ஐரோப்பாவிலும் 'ஒமைக்ரான்': உலக நாடுகள் அச்சம்

Updated : நவ 29, 2021 | Added : நவ 29, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
லண்டன்-ஐரோப்பிய நாடுகளான பிரிட்டன், ஜெர்மனி, இத்தாலி என, மேலும் பல நாடுகளுக்கு, ஒமைக்ரான் எனப்படும் புதிய உருமாறிய கொரோனா வைரஸ் பரவத் துவங்கியுள்ளது. இதனால், உலக நாடுகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளன.கொரோனா வைரஸ் பரவல் துவங்கி இரண்டாண்டுகள் நிறைவடைய உள்ளது. ஏற்கனவே உலகெங்கும் 50 லட்சம் பேர் கொரோனா வைரசுக்கு உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் பல வகையில் உருமாறியுள்ள புதிய

லண்டன்-ஐரோப்பிய நாடுகளான பிரிட்டன், ஜெர்மனி, இத்தாலி என, மேலும் பல நாடுகளுக்கு, ஒமைக்ரான் எனப்படும் புதிய உருமாறிய கொரோனா வைரஸ் பரவத் துவங்கியுள்ளது. இதனால், உலக நாடுகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளன.latest tamil newsகொரோனா வைரஸ் பரவல் துவங்கி இரண்டாண்டுகள் நிறைவடைய உள்ளது. ஏற்கனவே உலகெங்கும் 50 லட்சம் பேர் கொரோனா வைரசுக்கு உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் பல வகையில் உருமாறியுள்ள புதிய ஒமைக்ரான் என்ற கொரோனா வைரஸ் பரவல் தென்படத் துவங்கியுள்ளது. முழு பரிசோதனைதென் ஆப்ரிக்காவில் முதலில் தென்பட்ட இந்த வகை வைரஸ், இதுவரை இருந்த உருமாறிய வைரஸ்களை விட மிகவும் மோசமானதாக கருதப்படுகிறது. 'மிக வேகமாக பரவக் கூடியது, தடுப்பூசி போட்டவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது, எந்த அறிகுறிகளும் இல்லாதது' என, இந்த வைரஸ் குறித்து இதுவரை பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகிஉள்ளன.

ஏற்கனவே இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து தென் ஆப்ரிக்கா உட்பட குறிப்பிட்ட சில நாடுகளுக்கான பயணக் கட்டுப்பாடுகளை அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள், ஜப்பான் என பல நாடுகள் விதித்துள்ளன. அந்த நாடுகளில் இருந்து வரும் பயணியருக்கு முழு பரிசோதனை செய்யப்படுகிறது.இது ஒருபுறம் இருக்க ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு மேலும் சில நாடுகளுக்கு பரவியுள்ளது. தென் ஆப்ரிக்கா சென்று திரும்பிய இருவருக்கு புதிய வகை வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரிட்டன் தெரிவித்து உள்ளது. இதையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளை புதிதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துஉள்ளார். ஏற்கனவே தடுப்பூசி போட்டவர்களுக்கு, 'பூஸ்டர்' எனப்படும் மூன்றாவது, 'டோஸ்' தடுப்பூசி வழங்க அவர் உத்தரவிட்டு உள்ளார்.

'இந்த வைரஸ், நிச்சயம் அமெரிக்காவிலும் அது புகுந்திருக்கலாம். ஆனால் பரிசோதனைகளில் இதுவரை உறுதி செய்யப்படவில்லை' என, அமெரிக்க அரசுக்கு ஆலோசனை வழங்கும் பிரபல தொற்றுநோய் நிபுணர் டாக்டர் ஆன்டனி பாசி கூறியுள்ளார்.'இந்த வைரசின் உண்மையான தன்மை குறித்து இன்னும் ஆய்வு செய்யப்படவில்லை. அதனால் வீண் அச்சம் தேவையில்லை' என, உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. இருப்பினும், ஏற்கனவே கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளதால், பல நாடுகள் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றன. தென் ஆப்ரிக்கா உட்பட சில நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தற்போது மேலும் பல நாடுகளுக்கு விரிவுபடுத்தப் பட்டுள்ளது.


விமான சேவை ரத்து

இந்த நாடுகளில் இருந்து வரும் பயணியருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சில நாடுகள், இது போன்ற நாடுகளுக்கான விமான சேவையை ரத்து செய்துள்ளன.புதிய பாதிப்பு தென்பட்டுள்ள நாடுகளில் இத்தாலி, ஜெர்மனி, நெதர்லாந்து என, பல நாடுகள் இணைந்துள்ளன. குறிப்பாக தென் ஆப்ரிக்கா சென்று திரும்பியோருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. ஆஸ்திரேலியாவிலும் ஒமைக்ரான் பாதிப்பு ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளின்கென், தென் ஆப்ரிக்க வெளியுறவு அமைச்சர் நலேடி பாண்டருடன் தொலைபேசியில் பேசினார். அந்நாட்டுக்கு தேவையான தடுப்பூசிகள் வழங்கத் தயாராக இருப்பதாக அவர் உறுதியளித்து உள்ளார்.


பயண கட்டுப்பாடு தீர்வாகாது

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பல்கலையின் சர்வதேச சுகாதாரம் மற்றும் வளர்ச்சி துறையின் பேராசிரியர் ஆன்டனி ஜூவி கூறியுள்ளதாவது:புதிய, பி.1.1.529 எனப்படும் ஒமைக்ரான் வைரஸ் குறித்து உலக நாடுகள் கடும் பீதியில் உள்ளன. தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கான பயணக் கட்டுப்பாடுகளை பல நாடுகள் அறிவித்துள்ளன. இருப்பினும் இந்த வைரஸ் பாதிப்பு ஏற்கனவே பல நாடுகளில் தென்படத் துவங்கியுள்ளது. பயணக் கட்டுப்பாடு, வைரஸ் பரவலை ஓரளவுக்கு கட்டுப்படுத்தும். ஆனால், தடுத்து நிறுத்த முடியாது. அதனால் பயணக் கட்டுப்பாடு ஒரு தீர்வாக இருக்காது. அதற்கு பதில் முழு பரிசோதனைகள் செய்வது, தடுப்பூசி போடுவது போன்றவற்றில் உலக நாடுகள் ஈடுபட வேண்டும். பணக்கார நாடுகள் தடுப்பூசிகளை ஏழை நாடுகளுக்கு வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


latest tamil newsதென் ஆப்ரிக்கா வேதனை

தென் ஆப்பிரிக்காவின் சர்வதேச உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு துறை வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளதை சரியான நேரத்தில் கண்டுபிடித்து, உலகுக்கு எச்சரித்துள்ளோம். ஆனால் தென் ஆப்ரிக்காவில் இருந்து தான் இது பரவுவது போல, எங்கள் நாட்டுக்கு எதிராக பல நாடுகள் பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இது தேவையில்லாத நடவடிக்கை.உலக நாடுகளை எச்சரித்ததற்காக எங்களுக்கு தண்டனை வழங்குவது முறையல்ல.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இஸ்ரேல் அதிரடிஒமைக்ரான் வைரஸ் பரவலை அடுத்து, மேற்காசிய நாடான இஸ்ரேல் உஷார் அடைந்துஉள்ளது. எந்த ஒரு வெளிநாட்டிலிருந்தும் அடுத்த, 14 நாட்களுக்கு, தங்கள் நாட்டுக்குள் யாரும் வருவதற்கு இஸ்ரேல் அரசு தடை விதித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழன் - madurai,இந்தியா
29-நவ-202109:48:35 IST Report Abuse
தமிழன் நமது உடலின் எதிர்பு சக்தி இந்த ஒமைக்ரான் வைரஸை வெல்ல உதவுமா? இது சாதா கொரோனாவை விட எந்தளவிற்கு வீரியமானது?
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
29-நவ-202105:05:47 IST Report Abuse
Kasimani Baskaran ஓரளவுக்கு தடுப்பூசிக்கு இந்த வைரஸ் கட்டுப்பட்டது என்ற நம்பிக்கையில் மண் விழுந்து இப்பொழுது புதிய பீதி பல நாடுகளுக்கு உண்மையான குளிராக வந்துவிட்டது. தீவிர குளிர்காலம் வேறு வருகிறது. ஆண்டவன் விட்ட வழிதான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X