பொது செய்தி

தமிழ்நாடு

பாடங்கள் குறைக்கப்படாது: அமைச்சர் மகேஷ் அறிவிப்பு

Updated : நவ 29, 2021 | Added : நவ 29, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
திருச்சி-''மழை பாதிப்பால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டாலும், பாடத்திட்டம் குறைக்கப்படாது,'' என, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் கூறினார்.திருச்சியில் நேற்று அவர் அளித்த பேட்டி:பள்ளி மாணவர்களுக்கு ஏற்கனவே பாடத் திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளதால், மழை பாதிப்பால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டாலும், பாடத் திட்டங்கள் குறைக்கப்படாது. கூடுதல்

திருச்சி-''மழை பாதிப்பால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டாலும், பாடத்திட்டம் குறைக்கப்படாது,'' என, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் கூறினார்.



latest tamil news


திருச்சியில் நேற்று அவர் அளித்த பேட்டி:பள்ளி மாணவர்களுக்கு ஏற்கனவே பாடத் திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளதால், மழை பாதிப்பால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டாலும், பாடத் திட்டங்கள் குறைக்கப்படாது. கூடுதல் வகுப்புகள் நடத்தி மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தி முடிக்கப்படும்.தனியார் பள்ளிகளுக்கு, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை அங்கீகாரம் புதுப்பிக்கப்படுவது வழக்கமான நடைமுறை. அந்த நடைமுறையே தொடரும்.இவ்வாறு, அவர் கூறினார்.


latest tamil news



திட்டியது தவறு

சில நாட்களுக்கு முன், திருவெறும்பூர் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் மகேஷ் பார்வையிட்டபோது, அப்பகுதியைச் சேர்ந்த வயதான விவசாயியை போய்யா என்று திட்டினார்.இது குறித்து, நேற்று அமைச்சர் மகேஷ் கூறுகையில், ''அந்த விவசாயி, தன் வயலை தனிப்பட்ட முறையில் பார்வையிட அழைத்தார். அதனால், அப்படி பேசி விட்டேன். அப்படி பேசி இருக்கக்கூடாது. அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
29-நவ-202122:45:56 IST Report Abuse
அப்புசாமி மாணவர்களுக்கு அடுத்தவர்களை எப்பிடி மரியாதையா பேசக் கத்துக்குடுங்க. உங்களைப் பாத்து அவிங்களும் தறுதலையா பேசாம இருக்கணும்.
Rate this:
Cancel
Mohan - COIMBATORE,இந்தியா
29-நவ-202117:22:28 IST Report Abuse
Mohan அப்பிடியே உங்க பாட திட்டத்தை படிச்சு பூரா அப்டியே விஞ்ஞானி தாம் போ.. முழுசா படிச்சாலும் ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல..இதுல இந்த பிட்டு வேற..10 ம் வகுப்பு படிக்கறவனுக்கு ஒழுக்கமா ஒரு பேப்பர் படிக்க தெரியுதா..
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
29-நவ-202114:33:31 IST Report Abuse
raja சமசீர் பாடத்தை கோரைச்சா என்ன கோரைக்காட்டி என்ன...இருக்கவே இருக்கு கட்டுமர ஆல்பாசு....பத்தாம் வகுப்பு மாணவனுக்கு தமிழை எழுத்து கூட்டி கூட படிக்க தெரியலை என்பதே உண்மை.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X