பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் பருவமழைக்கு 105 பேர் பலி

Updated : நவ 29, 2021 | Added : நவ 29, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை-''வடகிழக்கு பருவமழைக்கு, தமிழகம் முழுதும் இதுவரை 105 பேர் பலியாகி உள்ளனர்,'' என, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறினார்.76 சதவீதம் கூடுதல் சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில், நேற்று ஆய்வு மேற்கொண்ட அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில் அக்., 25 முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில்,

சென்னை-''வடகிழக்கு பருவமழைக்கு, தமிழகம் முழுதும் இதுவரை 105 பேர் பலியாகி உள்ளனர்,'' என, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறினார்.



latest tamil news




76 சதவீதம் கூடுதல்



சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில், நேற்று ஆய்வு மேற்கொண்ட அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில் அக்., 25 முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, திருவாரூர், சென்னை, ராமநாதபுரம், நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிக மழை பெய்துஉள்ளது. வடகிழக்கு பருவமழை, இம்மாதம் 27ம் தேதி வரை 61.5 செ.மீ., பெய்துள்ளது. இது இயல்பைவிட 76 சதவீதம் கூடுதல்.

மாநிலம் முழுதும் 188 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஏழு நிவாரண முகாம்இங்கு, 15 ஆயிரத்து 16 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். சென்னையில் உள்ள ஏழு நிவாரண முகாம்களில் 1,048 பேர் தங்க வைக்கப்பட்டுஉள்ளனர்.வடகிழக்கு பருவ மழைக்கு இதுவரை 105 பேர் பலியாகி உள்ளனர். அதுமட்டுமின்றி, 2,943 கால்நடைகளும் இறந்து உள்ளன. மொத்தம் 1,814 குடிசைகள், 310 வீடுகளும் சேதம் அடைந்துஉள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news


அப்போது, வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மை செயலர் குமார் ஜெயந்த், பேரிடர் மேலாண்மை இயக்குனர் சுப்பையன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.ரூ.15.9 கோடி நிவாரணம்மழையால் உயிரிழந்தோரில் 59 பேரின் குடும்பங்களுக்கு, 2.36 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. காயம் அடைந்த 13 பேருக்கு, 55 ஆயிரத்து 900 ரூபாய் வழங்கப்பட்டுஉள்ளது.இதேபோல, 2,943 கால்நடைகள் இறப்பால் பாதிக்கப்பட்டோருக்கு, 3.43 கோடி ரூபாய்; குடிசைகளை இழந்த 24 ஆயிரத்து 810 பேருக்கு, 10.1 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை, 15.9 கோடி ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கௌடில்யன் - Chennai ,இந்தியா
29-நவ-202106:19:36 IST Report Abuse
கௌடில்யன் ஆனைப்பசிக்கு சோளப்பொரி கொடுத்த மாதிரி கணக்கு காமிக்கிறாங்களே ..
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
29-நவ-202105:11:30 IST Report Abuse
Kasimani Baskaran 105 பேரில் சாப்பாடுக்கு முண்டியடித்து செத்தவர்கள் அடக்கமா இல்லையா என்பதை அரசு தெரியப்படுத்த வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X