பொது செய்தி

தமிழ்நாடு

நான்கு மாவட்டங்களில் இன்று கன மழை; நாளை (நவ.,30) உருவாகுது காற்றழுத்த தாழ்வு பகுதி

Updated : நவ 29, 2021 | Added : நவ 29, 2021
Share
Advertisement
சென்னை- --'வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், இன்று நான்கு மாவட்டங்களில் கன மழை பெய்யும். நாளை (நவ.,30) வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.சூறாவளிசென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய இலங்கை கடற்பகுதியில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.இதனால்,

சென்னை- --'வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், இன்று நான்கு மாவட்டங்களில் கன மழை பெய்யும். நாளை (நவ.,30) வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.



latest tamil news


சூறாவளிசென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய இலங்கை கடற்பகுதியில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.இதனால், தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் கேரளா கடற்பகுதிகளில் மணிக்கு 50 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும்.எனவே, மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு இன்று செல்ல வேண்டாம்.வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், சில மாவட்டங்களில் கனமழை பெய்யும். கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் இன்று மிக கன மழை பெய்யும்.துாத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் கன மழைக்கும், மற்ற மாவட்டங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளது.


latest tamil news


சென்னையில் இன்று சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் கன மழை பெய்யும். தென் மாவட்டங்களில் பல இடங்களில் மிதமான மழை பெய்யும். தெற்கு அந்தமான்நேற்று காலை நிலவரப்படி 24 மணி நேரத்தில், தமிழகத்தில் அதிகபட்சமாக, ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன், செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில், 11 செ.மீ., மழை பெய்துள்ளது.தெற்கு அந்தமான் கடற்பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நாளை உருவாக வாய்ப்புள்ளது.இது மேலும் வலுப்பெற்று மேற்கு, வடமேற்கு திசையில் நகரும். அதாவது, தமிழக, ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட கடலோர பகுதிகளை நோக்கி நகரும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X