பொது செய்தி

இந்தியா

'ஸ்டார்ட் அப்' துறையில் உலகிற்கு முன்மாதிரி: பிரதமர் பெருமிதம்

Updated : நவ 29, 2021 | Added : நவ 29, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
புதுடில்லி-''நம் நாட்டில் 'ஸ்டார்ட் அப்' துறையில் 70க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தலா 7,500 கோடி ரூபாய் மதிப்பை தாண்டி உள்ளதை அடுத்து, இத்துறையில் உலகையே நாம் வழிநடத்தி வருகிறோம்,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.மக்கள் சேவை'மன் கீ பாத்' எனப்படும் மனதில் குரல் என்ற நிகழ்ச்சியில், மாதந்தோறும் கடைசி ஞாயிறன்று வானொலி வாயிலாக நாட்டு மக்களுக்கு பிரதமர்

புதுடில்லி-''நம் நாட்டில் 'ஸ்டார்ட் அப்' துறையில் 70க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தலா 7,500 கோடி ரூபாய் மதிப்பை தாண்டி உள்ளதை அடுத்து, இத்துறையில் உலகையே நாம் வழிநடத்தி வருகிறோம்,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.latest tamil newsமக்கள் சேவை'மன் கீ பாத்' எனப்படும் மனதில் குரல் என்ற நிகழ்ச்சியில், மாதந்தோறும் கடைசி ஞாயிறன்று வானொலி வாயிலாக நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார்.
நேற்றைய நிகழ்ச்சியில் பிரதமர் பேசியதாவது: இன்று நான் அதிகாரத்தில் இல்லை. எதிர்காலத்திலும் அதிகாரத்தில் இருக்க விரும்பவில்லை. மக்கள் சேவையில் இருப்பதே என் விருப்பம்.பிரதமர் பதவி என்பதை எனக்கு கிடைத்த அதிகாரமாக பார்க்கவில்லை. மக்களுக்கு சேவையாற்ற கிடைத்த வாய்ப்பாகவே கருதுகிறேன்.அரசாங்கத்தின் பல வேலைகளில், பல வளர்ச்சித் திட்டங்களுக்கு மத்தியில், மனித உணர்வுகள் தொடர்பான விஷயங்கள் எப்போதும் வித்தியாசமான மகிழ்ச்சியைத் தருகின்றன.அரசின் முயற்சியால், அரசின் வளர்ச்சித் திட்டங்களால் ஒருவரது வாழ்க்கை மாறுகிறது.

அந்த அனுபவத்தை கேட்கும் போது, நமக்கும் உணர்வு நிரம்பி வழிகிறது. இது, மனதிற்கு திருப்தியை அளிப்பதோடு, அந்த திட்டத்தை மக்களிடம் கொண்டு செல்ல உத்வேகத்தையும் அளிக்கிறது.கொரோனா பெருந்தொற்று ஒழிந்து விடவில்லை. எனவே, அனைவரும் தகுந்தமுன்னெச்சரிக்கை நடவடிக்கையை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.தற்போது எங்கு பார்த்தாலும் ஸ்டார்ட் அப் என்ற சொல்லை கேட்கிறோம். புதிய சிந்தனைகள், புதிய முயற்சிகளுடன் கூடிய நிறுவனங்களை ஸ்டார்ட் அப் என அழைக்கிறோம். சிறிய நகரங்களில் கூட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் முளைக்கத் துவங்கிவிட்டன. இந்த நிறுவனங்களுக்கான முதலீடுகள் வரலாறு காணாத வகையில் குவியத் துவங்கி உள்ளன. நாம் ஸ்டார்ட் அப் யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இதில், 7,500 கோடி ரூபாய் மதிப்பை தாண்டும் நிறுவனங்கள், 'யுனிகார்ன்' என அழைக்கப்படுகின்றன.வியத்தகு சாதனைகடந்த 2015 வரை 9 - 10 யுனிகார்ன் நிறுவனங்கள் மட்டுமே நம் நாட்டில் இருந்தன. தற்போது 70 நிறுவனங்கள் தலா 7,500 கோடி ரூபாய் மதிப்பை தாண்டி உள்ளன. கடந்த 10 மாதங்களில், 10 நாட்களுக்கு ஒரு யுனிகார்ன் நிறுவனம் நம் நாட்டில் உருவாகிறது. கொரோனா பெருந்தொற்று காலத்திலும் இந்த வியத்தகு சாதனையை நம் இளைஞர்கள் செய்துஉள்ளனர்.ஸ்டார்ட் அப் துறை வாயிலாக சர்வதேச பிரச்னைகளுக்கு நம் இளைஞர்கள் தீர்வு அளிக்கின்றனர். இந்த துறையில் உலகையே நாம் வழிநடத்த துவங்கி உள்ளோம். இதன் வாயிலாக சர்வதேச அளவில் நம் இளைஞர்கள் கவனம் பெற்று வருகின்றனர். உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் அவர்களுக்கு முதலீடுகள் குவிகின்றன.

அடுத்த மாதம் கடற்படை தினம், ஆயுதப் படையின் கொடி நாள் ஆகியவை வருகின்றன. 1971ல் பாகிஸ்தானுக்கு எதிரான போரில் நாம் வெற்றி பெற்றதன் 50ம் ஆண்டு பொன் விழா அடுத்த மாதம் 16ல் கொண்டாடப்பட உள்ளது.இந்த சந்தர்ப்பங்களில் நம் வீரர்கள், குறிப்பாக இந்த வீரர்களைப் பெற்றெடுத்த துணிச்சலான தாய்மார்களை நினைவுபடுத்துகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.


latest tamil news
துாத்துக்குடி மக்களுக்கு பாராட்டு

மன் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் பேசியதாவது:இயற்கையை நாம் பாதுகாக்கும்போது அதற்கு பிரதிபலனாக இயற்கை நமக்கு பாதுகாப்பு அளிக்கிறது. இதை நம் தனிப்பட்ட வாழ்க்கையில் அனுபவப்பூர்வமாக உணர்ந்து வருகிறோம். இதற்கு, தமிழகத்தின் துாத்துக்குடி மாவட்டம் சிறந்த உதாரணமாக உள்ளது.

துாத்துக்குடி மக்கள் இயற்கையை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். கடலோர மாவட்டமான துாத்துக்குடியில் உள்ள சிறிய தீவுகள், திட்டுக்கள் கடலில் மூழ்காமல் இருக்க, பனை மரங்களை மக்கள் நடுகின்றனர். புயல், சூறாவளி போன்ற இயற்கை சீற்றங்களிலும் இந்த பனை மரங்கள் நிமிர்ந்து நின்று, நிலத்துக்கு பாதுகாப்பு அளிக்கின்றன. இவர்களின் செயல் பாராட்டத்தக்கது.இவ்வாறு பிரதமர் பேசினார்.செயலிகளில் ஒலிபரப்புபிரதமரின் மன் கீ பாத் நிகழ்ச்சி, 2014 அக்., முதல் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறன்று தொடர்ந்து ஒலிபரப்பாகி வருகிறது. 2019 லோக்சபா தேர்தலின் போது மட்டும் சில வாரங்களுக்கு ஒலிபரப்பு நிறுத்தப் பட்டது.

அனைத்து வானொலி, நமோ செயலி, 'யுடியூப்' சமூக ஊடகம் ஆகியவற்றில் ஒலிபரப்பாகி வந்தன.தற்போது பிரதமரின் பேச்சு, இளைய தலைமுறையினரையும் சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்தில், 'ஸ்பாட்டிபை, ஹங்காமா, ஜியோசாவன், விங்க், அமேசான் மியூசிக்' உள்ளிட்ட செயலிகளிலும் ஒலிபரப்பாக துவங்கி உள்ளன.

ஆஸ்திரேலிய கிருஷ்ண பக்தைஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜகத்தாரினி தாசி என்ற பெண் குறித்து, பிரதமர் நரேந்திர மோடி நேற்று பேசியதாவது:ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த நடிகை மற்றும் ஓவியர் ஜகத்தாரினி தாசி. இவர், ஹிந்து மதத்தின் மீது ஏற்பட்ட பற்றின் காரணமாக, 1970ல் 'இஸ்கான்' அமைப்பில் இணைந்தார்.உத்தர பிரதேசத்தின் பிருந்தாவனத்திற்கு 1983ல் குடும்பத்துடன் குடிபெயர்ந்தார். 13 ஆண்டுகள் இங்கு தங்கியிருந்து, பக்தி வேதாந்தத்தை பலருக்கும் பயிற்றுவித்தார். இடைப்பட்ட நேரத்தில் பல்வேறு புனித தலங்களுக்கும் சென்று வந்தார். 1996ல் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகருக்கு குடிபெயர்ந்தார். அங்கு, பிருந்தாவனத்தின் பெருமைகளை தன் ஓவியத்தின் வாயிலாக பரப்பி வருகிறார். இவரது பணி, கிருஷ்ணர் மீதுள்ள அவரது பக்தியை உணர்த்துகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sundar Anand - Chennai,இந்தியா
29-நவ-202119:32:47 IST Report Abuse
Sundar Anand மிக்க மகிஷ்ச்சி வாழ்க பாரதம் வளர்க பாரதம்
Rate this:
Cancel
Shankar - CHENNAI,ஓமன்
29-நவ-202111:01:06 IST Report Abuse
Shankar கொரோனா கட்டுப்படுத்துவதில் இந்தியா முன்னோடி டிஜிட்டல் பரிவர்த்தனையில் இந்தியா முன்னோடி பொருளாதார மீட்ச்சியில் இந்தியா முன்னோடி கலாச்சாரத்தில் இந்தியா முன்னோடி ஜனநாயகத்தில் இந்தியா முன்னோடி ராணுவத்தில் இந்தியா முன்னோடி இளைஞர்களின் எழுச்சியில் இந்தியா முன்னோடி
Rate this:
Cancel
29-நவ-202110:45:05 IST Report Abuse
மோகனசுந்தரம் மிகவும் நாட்டு பற்றும் தேச பக்தியும் கொண்ட பிரதமரை வாழ்த்தி வணங்குகிறேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X