குடிசை மாற்று குடியிருப்பில் குப்பையுடன் வாழ்க்கை! தொற்று நோய்களால் தவிப்பு

Updated : நவ 29, 2021 | Added : நவ 29, 2021 | கருத்துகள் (1)
Advertisement
சரவணம்பட்டி:'அடுக்குமாடி குடியிருப்புக்கு போகிறோம்; வாழ்க்கைத்தரம் உயர்ந்து விடும்' என்ற கனவுடன்தான், குழந்தைகளுடன் கீரணத்தம் குடிசை மாற்று வீடுகளுக்கு வந்தனர் ஏழை மக்கள். ஆனால் இங்கு மாதக்கணக்கில் குப்பை நடுவில்தான் குடியிருக்க வேண்டும் என்பது, அவர்களுக்கு தெரியாமல் போனது பரிதாபம்தான்.கோவை நகரில் உள்ள பல இடங்களில் அடிப்படை வசதிகள் இல்லாமல், ஆக்கிரமிப்பு
 குடிசை மாற்று குடியிருப்பில்  குப்பையுடன் வாழ்க்கை! தொற்று நோய்களால் தவிப்பு

சரவணம்பட்டி:'அடுக்குமாடி குடியிருப்புக்கு போகிறோம்; வாழ்க்கைத்தரம் உயர்ந்து விடும்' என்ற கனவுடன்தான், குழந்தைகளுடன் கீரணத்தம் குடிசை மாற்று வீடுகளுக்கு வந்தனர் ஏழை மக்கள். ஆனால் இங்கு மாதக்கணக்கில் குப்பை நடுவில்தான் குடியிருக்க வேண்டும் என்பது, அவர்களுக்கு தெரியாமல் போனது பரிதாபம்தான்.

கோவை நகரில் உள்ள பல இடங்களில் அடிப்படை வசதிகள் இல்லாமல், ஆக்கிரமிப்பு பகுதியில் குடியிருந்த மக்களுக்கு, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் 1,232 வீடுகளை கட்டிக் கொடுத்தது. இதில், 100 வீடுகளை தவிர பிற வீடுகளில் மக்கள் குடியிருந்து வருகின்றனர்.இங்கு குடிநீர், மின்சார வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. குப்பை அள்ளுவதை மட்டும் விட்டு விட்டனர். குடிசைப்பகுதி, ஆக்கிரமிப்பு பகுதியிலிருந்து வந்த பொதுமக்கள், இப்போது குப்பைக்கு நடுவே வாழ்ந்து வருகின்றனர். மலைபோல் குப்பை தேங்கியதால், பல்வேறு நோய்களுக்கு ஆளாகியுள்ளனர்.வீடுகளை சுற்றிலும், பல இடங்களில் குப்பை குவிந்து கிடக்கிறது. கீரணத்தம் ஊராட்சிக்கு இந்த வீடுகளில் உள்ள மக்கள், வரி செலுத்த தொடங்கியுள்ளனர்.

வரி வசூல் செய்தாலே பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால் ஒரு துளி குப்பை கூட இங்கிருந்து எடுக்கப்படவில்லை.முடங்கிய சமுதாய கூடம் பொதுமக்கள் வசதிக்காக இங்கு சமுதாய கூடம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் பயன்பாடின்றி, பூட்டி வைத்துள்ளனர். இதற்கு அருகிலும் குப்பை மலைபோல் குவிந்துள்ளது.

கீரணத்தம் ஊராட்சி தலைவர் பழனிசாமி கூறுகையில், " கீரணத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியாக இருந்தாலும், முறைப்படி தமிழ்நாடு குடிசைமாற்று வாரியமே பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இன்னும் ஊராட்சியிடம் ஒப்படைக்கவில்லை. இப்பகுதி மக்கள், மின்சார இணைப்பு பெறவே ஊராட்சியில் வரி செலுத்தி ரசீது பெற்று வருகின்றனர்," என்றார்.

கலெக்டரும் கவனிக்கவில்லை
இந்த குடியிருப்பு பகுதி மக்களின் பிரதிநிதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள இளங்கோவன் கூறுகையில், "நகரில் உள்ள எட்டு இடங்களில் இருந்து, இங்கு வந்து குடியேறியுள்ளோம். அடிப்படை வசதிகள் மிக மோசமாக உள்ளன. குவியும் குப்பையால் இங்குள்ள மக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 6 இடங்களில் மலைபோல் தேங்கியுள்ள குப்பையை அகற்றக்கோரி, மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்து விட்டோம்.
மாநகராட்சி, ஊராட்சி, குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் என பலரையும், பலமுறை சந்தித்து முறையிட்டும் பயனில்லை. தற்போது மழைக்காலம் என்பதால் தண்ணீர் தேங்கி, கொசு உற்பத்தி அதிகமாகியுள்ளது.டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு, இங்குள்ள இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். குப்பையை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
29-நவ-202105:39:32 IST Report Abuse
சூரியா அரசு, வீடு மட்டும் தான் கட்டித்தரும். அதையும், அந்த வீட்டின் சுற்றுப்புறத்தையும், வாழ்பவர்கள்தான் சுத்தமாக வைத்து இருக்க வேண்டும். சேரியில் வாழ்ந்தவர்களை, நல்ல குடியிருப்பில் அமர்த்தினால், அம் மக்கள், புதிய குடியுருப்பை, திரும்பவும் சேரி போல ஆக்கக் கூடாது. ஆனால் நடப்பது வேறு. காரணம், ஓசியில் எது கிடைத்தாலும், அதன் மதிப்பை யாரும் உணராததுதான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X