சென்னை--தமிழகத்தில் நேற்று நடந்த 12வது மெகா தடுப்பூசி முகாமில், 16.05 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

கொரோனா தொற்று பரவலை தடுக்க, அரசு மருத்துவமனைகளில் தினமும் தடுப்பூசி போடப்படுகிறது. இதுதவிர, வாரம் தோறும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.இதுவரை, 11 தடுப்பூசி முகாம்கள் நடந்துள்ளன. இவற்றில், 2.06 கோடி பேர் தடுப்பூசிகள் போட்டுள்ளனர்.இந்நிலையில், 12வது மெகா தடுப்பூசி முகாம், மாநிலம் முழுதும் 50 ஆயிரம் மையங்களில் நேற்று நடந்தது.

இவற்றில், 16 லட்சத்து 5,293 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.அவர்களில், 5 லட்சத்து 89 ஆயிரத்து 140 பேர் முதல் தவணை; 10 லட்சத்து 16 ஆயிரத்து 153 பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் போட்டுள்ளனர்.தமிழகத்தில் இதுவரை, 78.35 சதவீதம் பேர் முதல் தவணையும்; 43.86 சதவீதம் பேர் இரண்டாம் தவணையாகவும் தடுப்பூசியும் போட்டுள்ளனர்.நேற்று மெகா தடுப்பூசி முகாம் நடந்ததால், இன்று கொரோனா தடுப்பூசி பணிகள் நடைபெறாது என, மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE