காரைக்கால் துறைமுகத்தில் விசைப்படகு மாயம்

Added : நவ 29, 2021 | |
Advertisement
நாகப்பட்டினம் : நாகை, அக்கரைப்பேட்டையைச் சேர்ந்தவர் ராஜா, 49. இவர் தனக்கு சொந்தமான விசைப்படகை (டி.என்.06.எம்.எம்-5183), கடந்த 18ம் தேதி, காரைக்கால் துறைமுகத்தில் வழக்கம்போல நிறுத்தி வைத்திருந்தார். கனமழையால் அரசலாற்றில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில், ஆற்றின் முகத்துவாரத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த படகின் கயிறு அறுபட்டதால் விசைப்படகு கடலில் இழுத்துச் செல்லப்பட்டது.

மறுநாள் ராஜா வந்து பார்த்தபோது துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த படகை காணாமல் அதிர்ச்சியடைந்தார். காரைக்கால் கடலோர பாதுகாப்பு குழுமம் போலீசாரிடம் புகார் அளித்து விட்டு, அக்கரைப்பேட்டை மீனவர்கள் உதவியுடன் கடலுக்கு சென்று படகை தேடியுள்ளார்.

படகை கண்டுபிடிக்க முடியாததால், நாகை கலெக்டர் அருண்தம்புராஜ் மற்றும் மீன்வளத்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். 'ரூ. 70 லட்சம் மதிப்புள்ள படகை கண்டுபிடித்து தந்து, மீனவ குடும்பத்தின் வாழ்வாதாரத்தை மீட்பதற்கு, தமிழக, புதுச்சேரி அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என அக்கரைப்பேட்டை மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X