பொது செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: ஆசிரியர்களுக்கு சுதந்திரம் அளியுங்கள்!

Updated : நவ 29, 2021 | Added : நவ 29, 2021 | கருத்துகள் (25)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:வழக்கறிஞர் அ.குணசேகரன், புவனகிரி, கடலுார் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:இன்று, நம் சமூகம் ஒழுக்கமற்றதாக மாறிவிட்டது. அதற்கு முக்கிய காரணம், நம் கல்வி முறை சரியில்லாமல் இருப்பதும், ஒழுக்கம் இல்லாத தலைவர்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவமும் தான்!தவறான நபர்கள்


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:வழக்கறிஞர் அ.குணசேகரன், புவனகிரி, கடலுார் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

இன்று, நம் சமூகம் ஒழுக்கமற்றதாக மாறிவிட்டது. அதற்கு முக்கிய காரணம், நம் கல்வி முறை சரியில்லாமல் இருப்பதும், ஒழுக்கம் இல்லாத தலைவர்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவமும் தான்!தவறான நபர்கள் உயர்ந்த பதவியில், பெரும் செல்வாக்கோடு வலம் வருவது, மக்களிடையே எப்படி வாழ்ந்தால் என்ன என்ற எண்ணத்தை உருவாக்கி விட்டது.latest tamil news


குற்றவாளிகள், மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்; இது, குற்றங்கள் பெருகுவதற்கு காரணமாக மாறி விட்டது.தவறு செய்யும் மாணவர்களை கண்டிக்கக் கூடாது என, ஆசிரியர்கள் கைகள் எப்போது கட்டப்பட்டதோ, அப்போதே சமூகம் தீய வழியில் நடக்க துவங்கி விட்டது.மாணவர் மது குடிப்பதும், போதையோடு பள்ளிக்கு வருவதும், மாணவியர் மீது பாலியல் தாக்குதல்கள் நடத்துவதும் ஆங்காங்கே நடக்கிறது.

ஆசிரியரின் கண்டிப்பால் ஒழுக்கமான பிள்ளைகள் உருவான காலம் மலையேறி விட்டது. இன்று மாணவர்களிடம், ஒழுக்கம் என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாக உள்ளது.அதிலும், இந்த கொரோனா காலத்தில் இரண்டு ஆண்டுகளாக வகுப்பறை கல்வி இல்லாததால், மாணவர்களின் மனநிலை பாதை தவறி விட்டது.ஏராளமான குழந்தைகள், மொபைல் போன் எனும் மாய வலையில் சிக்கி விட்டனர். ஏழை, எளிய மாணவர்கள் பலர், சூழல் காரணமாக குழந்தை தொழிலாளர்களாக மாறி விட்டனர்.இளம் வயதில் சம்பாதிக்கும்போது, தீயப்பழக்கங்களுக்கு ஆளாகின்றனர்.

மேலும், இன்றைய சினிமாவில் பொறுக்கி, ரவுடிகள் தான், கதாநாயகனாக காட்டப்படுகின்றனர். அதை பார்த்து, இளைஞர்களும் தறுதலைகளாக திரிகின்றனர்.தற்போது, காவலர் பூமிநாதன் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட இரண்டு சிறுவர்களில் ஒருவர் ஒன்பதாம் வகுப்பு; மற்றொருவர் ஐந்தாம் வகுப்பு படிக்கின்றனராம். இவர்களை ஆடு திருட அழைத்து சென்ற முக்கிய குற்றவாளியின் வயதோ, 19 என்பதும், அவன் மது அருந்தியிருந்தான் என்பதும் மேலும் அதிர்ச்சி அளிக்கிறது


latest tamil news


.இதன் மூலம், எப்படிப்பட்ட இளைய சமூகத்தை நாம் உருவாக்கி வருகிறோம் என்பதை அறிய முடிகிறது.இந்த மூன்று குற்றவாளிகள் உருவாக முக்கிய காரணமே, ஒழுக்கமின்மை தான்; அதை கற்று கொடுக்க இயலாதது கல்வி துறை தான்!ஒழுக்கமான மாணவர்களை உருவாக்க, ஆசிரியர்களுக்கு சுதந்திரம் அளிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.ll

Advertisement
வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rasaa - atlanta,யூ.எஸ்.ஏ
29-நவ-202121:32:56 IST Report Abuse
rasaa இட ஒதுக்கீடு, இட ஒதுக்கீடு என்று தகுதியில்லாதவர்களை இந்த உயரிய இடத்தில் அமர வைத்ததின் விளைவு.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
29-நவ-202120:03:02 IST Report Abuse
sankaseshan டிராவிடனுங்க ஆட்சியில் ஒழுக்கம் கெட்டசமுதாயம் உருவாகியுள்ளது சீர்செய்ய மிகுந்த காலமாகும்
Rate this:
Cancel
Bala Murugan - Tuticorin(Thoothukudi),இந்தியா
29-நவ-202117:22:27 IST Report Abuse
Bala Murugan மாணவர்களை கண்டிப்பதை விட முதலில் ஆசிரியர்களை ஒழுக்கமாக இருக்க பழக்குங்கள். ஒரு மாணவியை ஆசிரியரிடம் படிக்க அனுப்ப முடியவில்லை. படிக்கும் பிள்ளைகளின் கையில் கைபேசியை கொடுத்டுவிடுகிறீர்கள். அப்புறம் ஆசிரியரிடம் மாணவி பாடத்தில் சந்தேகம் என்று பேச ஆரம்பிப்பது ஆசிரியருக்கு சுதந்திரம் தந்து பாடங்களை தவிர காம விஷயங்களை மாணவிக்கு குறுஞ்செய்தியாக அனுப்புவது மற்றும் அலைபேசியில் அழைத்து காமப்பேச்சுகளை பேச வைக்கவும் வித்திடுகிறது. ஆசிரியர் மாணவியை கொஞ்சுவதாக நினைத்து நீ அழகாக இருக்க இந்த கன்னத்தை கில்லணும்னு இருக்கு முத்தம் கொடுக்கிறேன் இப்படியெல்லாம் ஆசிரியர் பேசுகிறார். மாணவிகளை ஆசிரியைகள் தான் பார்த்துக்கொள்ள வேண்டும் மாணவர்களை ஆசிரியர்கள் தான் பார்த்துக்கொள்ள வேண்டும் அதேபோல மாணவர்களுக்கு தனி பள்ளிக்கூடம் மாணவிகளுக்கு தனி பள்ளிக்கூடம் என்று தான் இருக்க வேண்டும். இணையவழிக்கல்வி என்று எந்த கவனிப்பும் இல்லாமல் ஆசிரியர்கள் துண்டுடன் வருவது அல்லது நிர்வாணமாக வருவது என்று பேசவே கூச்சமாக இருக்கு. ஒரு ஆசிரியரை நம்பி நான்கு வயது முதல் இறுதியாண்டு பள்ளி அல்லது கல்லூரி படிக்கும் மாணவி வரை தனியாக விட முடிவதில்லை. பெற்றோர் கண்ணும் கருத்துமாக கூடவே இருந்து பார்த்துக்கொள்ள வேண்டும். ஆசிரியர் மட்டும் தப்பு செய்வதில்லை பள்ளியில் உள்ள தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியை மற்றும் இன்னும் நிறைய உயர் பதவியில் இருப்பவர்களும் குற்றத்திற்கு துணை போகிறார்கள். காம வெறிநாய்கள் - காமப்பேய்கள்.
Rate this:
வந்தியதேவ வல்லவரையன் - பல்லவ நாடு,இந்தியா
29-நவ-202118:20:08 IST Report Abuse
வந்தியதேவ வல்லவரையன்தலை சிறந்த பள்ளி வேண்டும்.. நுனி நாக்கில் ஆங்கிலத்தில் பேச வேண்டும்... டாக்டராக வேண்டும், இஞ்சினியராக வேண்டும், விஞ்ஞானியாக வேண்டும் என்று அலைஞ்சு, அலைஞ்சு ஆங்கில வழிக் கல்வி கற்பிக்கும், தன் ஊரில் உள்ள பள்ளியை விட்டுவிட்டு... உள்ளூர்ல ஓணான் புடிக்காதவன்... அசலூர்ல போய் ஆனை புடிச்ச கதையா.... ஊர்பேர் தெரியாத பள்ளியில் சேர்த்தால், அந்த பள்ளியின் கதி இந்த கதியாகத்தான் இருக்கும். எடுத்துக்காட்டாய்... நீங்கள் பிறந்த ஊரான தூத்துக்குடியில், உங்கள் ஏரியாவில், அதாவது உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள நீங்களோ அல்லது உங்க பெற்றோரோ படித்த பள்ளியில்... உங்கள் குழந்தைகளை படிக்க வைத்தால்... அந்த தலைமை ஆசிரியருக்கும், அங்கு பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தாங்கள் யார், எந்த குடும்பத்தைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியும். சில்மிஷம் பண்ணலாம் என்று நினைத்தால்கூட.. உங்க குடும்பத்தைத் தெரிந்தால், அப்படியே அமைதியாகி விடுவான்... நீங்கள்தான்... உங்களின் பேராசையின் காரணமாக உங்க வீட்டிலிருந்து... உங்களை அறியாத, உங்கள் ஊர் பெயரைக்கூட அறியாத ஊரில் உள்ள தலைசிறந்த பள்ளியில் அதிக பீஸ் கட்டி படிச்ச வச்சா... “எண்ணை நக்குற நாய்க்கு, செக்கு...ன்னு தெரியுமா? சிவலிங்கம்...னு தெரியுமா?”ங்ற கதையா... அந்த ஆசிரியர்களுக்கு உங்களைப் பற்றியும், உங்க பாரம்பரித்தைப் பற்றியும், குடும்பத்தையும் பற்றி தெரியாததால் தப்பு செய்கிறான்... ஆக... தவறு செய்வது ஆசிரியர்கள் என்பதில் எனக்கு மாறுபாடில்லை... ஆனால்... அதை ஆசிரியர் உங்ளையோ, உங்கள் குடும்பத்தையோ, உங்கள் பாரம்பரித்தைப் பற்றியோ தெரிந்திருந்தால்... தப்பு செய்வானா...? ஆக... முதல் தப்பு நம்ம மேலேதானே...? இப்பத்து ஆசிரியர்கள் எல்லாம் சின்ன சின்னப் பசங்க...வாத்தியார் வேலைக்கு வந்துட்டு... “ஆசிரியர் பணி... அறப் பணி, சேவைப் பணி” என்பதை மறந்து... பணம் கொள்ளை அடிக்கும் தொழிலாக எண்ணி, வாத்தியார் வேலைக்கு வருவதால்.... அவன் சும்மா இருப்பனா...? அத்துடன், நாற்பது, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு “ஆசிரியர்” என்பவன்.. “குரு”வாய்... “கடவுளாய்” இருந்தான்... இப்ப இருக்குற சின்னப்பசங்க வாத்திகளுக்கு கற்றுக் கொடுக்கும் ஆற்றலும் இல்லை, அறிவும் இல்லை, ஒழுக்கமும் இல்லை என்பது ஊரறிந்த உண்மை... நான் பள்ளி படிக்கும்போது.... ஒழுக்கச் சீலர்களாகவும், கடவுளர்களாகவும், சரஸ்வதிகளாகவும், பிரம்மாக்களாகவும் இருந்தார்கள் ஆசிரியர், ஆசிரியைகள். அதனால்தான், எனக்கு ஒண்ணாம் வகுப்பில் பாடம் சொல்லி கொடுத்த டீச்சரை, இன்று நடுவழியில் கண்டாலும் பயபக்தியுடன்... இறங்கி... வணக்கம் சொல்லி... அவர்கள் வயது மூப்பின் காரணமாக, மறந்திருந்தாலும் என் பெயர், ஆண்டு இவற்றை சொல்லி அறிமுகப்படுத்தி, அவர்கள் ஆசீர்வாதத்தை பெறுகிறேன்.. ஆனால், இந்த மரியாதை இன்றைய ஆசிரியர் என்று சொல்லி கொள்ளும் கழிசடைகளுக்கு கிடைக்காது. வேண்டுமென்றால் பணம் சம்பாதித்து அதனுடன் வாழலாம் அவ்வளவே...?...
Rate this:
Aswini Kumar - Coimbatore,இந்தியா
29-நவ-202121:29:24 IST Report Abuse
Aswini Kumarமிகவும் அருமை...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X