தேர்தலில் பா.ஜ.,வை தோற்கடிக்க விவசாயிகள் மாநாட்டில் அழைப்பு

Updated : நவ 29, 2021 | Added : நவ 29, 2021 | கருத்துகள் (60)
Share
Advertisement
மும்பை: ''நம் கோரிக்கைகள் நிறைவேறும்வரை சட்டசபை தேர்தல்களில் பா.ஜ.,வை தோற்கடிக்க வேண்டும்,'' என மும்பை மாநாட்டில் விவசாய அமைப்பின் தலைவர் ராகேஷ் திகாயத் கூறினார்.பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் இன்று (நவ.,29) துவங்குகிறது. இதையடுத்து மும்பையின் ஆசாத் மைதானத்தில் விவசாயிகள் அமைப்பான சம்யுக்தா ஷேத்காரி கம்கர் மோர்ச்சா தலைமையில் நேற்று மாநாடு நடந்தது. இதில்
PM Modi, Farmers, election

மும்பை: ''நம் கோரிக்கைகள் நிறைவேறும்வரை சட்டசபை தேர்தல்களில் பா.ஜ.,வை தோற்கடிக்க வேண்டும்,'' என மும்பை மாநாட்டில் விவசாய அமைப்பின் தலைவர் ராகேஷ் திகாயத் கூறினார்.

பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் இன்று (நவ.,29) துவங்குகிறது. இதையடுத்து மும்பையின் ஆசாத் மைதானத்தில் விவசாயிகள் அமைப்பான சம்யுக்தா ஷேத்காரி கம்கர் மோர்ச்சா தலைமையில் நேற்று மாநாடு நடந்தது. இதில் பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத் பேசியதாவது:


latest tamil newsபிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது குறைந்தபட்ச ஆதரவு விலையை ஏற்றார். தற்போது அதற்கான விவாதத்தில் பங்கேற்க மறுக்கிறார்.பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்க மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும். மின்சார திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும். லக்கிம்பூரில் விவசாயிகள் கொலை வழக்கில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவை கைது செய்ய வேண்டும்.

ஓராண்டு போராட்டத்தில் பலியான விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிதி வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தப்படும். கோரிக்கைகள் ஏற்கப்படும்வரை அனைத்து சட்டசபை தேர்தல்களிலும் பா.ஜ.,வை தோற்கடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (60)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
30-நவ-202103:03:56 IST Report Abuse
Ramesh Sargam எந்த நாட்டிலாவது 'உண்மையான விவசாயிகள்' இப்படி மாதக்கணக்கில் விவசாயத்தை விட்டு, போராட்டத்தில் ஈடுபடுவார்களா? அப்படி என்றால் இவர்கள் எல்லாம் யார்? காங்கிரஸ் மற்றும் இதர எதிர்கட்சிகளிடத்தில் பணம் பெற்று காலத்தை ஓட்டும் 'வேலை இல்லா போலி விவசாயிகள்'
Rate this:
Cancel
PRAKASH.P - chennai,இந்தியா
29-நவ-202123:42:12 IST Report Abuse
PRAKASH.P நம்பிக்கை துரோகிகள் வெல்வது சிரமம்
Rate this:
Cancel
Prakash - Chennai,இந்தியா
29-நவ-202122:03:33 IST Report Abuse
Prakash பல வருடங்களாக விவசாய பொருள்களின் விலையை விவசாயிகள் நிர்ணயம் செய்து கொள்ள அவர்களுக்கு உதவிட சட்டம் தேவை என்கிற கோரிக்கை இருந்து வந்தது... இந்த சட்டத்தை பற்றி மத்திய அரசு பாராளுமன்றத்தில் பேசுவதற்கு தயாராக இருந்தது அனால் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதில் கவனமாக இருந்தன..ஏனென்றால் அவர்களுக்கு விவசாய சம்பந்தமான விஷயத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி ஓட்டுக்களை அள்ள நல்ல வாய்ப்பிருப்பதாக திடமாக நம்பினார்கள் ... மத்திய அரசும் 11 முறை விவசாய சங்கங்களிடம் பேச்சு வார்த்தைக்கு அழைத்தது ஆனால் அவர்கள் அதற்க்கு தயாராக இல்லை .. மற்றும் இந்த சட்டத்தை உச்ச நீதி மன்றம் நிறுத்து வைத்துள்ளது ...மற்றும் உச்ச நீதி மன்றம் விவசாய சங்களிடம் பேச அழைத்த பொது...அவர்கள் பேச தயாராக இல்லை ...நாட்டின் பாதுகாப்பு (Khalistan போன்ற சக்திகள் ஊடுருவியதால்) கருதியே இந்த சட்டத்தை மோடி அவர்கள் வாபஸ் பெற்றார் விவசாய சட்ட வாபஸ் பற்றி விவசாய சங்கங்கள் தலைவரான "P.Sengal Reddy" கூறுகையில் இந்த சட்ட ரத்து ஏமாற்றம் அளிப்பதாக கூறியுள்ளார் ...உற்பத்தி தரத்தையும் உற்பத்தி திறனையும் அதிகரிக்க வேண்டி நிலையில் இருக்கும் நம் இந்த மாதிரியான சட்டங்களை வாபஸ் பெறுவது நல்லதல்ல என்று கூறுகிறார் ...அதே போல் "Ashok Gulati" என்கிற விவசாய நிபுணர் கூறுகையில் (இவர் உச்ச நீதி மன்றம் நியமித்த 4 பேர் கமிட்டியில் ஒருவர்) ...இந்த விவசாய சட்டத்தை திரும்ப பெறுவது ஏமாற்றம் அளிக்கிறது என்று கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில் ..."Food Corporation of India" கிடங்குகளில் மூன்றில் ஒரு பங்கு வீணாகிறது அதன் மதிப்பு Rs.1,50,000 கோடிகள் என்று மதிப்பிடுகிறார். இச்சேமிப்பு அளவில் சீர்திருத்தம் கொண்டுவரவேண்டுமே ஓழிய இது மாதிரி வாபஸ் பெறுவது நாட்டிற்கு நல்லதல்ல என்கிறார். மற்றும் விவசாய குழு உற்பத்தி குழு வைத்திருப்பவரும் மற்றும் பரம்பரை விவசாயம் செய்பவருமான உலக அனுபவம் பெற்ற ..நன்னிலத்தில் உள்ள முற்போக்கு விவசாயீ ஆனா "Ravi" கூறுகையில் ..."இந்த போராட்டம் ஆர்தியாஸ்களால் நடத்தப்பட்ட போராட்டம். ..கேரவன்களில் (இழுத்து செல்லக்கூடிய தங்கும் விடுதி) உட்கார்ந்துகொண்டு மதுபானத்துடன் ஓய்வு எடுத்துக்கொண்டு நடத்தப்பட்ட போராட்டம் என்கிறார்...விவசாயிகள் நடத்தப்பட்ட போராட்டம் இல்லை என்கிறார் ....English மீடியா மோடி அவர்கள் ஒரு விவாதமில்லாமல் இந்த சட்டத்தை நிறைவேற்றிவிட்டார் என்று பிதற்றுகின்றனர், இது உண்மையும் அல்ல.... இந்த மாதிரியான "விவசாயிகள்" கூட்டம் ஜனநாயக ரீதியாக தேர்தெடுக்க பட்ட ஒரு பிரதமரை மிரட்டுகின்றன ...என்ன ஒரு கீழ்த்தரமான வருந்தத்தக்க செயல்...TALIBAN போல ஒரு DALIT மனிதரை கொன்று தொங்கவிட்டுருந்தனர் இந்த கூட்டம் ..."26 JAN 2021" என்ன நடந்தது என்பதை நாம் எல்லாம் அறிவோம்....ஆகையால் இந்த கூட்டத்தை கடிவாளம் போடுவது இந்த நாட்டிற்கு சால சிறந்தது... மற்றும் MSP நிர்ணயம் செய்வது அவ்வளவு எளிதான ஒன்றல்ல ...அதிகளவு MSP நிர்ணயம் செய்தால் உணவு பொருள் "INFLATION" கூடும் ...இதை பொது மக்கள் அணுபவிக்க வேண்டும் ...மற்றும் MSP பிக்கு போகும் பணம் "INDIAN TAX PAYER" கொடுக்கும் பணம் ...அப்போ மத்திய அரசு அந்த பொருளுக்கு தரத்தை பார்த்து கொடுக்கலாம் அல்லவா ...ஏன் இதை பற்றி எல்லாம் தமிழ் மீடியா வில் விவாதமில்லை ...சற்றே சிந்திப்போம்...தமிழகத்தில் உள்ள திமுக இதை பற்றி பேச அருகதை இல்லை ...1970 தில் தீ மு க விஷசாயிகளை சுட்டு கொன்றது .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X