பொது செய்தி

தமிழ்நாடு

டெல்டாவில் 1 லட்சம் ஏக்கர் நெற்பயிர் சேதம் : மீண்டும் கணக்கெடுப்பு நடத்த கோரிக்கை

Updated : நவ 29, 2021 | Added : நவ 29, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
தஞ்சாவூர்: -மத்திய குழு ஆய்வுக்கு பின், டெல்டா மாவட்டங்களில் மீண்டும் பெய்து வரும் தொடர் மழையால், 1 லட்சம் ஏக்கரில் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 'பாதிப்பு குறித்து மீண்டும் கணக்கெடுப்பு நடத்த வேண்டும்' என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.வட கிழக்கு பருவமழையால், தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், 1.50 லட்சம் ஏக்கரில் நடவு செய்யப்பட்டிருந்த சம்பா, தாளடி
டெல்டா, நெற்பயிர்கள், சேதம், கணக்கெடுப்பு, கோரிக்கை

தஞ்சாவூர்: -மத்திய குழு ஆய்வுக்கு பின், டெல்டா மாவட்டங்களில் மீண்டும் பெய்து வரும் தொடர் மழையால், 1 லட்சம் ஏக்கரில் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 'பாதிப்பு குறித்து மீண்டும் கணக்கெடுப்பு நடத்த வேண்டும்' என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

வட கிழக்கு பருவமழையால், தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், 1.50 லட்சம் ஏக்கரில் நடவு செய்யப்பட்டிருந்த சம்பா, தாளடி நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கின. இதையடுத்து, 23ம் தேதி மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர். அதன்பின்னும், ஒரு வாரமாக தொடர்ந்து பெய்து வரும் மழையால், தஞ்சாவூர், அம்மாபேட்டை, திருவையாறு, கும்பகோணம், ஒரத்தநாடு உள்ளிட்ட பகுதிகளில், 40 ஆயிரம் ஏக்கர்; நாகை மாவட்டத்தில் 20 ஆயிரம் ஏக்கர்;மயிலாடுதுறை மாவட்டத்தில், 10 ஆயிரம் ஏக்கர், திருவாரூர் மாவட்டத்தில், 50 ஆயிரம் ஏக்கர் என, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

வயல்களில் தண்ணீர் குளம் போல தேங்கி உள்ளது. இது குறித்து, விவசாயிகள் கூறியதாவது: கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, வேளாண் துறையினர் கணக்கெடுத்தனர். அந்த அறிக்கையை தமிழக அரசிடம் வழங்கினர். அவர்கள், மத்திய குழுவிடம் வழங்கியுள்ளனர். மத்திய குழுவினரும் ஆய்வு செய்து சென்றுள்ளனர். தற்போது பெய்து வரும் மழையால் மீண்டும் பாதிப்பு அதிகரித்துள்ளது. எனவே, அரசு மீண்டும் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கணக்கெடுப்பு நடத்தி, நிவாரணம் வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


காலில் விழுந்த விவசாயி


திருவையாறு அருகே கடம்பன்குடியில் பாதிக்கப்பட்ட பகுதிகளை, பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ் பார்வையிட்டார். அப்போது சண்முகம் என்ற விவசாயி, திடீரென அமைச்சர் காலில் விழுந்து, பாதிப்பு குறித்து முறையிட்டார். 'காலில் விழ வேண்டாம்' என அவரை, துாக்கிவிட்டு சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.


latest tamil newsநாகையில் அடைமழை


நாகை மாவட்டத்தில் சில தினங்களாக அடைமழை பெய்து வருகிறது. இதனால், தாழ்வான பகுதிகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. பாப்பாக்கோவில், நரியங்குடி பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட குடிசை வீடுகளின் சுவர் இடிந்து விழுந்தது. சுனாமி குடியிருப்புகளில் மழை தண்ணீர் தேங்கி, தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தொடர் மழையால் பெரும்பாலான வர்த்தக நிறுவனங்கள், கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மக்கள் வெளியில் வர அச்சப்பட்டு, வீடுகளில் முடங்கியுள்ளனர். இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்திலும் கன மழை பெய்து வருகிறது. சீர்காழி நகரில் ஏராளமான குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. மயிலாடுதுறை மற்றும் தரங்கம்பாடி தாலுகாவில் குடியிருப்புகள், விளைநிலங்களை மழை நீர் சூழ்ந்ததால் மக்களும், விவசாயிகளும் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். மாவட்டத்தில் உள்ள 28 மீனவ கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள், மீன் பிடிக்க செல்லாமல், படகுகளை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.


திருச்சி


கன மழை காரணமாக, திருச்சி மாவட்டத்தில் நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. கோரையாற்றிலும், அரியாற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மணப்பாறை, துறையூர் போன்ற இடங்களில் உள்ள வயல்களில் வெள்ளநீர் புகுந்துள்ளது. கருமண்டபம், உறையூர், குழுமணி, சண்முக நகர் பகுதிகளில், அரவானுார் பகுதிகளில் குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை, நேற்று நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் நேரு பார்வையிட்டு, நிவாரணப் பணிகளை மேற்கொண்டார்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohan - Thanjavur ,இந்தியா
29-நவ-202123:32:56 IST Report Abuse
Mohan நெற்பயிர் நனையும், அல்லது நெல் மூட்டை நனையும் அதையும் தாண்டி வந்தா அரிசி மூட்டை நனையும். எப்படியோ விவசாயிகளுக்கு நிவாரணம் வந்துடும். அதிகாரிகளுக்கு சம்பளம் வந்துடும். அப்புறம் என்ன மாத்தி மாத்தி இவிகளுக்கே குத்துவோம்.
Rate this:
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
29-நவ-202116:43:13 IST Report Abuse
mindum vasantham உண்மையில் சொல்ல போனால் ஏரிக்கு நீர் varum paathai ullathu pol vadikaal paathayum undu irandayum ஆக்கிரமிப்பு செய்தலால் இது நடக்கிறது ஒழுங்காக இருந்தான் வடிகால் வழியாக நீர் ஓடி கடலிலோ வேறு ஏறியிலோ கலந்து விடும் , சமவெளிப்பகுதிகளில் வயல்களும் ,மலைகளில் காடுகளும் (tea estate இல்லை ) இருந்தால் நாடு வளம் பெரும்
Rate this:
Cancel
Viswanathan - tamilnadu,இந்தியா
29-நவ-202115:45:53 IST Report Abuse
Viswanathan ஐயா. என் பெயர் விஸ்வநாதன் குணமங்கலம் ஊராட்சி. உளுந்தூர்பேட்டை ஒன்றியம். நான் எந்த ஊரில் 35ஆண்டுகளாக வசித்து வருகிறேன் நான் வளர்ந்த நாள் முதல் இந்த ஏரி வாய்க்கால் பயன்படுத்தி பலர் விவசாயம் செய்து வந்தனர் இப்போது ஏரி வாய்க்கால் மரித்து அதன்மீது கடை கட்டி வணிகம் நடத்துகிறார்கள். இதனை அகற்ற தருமாறு சீர் செய்து தருமாறு உங்களிடம் மனு கொடுத்துள்ளோம் இதுநாள்வரை அவனுக்கு எந்த விடிவும் தெரியவில்லை ஆகையால் மின்னஞ்சல் மூலமாக உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன்
Rate this:
கௌடில்யன் - Chennai ,இந்தியா
30-நவ-202106:55:15 IST Report Abuse
கௌடில்யன்யார் கிட்ட மனு கொடுத்த்தீங்க ..கிராம மக்கள் ஒன்று சேர்ந்து முடிவு எடுக்கலாமே ......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X