பொது செய்தி

தமிழ்நாடு

'தடுப்பூசி போட்டவர்களுக்கே மதுபானம் விற்பனை: அமைச்சர் சுப்பிரமணியன்

Updated : நவ 29, 2021 | Added : நவ 29, 2021 | கருத்துகள் (39)
Share
Advertisement
சென்னை--''தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டும் தான், டாஸ்மாக்கில் மது விற்பனை செய்யப்படும்,'' என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.சென்னை அடையாறில் நடந்த மெகா தடுப்பூசி முகாம் மற்றும் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் கூறியதாவது:தமிழகத்தில் 78 லட்சம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி போட வேண்டிய நிலையில், 12வது மெகா

சென்னை--''தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டும் தான், டாஸ்மாக்கில் மது விற்பனை செய்யப்படும்,'' என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.



latest tamil news


சென்னை அடையாறில் நடந்த மெகா தடுப்பூசி முகாம் மற்றும் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் கூறியதாவது:தமிழகத்தில் 78 லட்சம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி போட வேண்டிய நிலையில், 12வது மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது. இதுவரை 77.33 சதவீதம் பேர் முதல் தவணை; 42 சதவீதம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியை போட்டுள்ளனர். பொதுவெளியில் கலந்து கொள்வோர் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்ற அறிவிப்பு உள்ளது. இது, மதுபான கூடங்களுக்கும், டாஸ்மாக் கடைகளுக்கும் பொருந்தும்.


latest tamil news


எனவே, டாஸ்மாக் கடைகளுக்கு மதுபானங்கள் வாங்க வருவோர் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். அவர்களுக்கு மட்டுமே மது வகைகள் விற்கப்படும். இதை கண்காணிக்கும்படி, மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு சுப்பிரமணியன் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohan - COIMBATORE,இந்தியா
29-நவ-202117:09:33 IST Report Abuse
Mohan இந்த ஆளு வேற அப்பப்போ வந்து காமெடி பண்ணிட்டு இருக்காரு..உங்க சட்டம் எல்லாம் ஓடுற தண்ணில தான் எழுதனும்.
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
29-நவ-202116:46:00 IST Report Abuse
M  Ramachandran தடுப்பூசி போட்டவர்களுக்கெ லஞ்சம்.
Rate this:
Cancel
A.Gomathinayagam - chennai,இந்தியா
29-நவ-202116:35:25 IST Report Abuse
A.Gomathinayagam இலவ சங்கள் வேண்டுமெனில் தடுப்பூசி அவசியம் என்றால் அனைவரும் போட்டுக்கொள்வார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X