சம்பளத்தில் 40 சதவீதம் தான் வீட்டுக்கடன்! | Dinamalar

சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

சம்பளத்தில் 40 சதவீதம் தான் வீட்டுக்கடன்!

Updated : டிச 01, 2021 | Added : நவ 29, 2021 | கருத்துகள் (2) | |
வீட்டுக்கடன் வாங்கு வதற்கு முன், நினைவில் கொள்ள வேண்டியவற்றை விளக்குகிறார், நிதி ஆலோசகர் சவு. சிவகுமார்: வீடு வாங்க திட்டமிட்டிருப்பவர் முதலில் செய்ய வேண்டியது, வீடு வாங்க தனக்கு தகுதி இருக்கிறதா என்பதை கண்டறிவதாகும். தற்போது வங்கிகள், வீட்டு வசதி நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் முதலில் பார்ப்பது 'கிரெடிட் ஸ்கோர்' எனப்படும், வாங்கிய கடனை எப்படி திருப்பி
சொல்கிறார்கள்

வீட்டுக்கடன் வாங்கு வதற்கு முன், நினைவில் கொள்ள வேண்டியவற்றை விளக்குகிறார், நிதி ஆலோசகர் சவு. சிவகுமார்: வீடு வாங்க திட்டமிட்டிருப்பவர் முதலில் செய்ய வேண்டியது, வீடு வாங்க தனக்கு தகுதி இருக்கிறதா என்பதை கண்டறிவதாகும்.

தற்போது வங்கிகள், வீட்டு வசதி நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் முதலில் பார்ப்பது 'கிரெடிட் ஸ்கோர்' எனப்படும், வாங்கிய கடனை எப்படி திருப்பி அளித்துள்ளார் என்ற அளவைத் தான்.அது எந்த அளவுக்கு அதிகமாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு வீட்டுக் கடன் உறுதியாக கிடைக்கும். அடுத்து, வீட்டுக்கடன் வாங்குபவரின் சம்பளம், வீட்டுக் கடனை திரும்ப செலுத்தும் தகுதி ஆகியவற்றை பார்ப்பர்.

குறிப்பாக, ஒருவருக்கு லட்சக்கணக்கில் சம்பளம் இருக்கிறது என்பதற்காக வீட்டுக் கடன் சுலபமாக கிடைத்து விடாது. அவர் வீட்டுக்கு எடுத்து வரும் சம்பளத்தில், 40 சதவீத அளவுக்கு தான் வீட்டுக் கடன் கிடைக்கும். வேறு பல கடன்களுக்கு தவணை கட்டி வந்தால், கடனை திரும்ப செலுத்தும் தகுதி குறைந்து விடும். எனவே, வீட்டுக்கடன் வாங்க திட்டமிடும் போது, இதர கடன்களை முடிந்தவரை முடித்து விடுவது நல்லது.

அடுத்து பார்க்கும் வேலை, வயது, கல்வி தகுதி, நிதிநிலை, சார்ந்திருக்கும் குடும்பத்தினர், துணைவரின் வருமானம், வேலையின் நிரந்தரத் தன்மை போன்றவற்றின் அடிப்படையில் தான் கடன் வழங்குவர். பணி நிரந்தரம் செய்யப்பட்டு குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் கடந்திருக்கும் பட்சத்தில், கடன் சுலப மாக கிடைக்கும்.கடன் வழங்கும் வங்கி அல்லது வீட்டு வசதி நிறுவனமே, வீட்டுக் கடன் தொகைக்கு இணையாக வீட்டுக்கடன் தொகை காப்பீடு எடுத்துக் கொள்ள சொல்லும் அல்லது எடுத்து தருவர்.
இப்படி காப்பீடு எடுப்பது கட்டாயம். வீட்டுக் கடன் எடுத்திருப்பவருக்கு ஏதாவது அசம்பாவிதம் நடக்கும் போது, இந்த காப்பீடு தொகை மூலம் வீட்டுக் கடன் அடைக்கப்பட்டு வாரிசுகளுக்கு வீடு போய் சேரும்.இந்த வீட்டுக்கடன் காப்பீடு இரு விதமாக எடுக்கப்படுகிறது. வீட்டுக் கடன் தொகைக்கு இணையாக ஆயுள் காப்பீடு எடுப்பது முதல் முறை.இதில் கடன் காலம் முழுக்க ஆரம்பத்தில் வாங்கிய வீட்டுக் கடன் தொகை அளவுக்கு 'கவரேஜ்' இருக்கும்.
இரண்டாவது முறையில் கடன் தொகை குறைய குறைய காப்பீட்டின் அளவும் குறைந்து வரும். முன்னதில் 'பிரீமியம்' அதிகம் இருக்கும். பின்னதில் பிரீமியம் குறைவாக இருக்கும். உங்களுக்கு எது வசதியோ, அதை எடுத்துக் கொள்ளுங்கள்.வீட்டுக் கடன் தவணையை தொடர்ந்து ஒழுங்காக கட்டி வருவது அவசியம். தொடர்ந்து மூன்று தவணைகள் கட்டவில்லை எனில், வாராக் கடனாக மாறி விடும் கவனம் தேவை!

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X