அரசியல் செய்தி

தமிழ்நாடு

சென்னை உஷ்ஷ்ஷ்: உளவுத்துறை பட்டியல், தி.மு.க., புள்ளிகள் பீதி

Updated : நவ 29, 2021 | Added : நவ 29, 2021 | கருத்துகள் (54)
Share
Advertisement
உளவுத்துறை பட்டியல் தி.மு.க., புள்ளிகள் பீதிசென்னை: தாமரை கட்சியின் தேசிய தலைவர் நட்டா, தமிழகத்தின் மீது மிகுந்த பாசம் உடையவர். டில்லியில் இம்மாத துவக்கத்தில், பிரதமர் மோடி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்ற கட்சியின் செயற்குழு கூட்டம் நடந்தது. அப்போது, சென்னையில் கன மழை பெய்தது.செயற்குழு கூட்டத்தில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையை அழைத்து பேசிய நட்டா,
சென்னை, உஷ்ஷ்ஷ், உளவுத்துறை, பட்டியல், திமுக, பீதி, கமல், ரஜினி


உளவுத்துறை பட்டியல் தி.மு.க., புள்ளிகள் பீதிசென்னை: தாமரை கட்சியின் தேசிய தலைவர் நட்டா, தமிழகத்தின் மீது மிகுந்த பாசம் உடையவர். டில்லியில் இம்மாத துவக்கத்தில், பிரதமர் மோடி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்ற கட்சியின் செயற்குழு கூட்டம் நடந்தது. அப்போது, சென்னையில் கன மழை பெய்தது.

செயற்குழு கூட்டத்தில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையை அழைத்து பேசிய நட்டா, சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, பா.ஜ., சார்பில் நிவாரண உதவிகளை செய்யும்படி கூறியுள்ளார். அதை ஏற்று கட்சியினரும் நிவாரண பணிகளில் ஈடுபட்டனர்.கடந்த 24ம் தேதி திருப்பூர் வந்தார் நட்டா; மாநில செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றார். கட்சியின் மாவட்ட அலுவலகங்களையும் திறந்து வைத்தார். பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, தி.மு.க.,வின் வாரிசு அரசியலை கடுமையாக விமர்சித்தார்.

அவரது பேச்சு, தாமரை கட்சி தொண்டர்களிடம் உற்சாகத்தையும்; சூரிய கட்சி தலைமைக்கு எரிச்சலையும் ஏற்படுத்தியது. அந்த கோபம், சூரிய கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழில் வெளியானது.

இந்தியாவை ஆளும் ஒரு கட்சியின் தலைவர் என்று கூட பாராமல் கடுமையாக விமர்சித்திருந்தனர். அக்கட்சி எம்.பி., பாரதியின் கண்டன அறிக்கையில், கடுமையான சொற்கள் பயன்படுத்தப் பட்டிருந்தன. அவற்றை தமிழக தாமரை கட்சி நிர்வாகிகள், ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, கட்சி மேலிடத்துக்கு அனுப்பி வைத்தனர். அதை கண்ட கட்சி மேலிடம் கண் சிவந்துள்ளது.

விரைவில், தி.மு.க.,வுக்கு பாடம் புகட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் எதிரொலியாக, முறைகேடுகளில் ஈடுபடும் சூரிய கட்சியினர் குறித்த விபரங்களை சேகரிக்கும் பணியில், உளவுத்துறையினர் இறங்கி உள்ளனராம்.


latest tamil news
கொரோனா தாக்கியதால் ரஜினி வழியில் கமல்?

கொரோனா தொற்று பரவலுக்கு முன், முதல்வர் பதவியை பிடிப்பதே நடிகர் ரஜினியின் திட்டமாக இருந்தது. கொரோனாவுக்கு பின், நடித்தால் மட்டும் போதும் என்ற மனநிலைக்கு வந்து விட்டார்.

ரஜினி விலகலால் தனக்கு பெரிய வெற்றி வாய்ப்பு ஏற்பட்டதாக, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரான, நடிகர் கமல் நினைத்தார்; முதல்வர் கனவில் மிதந்தார். ஆனால், அவர் உட்பட அவரது கட்சி வேட்பாளர்கள் அனைவரும், தேர்தலில் தோல்வியை தழுவினர்.

இதனால், கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் சிலர், வேறு கட்சிக்கு தாவினர். சிலர் அரசியலை விட்டு விலகினர். சட்டசபை தேர்தலுக்கு பின் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில், திடீரென போட்டியிட்ட விஜய் ரசிகர்களை கூட, கமல் கட்சியினரால் முந்த முடியவில்லை.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முந்தலாம் என, முண்டாசு கட்டிய நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கமல், மருத்துவமனையில் 'செட்டிலாகி' விட்டார். இப்போதைக்கு அவரது கவலை, 'பிக்பாஸ் சீசன் - 5' நிகழ்ச்சியை முடிக்க வேண்டும் என்பதாகவே உள்ளது.அவரது ரசிகர்கள், அவர் குணமடைய வேண்டி, சர்வ மத வழிபாட்டு தலங்களிலும் பிரார்த்தனை செய்ய துவங்கி உள்ளனர். திரையுலகினரும், 'கலையுலகை ஆள மீண்டு வா' என கமலுக்கு தைரியமூட்டி வருகின்றனர். இதனால், ரஜினி வழியை கமலும் பின்பற்றலாம் என்ற தகவல் உலா வருகிறது.


கையெழுத்து போட கூலிக்கு ஆள்?

தமிழகத்தில், 575 சார் - பதிவாளர் அலுவலகங்கள் செயல்படுகின்றன. பெரும்பாலான அலுவலகங்களில், தினமும் 200க்கு மேல் பத்திரங்கள் பதிவாகின்றன. ஒவ்வொரு பத்திரத்திலும், ஒவ்வொரு பக்கத்திலும் முத்திரையிட்டு சார் - பதிவாளர் கையெழுத்திட வேண்டும். அதன்பின் தான் அந்த பத்திரம் 'ஸ்கேன்' செய்யப்படும். பத்திரப்பதிவுக்கு பின் இந்த பணிகள் நடக்கும்.

பத்திரங்களில், சார் - பதிவாளர்கள் முழு கையெழுத்து போடாமல், இனிஷியல் கையெழுத்து மட்டும் தான் போடுவர். ஓசூர் உள்ளிட்ட சில பகுதிகளில், சார் - பதிவாளர்கள் வேறு நபர்களை கூலிக்கு அமர்த்தி, தங்கள் கையெழுத்தை போடுகின்றனராம்.

சார் - பதிவாளர் சரி பார்த்து கையெழுத்து போட்டுள்ளார் என்பது தான் மக்களின் நம்பிக்கை. இந்த நம்பிக்கையை குலைக்கும் வகையில், சார் - பதிவாளர்கள் செயல்படுவதாக வந்துள்ள புகார்கள், பதிவுத்துறை நிர்வாகத்தை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதை எப்படி சரி செய்வது என அதிகாரிகள் கைகளை பிசைகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (54)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
T.sthivinayagam - agartala,இந்தியா
29-நவ-202121:08:53 IST Report Abuse
T.sthivinayagam வாரிசு அரசியலை பேசும் தாமரை கட்சியின் தேசிய தலைவர்.ஆலங்களில் வாரிசு மற்றும் கிரிக்கெட் போன்ற விளையாட்டு துறையில் உள்ள வாரிசு பற்றி பேசுவாரா?
Rate this:
Barakat Ali - Medan,இந்தோனேசியா
30-நவ-202112:24:44 IST Report Abuse
Barakat Aliகட்சியின் தலைமைப்பதவிக்கு அல்லது பொருளாளர் பதவிக்கு ஒரு குடும்ப உறுப்பினர்களையே தலைமுறை தலைமுறையாக நியமனம் செய்வதற்கும் (அதாவது கட்சியையே ஒரு குடும்பம் அபகரிப்பதற்கும்), கட்சி சேல்வாக்கை பயன்படுத்தி கிரிக்கெட் சங்கத்தை லீசில் எடுப்பதற்கும் வித்தியாசம் இருக்கு அன்பரே இந்த வெறுப்பாட்டை டாஸ்மாக் சரக்கு புரிஞ்சிக்க விடாம செய்துடுது போலிருக்கே...
Rate this:
Cancel
Barakat Ali - Medan,இந்தோனேசியா
29-நவ-202120:11:05 IST Report Abuse
Barakat Ali நிருபர்: சென்னை பூராவுமே தண்ணியில மிதக்குதே. அதுக்கு என்ன பண்ணப் போறீங்க? " ஒன்னும் கவலைப்படாதீங்க. அதுக்குதான் நேரா கவர்னரை பார்த்து பேச போயிட்டு இருக்கேன்." நிருபர்: அவர் கிட்ட என்ன கேக்க போறீங்க? "வெள்ள பாதிப்பு அதிகமா இருக்கறதால, விவசாய சட்டங்களை வாபஸ் வாங்குன மாதிரியே அந்த CAA, 370 இரண்டு சட்டத்தையும் உடனடியா வாபஸ் வாங்கச் சொல்லி மத்திய அரசுக்கு அழுத்தம் குடுங்க ஜின்னு அவர்கிட்ட நான் அழுத்தம் கொடுக்காமல் மெதுவா கேட்க போறேன்." ஊடகங்கள் பிரேக்கிங் செய்தி : "நம்பர் ஒன் முதல்வர் கவர்னரை சந்திக்க விரைந்தார்"
Rate this:
Cancel
29-நவ-202119:09:13 IST Report Abuse
ashok. tirunelveli PLEASE DON'T REPEAT THE SAME COMMENT
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X