'மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்' என்று ராகுல் ஏன் பிரசாரம் செய்வதில்லை...

Updated : நவ 29, 2021 | Added : நவ 29, 2021 | கருத்துகள் (26)
Share
Advertisement
தமிழக பா.ஜ., பொறுப்பாளர் சி.டி.ரவி அறிக்கை: கொரோனா தடுப்பூசி குறித்து, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் வாய்க்கு வந்தபடி ஏதோ கூறியுள்ளார். அவர் என்றாவது, யாருக்காவது தடுப்பூசி போட அறிவுரை வழங்கியிருப்பாரா அல்லது அவர் தான், எங்கு தடுப்பூசி போட்டுக் கொண்டார் என்றாவது கூறியுள்ளாரா... கொரோனா தடுப்பூசி பற்றி கூற அவருக்கு அருகதை கிடையாது.ஆமாம். ராகுல் மற்றும் அவரது
சி.டி.ரவி, சீமான், உதயநிதி

தமிழக பா.ஜ., பொறுப்பாளர் சி.டி.ரவி அறிக்கை: கொரோனா தடுப்பூசி குறித்து, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் வாய்க்கு வந்தபடி ஏதோ கூறியுள்ளார். அவர் என்றாவது, யாருக்காவது தடுப்பூசி போட அறிவுரை வழங்கியிருப்பாரா அல்லது அவர் தான், எங்கு தடுப்பூசி போட்டுக் கொண்டார் என்றாவது கூறியுள்ளாரா... கொரோனா தடுப்பூசி பற்றி கூற அவருக்கு அருகதை கிடையாது.


ஆமாம். ராகுல் மற்றும் அவரது குடும்பத்தினர் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக செய்திகள் வரவே இல்லையே. மேலும், 'மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்' என்று அவர் ஏன் பிரசாரம் செய்வதில்லை; இதில் மறைந்திருக்கும் மர்மம் வெளி வருமா?



தமிழக பா.ஜ., பொதுச் செயலர் கரு.நாகராஜன் அறிக்கை: தி.மு.க.,வில் இருப்பது வாரிசு அரசியலே. அதை இல்லை என்று மறுக்கும் துணிவு, அக்கட்சியில் எவருக்கும் உண்டா... உதயநிதி அல்லது அவரது பிள்ளைகளை, தி.மு.க., தலைமை பதவி ஏற்க அனுமதிக்க மாட்டோம் என, ஆர்.எஸ்.பாரதி அறிக்கை வெளியிட முடியுமா?


'உள்கட்சி ஜனநாயகம்' மிகுந்த, தி.மு.க.,வில், ஆர்.எஸ்.பாரதி, 'சிறப்பாக' செயல்படுவது உங்களுக்கு பிடிக்கவில்லையா?



நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி:
தொழில் பூங்கா, வளர்ச்சி, வேலை வாய்ப்பு என்ற பெயரில், மக்களை அரசு ஏமாற்றுகிறது. போனஸ், மானியம், இலவசம் இவை தான் அரசின் திட்டங்களான உள்ளன. வேலைவாய்ப்புகளில் வட மாநிலத்தவர்கள் தான் நிறைந்துள்ளனர்.


நம்மவர்கள் தான், நாம் தமிழர், தி.க., தி.மு.க., - அ.தி.மு.க., போன்ற கட்சிகளுக்கு, 'வாழ்க' கோஷம் போடுவதையே சிறந்த பணியாக நினைக்கின்றனரே... அவர்கள் எப்படி சிறு வேலைகளை பார்ப்பர்?



தி.மு.க., - எம்.எல்.ஏ., உதயநிதி ஸ்டாலின் அறிக்கை: 'நீட்' தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு தரும் சட்ட முன்வடிவை ஜனாதிபதிக்கு அனுப்ப, கவர்னரிடம் வலியுறுத்திய முதல்வர் ஸ்டாலினின் முயற்சி வெல்லும். சட்டசபையின் முடிவு, மாநில மக்களின் கருத்து. அதை மதித்து, கவர்னர் தன் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும்.


latest tamil news




நீங்கள் எதிர்பார்க்கும் 'ரப்பர் ஸ்டாம்ப்' கவர்னராக இருந்தால், இதற்குள் ஜனாதிபதிக்கு அனுப்பி இருப்பார். பார்ப்போம். கவர்னர் ரவி எப்படி என்பது விரைவில் தெரிந்து விடும்!



தமிழக பா.ஜ., கலாசார பிரிவின் தலைவர், நடிகை காயத்ரி ரகுராம் அறிக்கை: 50 ஆண்டுகால மோசமான ஆட்சியால் தமிழகம் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. வடிகால் அமைப்பு சரியில்லை. ஏரிகளை அழித்து அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டியுள்ளனர். இது மழையின் போது அதிக சேதத்தை ஏற்படுத்தி நீர்நிலைகளுக்கு தண்ணீர் செல்ல வழி இல்லாமல் தமிழக மக்கள் அவதிப்படுகின்றனர். இது மிக பெரிய நிர்வாக சீர்கேடு.


திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் படாதபாடு படுகிறது. இனியாவது மக்களும் திருந்த வேண்டும். திராவிட கட்சிகளும் திருந்த வேண்டும். வாய்ப்பு இருக்கிறதா...


Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
30-நவ-202103:55:57 IST Report Abuse
meenakshisundaram ராகுல் ஸ்டாலின் மம்தா கூட்டணி -மக்களுக்கு நல்லதை அரசு செயது விடக்கூடாது என்று நினைப்பவர்கள் -ஆளும் கட்சியா இருந்தாலும் இல்லே எதிர்க்கட்சியான இருந்தாலும்
Rate this:
Cancel
Shankar Nadar - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
29-நவ-202122:24:01 IST Report Abuse
Shankar Nadar முதலாவதாக ராகுல் அவர்களுக்கு தடுப்பு ஊசி என்றால் என்னவென்று புரியவைக்க வேண்டும். ஏனேன்றால் அது காய்ச்சல் தலைவலிக்கு கொடுக்கும் ஊசி என்று நினைத்துள்ளார். அறிவுக்கு புரியாதது கண்ணுக்கு தெரியாது இது ஒரு மருத்துவ பழமொழி.
Rate this:
Cancel
Shankar Nadar - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
29-நவ-202122:15:11 IST Report Abuse
Shankar Nadar முதலாவதாக நீட் தேர்வு விலக்குக்காக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது. உச்சநீதிமன்ற அவமதிப்பதாகும். அதை கண்டிப்பாக கவர்னர் ரத்து செய்வார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X