அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஜாதி, மத உணர்வு வேண்டாம்! 'நாம் தமிழர்' சீமான் பேச்சு

Added : நவ 29, 2021
Share
Advertisement
திருப்பூர் : ''இளம் தலைமுறையினர் ஜாதி, மத உணர்வை துாக்கி எறிய வேண்டும்,'' என,''நாம் தமிழர்' கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.'நாம் தமிழர்' கட்சி சார்பில், மாவீரர் நாள் நிகழ்ச்சி திருப்பூரில் நடந்தது.இதில், சீமான் பேசியதாவது:ஜாதி, மதத்தின் பெயரால் தமிழர்கள் வேறுபட்டுள்ளனர். மற்றவர்கள் உயிரை காப்பாற்ற, தனது உயிரை கொடுத்து காப்பாற்றுபவரே உண்மையான
 ஜாதி, மத உணர்வு வேண்டாம்! 'நாம் தமிழர்' சீமான் பேச்சு


திருப்பூர் : ''இளம் தலைமுறையினர் ஜாதி, மத உணர்வை துாக்கி எறிய வேண்டும்,'' என,''நாம் தமிழர்' கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.

'நாம் தமிழர்' கட்சி சார்பில், மாவீரர் நாள் நிகழ்ச்சி திருப்பூரில் நடந்தது.இதில், சீமான் பேசியதாவது:

ஜாதி, மதத்தின் பெயரால் தமிழர்கள் வேறுபட்டுள்ளனர். மற்றவர்கள் உயிரை காப்பாற்ற, தனது உயிரை கொடுத்து காப்பாற்றுபவரே உண்மையான வீரர். இளம் தலைமுறையினர் ஜாதி, மத உணர்வை துாக்கி எறிய வேண்டும். தமிழன் என்ற உணர்வோடு ஒன்றுபட வேண்டும்.தேர்தலில் சீட் கிடைக்கும் என்பதற்காக கட்சியில் வேலை செய்யக் கூடாது.

யாருக்கு சீட் வழங்க வேண்டும் என்பது எனக்கு தெரியும். தன்னை முன்னிலைப்படுத்தாமல், தன் இனத்துக்காக பாடுபட வேண்டும்.எந்த வேலையும் இழிவல்ல. எந்த வேலையும் செய்யாமல் இருப்பதே இழிவாகும். 100 நாள் வேலை திட்டத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X