கள் வழியில் எங்கும் நிற்காமல் பம்பை செல்லும். இதற்காக 65 பஸ்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R MURALIDHARAN - coimbatore,இந்தியா
29-நவ-202110:15:41 IST Report Abuse
R MURALIDHARAN உண்டியலில் போடும் காசுக்கு அங்கு எந்த வசதியும் செய்து தருவதில்லை. உண்டியல் வருவாயை அரசு இதர பல்வேறு செலவினங்களுக்கு உபயோகிக்கிறது. தேவசம் போர்டில் பணியாற்றும் பலரும் தெய்வ நம்பிக்கை இல்லாதவர்களும், மதம் மாறிகளும் இருக்கிறார்கள். அதே நேரத்தில் வக்பு போர்டுக்கு அரசு செலவு செய்கிறது. கேரளாவில் சமீபத்தில் இனி வக்பு போர்டு நியமனங்கள் அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நியமிக்கபடுவார்கள் என்று அறிவித்ததற்கு எல்லா முஸ்லீம் அமைப்புகளும் ஒன்று சேர்த்து எதிர்க்கின்றன. அவர்கள் கூறும் காரணம், தேர்வாணையம் மூலம் நியமித்தால் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் பணியில் அமர்த்தப்படலாம் அது இஸ்லாத்திற்கு எதிரானது என்கிறார்கள். ஆகையினால் இந்துக்கள் அனைவரும் கோவில் உண்டியலில் போடும் பணத்தை ஏழைகளின் உணவிற்கோ, கல்விக்கோ செலவிடலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X