பொது செய்தி

தமிழ்நாடு

யானைகள் பலியை தடுக்க இரு தடங்களை ஒரே இடத்தில் அமைக்க ஆலோசனை

Updated : நவ 29, 2021 | Added : நவ 29, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
கோவை-கோவை மாவட்டம், நவக்கரை அருகே வனப் பகுதியில், 'ஏ, பி' என தனித்தனியாக இருக்கும் ரயில் பாதைகளை ஒரே இடத்தில் அமைப்பதால், யானைகள் பலியாகும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண முடியும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.கோவை, மதுக்கரை அருகே ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற, 25 வயது பெண் யானை, 6 வயது குட்டி யானை, 18 வயது மக்னா யானை ஆகியவை, மங்களூரு - சென்னை ரயில் மோதி

கோவை-கோவை மாவட்டம், நவக்கரை அருகே வனப் பகுதியில், 'ஏ, பி' என தனித்தனியாக இருக்கும் ரயில் பாதைகளை ஒரே இடத்தில் அமைப்பதால், யானைகள் பலியாகும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண முடியும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.latest tamil news


கோவை, மதுக்கரை அருகே ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற, 25 வயது பெண் யானை, 6 வயது குட்டி யானை, 18 வயது மக்னா யானை ஆகியவை, மங்களூரு - சென்னை ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தன.உயிரிழந்த 25 வயது பெண் யானையின் வயிற்றில் ஒரு மாத கரு இருந்தது, பிரேத பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.இச்சம்பவம் மாநிலம் முழுதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.போத்தனுார் - பாலக்காடு ரயில் பாதையில், 31.7 கி.மீ., தடம், அடர்ந்த வனப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதையில் இரவு நேரத்தில் 35 முதல் 40 ரயில்களும், பகல் நேரத்தில் 75 முதல் 80 ரயில்களும் பயணிக்கின்றன.

கோவை அருகே எட்டிமடை ஸ்டேஷனை கடந்ததும், ரயில் வழித்தடம் இரண்டாக பிரிகிறது.தடம் 'ஏ' 8.5 கி.மீ., வனப்பகுதி வழியாக சென்று, கேரளாவின் கஞ்சிக்கோடு பகுதியை அடைகிறது. தடம் 'பி' அடர்ந்த வனப்பகுதி வழியாக எட்டிமடை, வாளையார், கஞ்சிக்கோட்டை கடந்து செல்கிறது. இதன் நீளம் 16.5 கி.மீட்டர்.தடம் 'பி' வனப்பகுதி வழியாக வளைந்து நெளிந்து செல்வதால், பெரும்பாலான விபத்துகள் இந்த தடத்தில் தான் நடக்கின்றன.

ஆபத்து குறைவாக இருந்தாலும், தடம் 'ஏ'விலும் விபத்துகள் நடந்துள்ளன. தற்போதைய சம்பவம் தடம் 'ஏ'வில் நடந்துள்ளது.சேலம் ரயில்வே கோட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர் ஜெயராஜ் கூறியதாவது:யானைகள் பலியாவதை தடுக்க ஒரே தீர்வு, 'ஏ, பி' ரயில் பாதைகளை ஒரே இடத்தில் அமைப்பது தான். 'பி' வழித்தடத்தில் விபத்துக்கான வாய்ப்புகள் அதிகம்.

எனவே, அந்த தடத்தை, 'ஏ' தடம் இருக்கும் இடத்தில் புதிதாக அமைத்து விடலாம். இரு பாதைகளையும் ஒரே இடத்தில் அமைத்த பின், ரயில் பாதைக்குள் யானைகள் செல்ல முடியாதபடி பாதுகாப்பு வேலி அமைத்து விடலாம்.யானைகள் வனப்பகுதிக்குள் தங்கு தடையின்றி சென்று வர வசதியாக, ஆங்காங்கே சுரங்கப் பாதைகள் அமைக்க வேண்டும். எதிர்காலத்தில் இது போன்று நடக்காமல் தடுக்க, இரு மாநில அரசுகள், ரயில்வே மற்றும் வனத்துறை இணைந்து, இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news'சிப்' எடுத்தது யார்?

இதற்கிடையில், விபத்து தொடர்பாக ரயில் இன்ஜின் டிரைவர் மற்றும் உதவியாளரை தமிழக வனத் துறையினர் பிடித்து விசாரித்தனர்.ரயில் வேகம் குறித்து எழுத்துபூர்வமாக தகவல் பெற, தமிழக வனத் துறையினர் ஐந்து பேர் நேற்று முன்தினம் கேரளா, பாலக்காடு சென்றனர்.அங்கு, தமிழக வனத் துறையினரை சிறைபிடித்த ரயில்வே அதிகாரிகள், தங்கள் ஊழியர்களை விடுவிக்கவில்லை என்றால், இன்ஜின் 'சிப்'பை அத்துமீறி எடுத்ததாக உங்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும் என தெரிவித்தனர். இதனால், கோவையில் பதற்றம் ஏற்பட்டு, சாலை மறியல் போராட்டங்கள் நடந்தன. ரயில்வே அதிகாரிகள் மற்றும் தமிழக வனத்துறை அதிகாரிகள் பேச்சுக்கு பின், தமிழக வனத் துறையினர் விடுவிக்கப்பட்டனர்.

விபத்தை ஏற்படுத்திய கோழிக்கோடைச் சேர்ந்த இன்ஜின் டிரைவர் சுபயர், 54, உதவியாளர் அகில், 31 மீது தமிழக வனத் துறையினர், வன பாதுகாப்பு சட்டத்தில் வழக்கு பதிந்து இருவரையும் விடுவித்தனர்.தமிழக வனத் துறையினர் கூறுகையில், 'விபத்தை ஏற்படுத்திய இன்ஜினில் இருந்து வேகத்தை கணக்கிடும் சிப்பை, வனத் துறையினர் யாரும் அத்துமீறி எடுக்கவில்லை.'இன்ஜினை இயக்கிய நபரே தான் சிப்பை எடுத்துக் கொடுத்தார்; அதற்கான 'வீடியோ' ஆதாரமும் உள்ளது. குறிப்பிட்ட பகுதியில் ரயில் எத்தனை கி.மீ., வேகத்தில் சென்றது என்பதை கண்டுபிடித்த பின், அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mohan - chennai,இந்தியா
29-நவ-202113:35:16 IST Report Abuse
mohan ஆப்ரிக்காவில் அமைத்துள்ளது போல், ஆங்காங்கே. யானை கீழே செல்லும் அளவிற்கு பாலம் அமைத்து விடுங்கள்...இரு தடங்களை, மாற்றி அமைப்பது என்பதை காட்டிலும், பாலம் அமைப்பது சிறந்தது...யானைகள் அந்த பாலம் வழி.செல்வது போல் வழி அமைக்க வேண்டும்...
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
29-நவ-202113:12:51 IST Report Abuse
சீனி யானைகள் நுன்னறிவுமிக்க ஜீவராசிகள். அவை போகும் வழித்தடங்களில் நாம் வளர்ச்சி ஏற்படுத்திக்கொண்டோம். முக்கிய காட்டுபகுதி யானைத்தடங்களில், ரயில்வே பாலங்கள் அமைத்து, கீழே யானைகளுக்கு வழிவிடவேண்டும், என்பது மக்களின் தாழ்வான வேண்டுகோள். ஒரு யானை இருந்தால் 50சதுர கிமீ காடுகளை, இங்கும் அங்கும் நடந்து நமக்காக வளர்க்கும், மேலும் யானைகள் இருப்பதால், அடர்ந்த காடுகளுக்குள் மரம் வெட்டுப்வர்களும் செல்ல மாட்டார்கள். யானைகள் தான், வனங்களின் உண்மையான பாதுகாவலன்.
Rate this:
Cancel
Senthil Arun Kumar D - Coimbatore,இந்தியா
29-நவ-202112:59:58 IST Report Abuse
Senthil Arun Kumar D மூன்று யானைகள் இறந்தது எங்களை மிகவும் வேதனைப் படுத்தியது. இந்த நவீன உலகில், வழியில் உள்ள பொருட்களையும் அதன் தூரத்தையும் அடையாளம் காண லேசர் அல்லது வேறு எந்த முறையைப் பயன்படுத்தியும் பல தொழில்நுட்பங்கள் உள்ளன. ரயில் இன்ஜின் வேகத்தைக் கட்டுப்படுத்த அல்லது லோகோ பைலட்டுகளை முன்கூட்டியே எச்சரிக்க இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம். பொருத்தமான சாதனத்தை வடிவமைத்து அந்தந்த இன்ஜின்களுடன் பொருத்தலாம். அல்லது அது அளவில் பெரியதாக இருந்தாலும் பரவாயில்லை, தனிப் போகியாககூட பொருத்தி மற்ற பயணிகள் பெட்டிகளுடன் சேர்த்து இழுத்துச் செல்லலாம். யானைகளின் உயிரை காப்பாற்ற நம் ரயில்வே நிர்வாகம் இதை கண்டிப்பாக செய்யவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X