பொது செய்தி

தமிழ்நாடு

பஸ் ஊழியர் ஊதிய ஒப்பந்தம்; பேச்சு நடத்த தயாராகிறது அரசு

Updated : நவ 29, 2021 | Added : நவ 29, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
சென்னை : அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான 14வது ஊதிய ஒப்பந்த பேச்சு நடத்த, விரைவில் புதிய குழு அமைக்கப்பட உள்ளது.அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி, 13வது ஊதிய ஒப்பந்தம் 2019 ஆகஸ்டில் முடிந்தது.அதற்கு முன், 14வது ஊதிய ஒப்பந்த பேச்சு நடத்தி இருக்க வேண்டும். ஒப்பந்த பேச்சு முடிந்திருந்தால்,


சென்னை : அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான 14வது ஊதிய ஒப்பந்த பேச்சு நடத்த, விரைவில் புதிய குழு அமைக்கப்பட உள்ளது.



latest tamil news


அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி, 13வது ஊதிய ஒப்பந்தம் 2019 ஆகஸ்டில் முடிந்தது.அதற்கு முன், 14வது ஊதிய ஒப்பந்த பேச்சு நடத்தி இருக்க வேண்டும். ஒப்பந்த பேச்சு முடிந்திருந்தால், ஊழியர்களுக்கு 2,000 முதல் 5,000 ரூபாய் வரை ஊதிய உயர்வு கிடைத்திருக்கும்.

ஆட்சி மாற்றம்

கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால் ஒப்பந்த பேச்சு நடத்தப்படவில்லை. இடைக்கால நிவாரணமாக, 1,000 ரூபாய் வழங்கப்படும் என அரசு அறிவித்தது. சட்டசபை தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தி.மு.க., ஆட்சி அமைத்தது. ஆறு மாதங்களாகியும் ஊதிய ஒப்பந்த பேச்சை துவங்காததால், தொழில்சங்கங்கள் போராட்டத்திற்கு தயாராகி வருகின்றன; சி.ஐ.டி.யு., தொழிற்சங்கம் போராட்டத்தை துவக்கியுள்ளது.


latest tamil news



கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் பெருமளவு நீங்கி, பஸ் போக்குவரத்து இயல்பு நிலைக்கு வந்துள்ளது. அதிகாரிகள் குழு இந்த நேரத்தில், ஊழியர்கள் 'ஸ்டிரைக்' நடத்தினால், பிரச்னையாகும் என்பதால், ஊதிய ஒப்பந்த பேச்சை துவக்க அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்காக, தொழிலாளர் துறை கமிஷனர், போக்குவரத்து துறை மேலாண் இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கும் பணி துவங்கி உள்ளது. விரைவில், ஊதிய ஒப்பந்த பேச்சு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழன் - madurai,இந்தியா
29-நவ-202116:55:26 IST Report Abuse
தமிழன் Bun ரெடி.
Rate this:
Cancel
Thiyaga Rajan - Chennai,இந்தியா
29-நவ-202116:32:26 IST Report Abuse
Thiyaga Rajan வழித்தடங்களை ஏலம் விட்டு அதன் மூலம் வரும் தொகையை கொண்டு அரசு பேருந்து ஊஸழிழர்களுக்கு ஒருவித செட்டில்மென்ட் செய்துவிடுங்கள்..... போக்குவரத்துத்துறையை இழித்து மூடி விடுங்கள். லாபமாக இயக்க தெரியவில்லை என்றால் எதற்கு இந்த துறை .... ஓடாத ரூட்ல ஓடுகிற வண்டிக்கு எதற்கு தண்டம் கட்டணும் ...... நகரத்திலே எடுக்கிறவன் , க்ராமத்திலயும் ரூட் எடுத்து ஓட வையுங்க .....????? மக்களுக்கு தேவை இல்லாத வரி சுமையை ஏற்றி கொன்டே செல்லாதீர் ..... ........
Rate this:
Cancel
Viswanathan - tamilnadu,இந்தியா
29-நவ-202115:43:33 IST Report Abuse
Viswanathan போக்குவரத்து நடத்துனர்கள் போக்குவரத்துகளை நன்றாக இயக்கி இருந்தால் நன்றாக நடத்தியிருந்தால் அரசாங்கத்திற்கு எந்த வகையிலும் நஷ்டம் வருவதற்கு வாய்ப்பே இல்லை ஆனால் இப்போது அவர்களுக்கு ஊதியம் உயர்வு கேட்டுக்கொண்டு எந்த ஒரு ஆளும் அரசாங்கத்திடம் போராட்டம் நடத்துவது மிகவும் கண்டனத்துக்குரியது நன்றாக இயக்கும் போக்குவரத்து ஊழியர்கள் அவர்கள் என்னை மன்னிக்கவும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X