சிறுமி பலாத்கார வழக்கில் ஒரே நாளில் கோர்ட் அதிரடி தீர்ப்பு

Updated : நவ 29, 2021 | Added : நவ 29, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
அராரியா-பீஹாரில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கை ஒரே நாளில் விசாரித்து, வாலிபருக்கு ஆயுள் முழுதும் சிறை தண்டனை விதித்து 'போக்சோ' நீதிமன்றம் சாதனை படைத்துள்ளது.பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலனா ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.குற்றசாட்டுஅராரியா மாவட்டத்தில் திலிப் குமார் யாதவ், 30, என்பவர் ஜூலை 22ல் அருகில் வசிக்கும், 8

அராரியா-பீஹாரில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கை ஒரே நாளில் விசாரித்து, வாலிபருக்கு ஆயுள் முழுதும் சிறை தண்டனை விதித்து 'போக்சோ' நீதிமன்றம் சாதனை படைத்துள்ளது.



latest tamil news



பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலனா ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.குற்றசாட்டுஅராரியா மாவட்டத்தில் திலிப் குமார் யாதவ், 30, என்பவர் ஜூலை 22ல் அருகில் வசிக்கும், 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்.வீட்டில் இருந்த சிறுமியின், 9 வயது சகோதரன் இதனை தடுத்துள்ளார். இதனால் சிறுவன் தாக்கப்பட்டார். போலீசார் 'போக்சோ' உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து திலிப் குமாரை கைது செய்தனர்.


latest tamil news


அராரியா போக்சோ நீதிமன்றத்தில் தாக்கலான குற்றப்பத்திரிகை மீது ஆகஸ்ட் 8ல் விசாரணை நடந்தது. அப்போது, பாதிக்கப்பட்ட சிறுமி, சகோதரன், பெற்றோர் உள்ளிட்டோர் சாட்சியம் அளித்தனர். மருத்துவ பரிசோதனை அறிக்கை ஆய்வு செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டவர் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பிலான வழக்கறிஞர்களின் வாதம், எதிர்வாதம் உடன டியாக நடத்தி முடிக்கப் பட்டது. அவற்றின் வாயிலாக திலிப் குமார் மீதான குற்றசாட்டு உறுதியானது.


அபராதம்

இதையடுத்து அவருக்கு ஆயுள் காலம் முழுதும் சிறை தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி சஷிகாந்த் ராய் தீர்ப்பளித்தார்.சிறுமிக்கு அரசு தரப்பில் ௭ லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவில் கூறப்பட்டது.''நாட்டில் இதுவரை எந்த ஒரு குற்ற வழக்கிலும் ஒரே நாளில் விசாரித்து தீர்ப்பு வழங்கப்பட்டதில்லை. ''சிறுமி மீதான பாலியல் வழக்கில் அராரியா நீதிமன்றம் ஒரே நாளில் விசாரித்து தீர்ப்பு அளித்து சாதனை படைத்துள்ளது,'' என அரசு வழக்கறிஞர் ஷியாம்லால் யாதவ் கூறி உள்ளார்.வழக்கு விசாரணை ஒரே நாளில் நடத்தி தண்டனை அறிவிக்கப்பட்டாலும், அதற்கான உத்தரவு நீதிமன்றத்தில் இருந்து 26ம் தேதி வெளியானது.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
29-நவ-202117:25:29 IST Report Abuse
Sampath Kumar சபாஷ் பாராட்டுக்கள்
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
29-நவ-202117:17:56 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் அவன் பாஜாக்கா பிரமுகரா இருந்திருந்தா ரெண்டே நாளில் புள்ளையை எரிச்சி கதையை முடிச்சிருப்பானுவோ .. பக்தால்ஸ், சரி தானே ?
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
29-நவ-202116:05:06 IST Report Abuse
DVRR இதைத்தானே பல வருடங்களாக நான் சொல்கின்றேன் . குற்றம் - கைது - விசாரணை 1 நாள் - உடனே தீர்ப்பு - உடனே நிறைவேற்றம். கற்பழித்தவனே கவலைப்படாதே உன்னிடம் பணமிருந்தால் இப்படி செலவு செய் . bokso-seshans-Highcourt-சுப்ரீ கோர்ட். ஏன்னா இந்த போக்ஸோ நீதிபதி வெறும் 5ஆவது வரை படித்தவர். இப்போ செஷன்ஸ் கோர்ட்டுக்கு செல்லும் இது அந்த நீதிபதி 10ஆவது படித்தவர் பிறகு ஹை கோர்ட்டுக்கு செல்லும் அந்த நீதிபதி பி.ஏ மட்டும் படித்தவர் பிறகு உச்ச நீதிமன்றத்துக்கு போகும் அவர் தான் பி.ஏ. பி.எல் சட்டம் படித்தவர் அவரது தீர்ப்பு தான் கடைசி தீர்ப்பு இது நடந்து முடிக்க 20 வருடங்கள் ஆகும். இது தான் நடக்கும் பணமிருந்தால்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X