தொல்லியல் சின்னங்கள் சேதம் தங்கம் தென்னரசு எச்சரிக்கை

Added : நவ 29, 2021 | கருத்துகள் (1) | |
Advertisement
திருப்பரங்குன்றம்- -''தொல்லியல் சின்னங்களை சேதப்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.மதுரை, திருப்பரங்குன்றத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில் அகழாய்வு பணிகளை தொடர்ந்து நடத்த 5 கோடி ரூபாய் ஒதுக்கியும், புதிய இடங்களில் அகழாய்வு மேற்கொள்ளவும், முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.
 தொல்லியல் சின்னங்கள் சேதம் தங்கம் தென்னரசு எச்சரிக்கை

திருப்பரங்குன்றம்- -''தொல்லியல் சின்னங்களை சேதப்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

மதுரை, திருப்பரங்குன்றத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில் அகழாய்வு பணிகளை தொடர்ந்து நடத்த 5 கோடி ரூபாய் ஒதுக்கியும், புதிய இடங்களில் அகழாய்வு மேற்கொள்ளவும், முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். தொல்லியல் துறை சார்பில் புதிய முன்னெடுப்புகளை உருவாக்க, அதன் வாயிலாக தமிழ் பண்பாட்டை ஆவணப்படுத்த, மாநிலத்தில் மேலும் மூன்று இடங்களில் அகழாய்வு பணி துவங்க அரசு அனுமதித்துள்ளது.

மதுரை கீழடியில், எட்டாவது கட்ட அகழாய்வு மேற்கொள்ளப்படும். அங்கு 12 கோடி ரூபாயில் அருங்காட்சியகத்தை முதல்வர் திறக்க உள்ளார்.கொற்கையில் கடல் ஆய்வுகளின் வாயிலாக, புதிய கண்டுபிடிப்புகளில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும்.தொல்லியல் சின்னங்களை சேதப்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.தொல்லியல் சின்னங்கள் உள்ள பகுதியில் குவாரி நடத்தக் கூடாது என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
29-நவ-202113:32:44 IST Report Abuse
raja "தொல்லியல் சின்னங்களை சேதப்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்".... ஆனா கோயில் சிலைகளை சேதப்படுத்துபவருக்கு பாராட்டும் பதக்கமும் கொடுக்கும் இந்த விடியா அரசு....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X