பொது செய்தி

தமிழ்நாடு

ஆக்சிஜன் முகமூடி அணிவித்து நாகப்பாம்புக்கு சிகிச்சை

Updated : நவ 29, 2021 | Added : நவ 29, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
சென்னை-மழையால் பாதிக்கப்பட்டு, உடல் இரண்டு துண்டாகும் நிலையில் உயிருக்கு போராடிய நாக பாம்புக்கு, ஆக்சிஜன்முகமூடி வசதியுடன் அறுவை சிகிச்சை செய்து, வனத்துறையினர் மறுவாழ்வு அளித்துள்ளனர்.சென்னையில் கொட்டித் தீர்க்கும் கன மழையால், பல இடங்களில் மழை நீர் தேங்கி, மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.இயந்திரம்கொரட்டூர் பகுதியில் தேங்கிய மழை நீரை வெளியேற்றும்

சென்னை-மழையால் பாதிக்கப்பட்டு, உடல் இரண்டு துண்டாகும் நிலையில் உயிருக்கு போராடிய நாக பாம்புக்கு, ஆக்சிஜன்முகமூடி வசதியுடன் அறுவை சிகிச்சை செய்து, வனத்துறையினர் மறுவாழ்வு அளித்துள்ளனர்.



latest tamil news



ஆக்சிஜன் மாஸ்க் அணிவித்து நாக பாம்புக்கு ஆபரேஷன் ........

சென்னையில் கொட்டித் தீர்க்கும் கன மழையால், பல இடங்களில் மழை நீர் தேங்கி, மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.இயந்திரம்கொரட்டூர் பகுதியில் தேங்கிய மழை நீரை வெளியேற்றும் பணி நேற்று நடந்தபோது, அங்குள்ள புதரில் பதுங்கி இருந்த நாக பாம்பு, இயந்திரத்தில் சிக்கியது. இதனால், நாக பாம்பின் உடல் இரண்டு துண்டாகும் நிலை ஏற்பட்டது. தகவலறிந்த, வேளச்சேரி வன உயிரின பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் விரைந்து சென்று, பாம்பை மீட்டனர்.

மரணத்தின் விளிம்பில் இருந்த நாக பாம்புக்கு, உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வனத்துறை டாக்டர்கள் முடிவு செய்தனர்.அடையாறில் உள்ள சவான் என்பவரது மருத்துவமனையில், அறுவை சிகிச்சை நடந்தது. சிகிச்சையின் போது, மூச்சுத்திணறல் ஏற்படாமல் இருக்க, பாம்பின் முகபகுதிக்கு ஆக்சிஜன் செல்லும் வகையிலான முகமூடி அணிவிக்கப்பட்டது.


latest tamil news



மறுவாழ்வு

அதன்பின், உடலின் வெட்டுப்பட்ட இடத்தில், காயத்துக்கு மருந்து செலுத்தி, டாக்டர்கள் தையல் போட்டு, அறுவை சிகிச்சையை நிறைவு செய்தனர். பாம்பு நல்ல நிலையில் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.மரணத்தின் விளிம்புக்கு சென்ற நாக பாம்புக்கு, வனத்துறையின் சாதுர்யமான நடவடிக்கையால் மறுவாழ்வு கிடைத்துஉள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Paraman - Madras,யூ.எஸ்.ஏ
29-நவ-202118:43:22 IST Report Abuse
Paraman ஆமா இந்த விஷயம் அந்த நல்ல பாம்புக்கு தெரியுமா?? பாம்புக்கு முகமூடி போடலைன்னா ஆபரேஷன் செஞ்சவங்க ஆக்சிஜனை அது நிறுத்தீரும்
Rate this:
Cancel
Shekar - Mumbai,இந்தியா
29-நவ-202111:42:45 IST Report Abuse
Shekar ரொம்ப அவசியம், பட்டினிலே இருக்கிற மனுஷன முதல காப்பாத்திட்டு வேற வேலையில்லைன்னு வரும்போது இத பார்கலாம்.
Rate this:
Cancel
Barakat Ali - Medan,இந்தோனேசியா
29-நவ-202111:38:24 IST Report Abuse
Barakat Ali அறிவாலயத்திலேர்ந்து காபி-பேஸ்ட் செய்ய ஒன்னும் புதுசா கொடுக்கலையா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X