பொது செய்தி

தமிழ்நாடு

ரயிலின் வேகம் கணக்கிடும் 'சிப்' எடுத்தது யார்? யானைகள் பலியான சம்பவத்தில் வீடியோ ஆதாரம்

Updated : நவ 29, 2021 | Added : நவ 29, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
கோவை : கோவையில் ரயில் மோதி மூன்று யானைகள் உயிரிழந்த சம்பவத்தில், ரயிலின் வேகத்தை கணக்கிடும், 'சிப்'பை எடுத்தது இன்ஜின் டிரைவர்கள் தான் என்றும், அதற்கான 'வீடியோ' ஆதாரம் உள்ளதாகவும் தமிழக வனத்துறையினர் தெரிவித்தனர்.கோவை, மதுக்கரை அருகே ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற, 25 வயது பெண் யானை, 6 வயது குட்டி யானை, 18 வயது மக்னா யானை ஆகிய மூன்று யானைகளும் மங்களூரூ - சென்னை ரயில்
Train Speed, Tracker, Chip, Coimbatore, Elephant, கோவை, யானை, ரயில், வேகம், சிப்

கோவை : கோவையில் ரயில் மோதி மூன்று யானைகள் உயிரிழந்த சம்பவத்தில், ரயிலின் வேகத்தை கணக்கிடும், 'சிப்'பை எடுத்தது இன்ஜின் டிரைவர்கள் தான் என்றும், அதற்கான 'வீடியோ' ஆதாரம் உள்ளதாகவும் தமிழக வனத்துறையினர் தெரிவித்தனர்.

கோவை, மதுக்கரை அருகே ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற, 25 வயது பெண் யானை, 6 வயது குட்டி யானை, 18 வயது மக்னா யானை ஆகிய மூன்று யானைகளும் மங்களூரூ - சென்னை ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தன. உயிரிழந்த, 25 வயது பெண் யானையின் வயிற்றில் ஒரு மாத கரு இருந்தது பிரேத பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இச்சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதன்தொடர்ச்சியாக, ரயில் இன்ஜின் டிரைவர் மற்றும் உதவியாளரை தமிழக வனத்துறையின் பிடித்து விசாரித்தனர். குறிப்பிட்ட இடத்தில் ரயில் அனுமதிக்கப்பட்ட வேகத்தில் வந்ததா என, ரயில் இன்ஜினில் இருந்து எடுக்கப்பட்ட 'சிப்' வாயிலாக விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், ரயில் வேகம் குறித்து எழுத்துபூர்வமாக தகவல் பெற தமிழக வனத்துறையினர் 5 பேர் நேற்று முன்தினம் கேரளா, பாலக்காடு சென்றனர்.


latest tamil news


அப்போது கேரளாவில் தமிழக வனத்துறையினரை சிறைபிடித்த ரயில்வே அதிகாரிகள், தங்கள் ஊழியர்களை விடுவிக்கவில்லை என்றால், இன்ஜின் 'சிப்'பை அத்துமீறி எடுத்ததாக உங்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும் என, தெரிவித்தனர். இதனால் கோவையில் பதற்றம் ஏற்பட்டு, சாலை மறியல் போராட்டங்கள் நடந்தன. ரயில்வே அதிகாரிகள் மற்றும் தமிழக வனத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பின் தமிழக வனத்துறையினர் விடுவிக்கப்பட்டனர். விபத்தை ஏற்படுத்திய கோழிக்கோட்டை சேர்ந்த இன்ஜின் டிரைவர் சுபயர், 54, உதவியாளர் அகில், 31 ஆகியோர் மீது தமிழக வனத்துறையினர் வன பாதுகாப்பு சட்டத்தில் வழக்கு பதிந்து இருவரையும் விடுவித்தனர்.

தமிழக வனத்துறையினர் கூறுகையில், 'விபத்தை ஏற்படுத்திய இன்ஜினில் இருந்து வேகத்தை கணக்கிடும் 'சிப்'பை வனத்துறையினர் யாரும் அத்துமீறி எடுக்கவில்லை. ரயில் இன்ஜினை இயக்கிய நபரே தான் 'சிப்'பை எடுத்துக் கொடுத்தார். அதற்கான வீடியோ ஆதாரமும் உள்ளது. குறிப்பிட்ட பகுதியில் ரயில் எத்தனை கி.மீ., வேகத்தில் சென்றது என்பதை கண்டுபிடிக்க முடியும். அதன்பின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kumaran - chennai,இந்தியா
29-நவ-202122:18:29 IST Report Abuse
kumaran டிரைவர் செய்த தவறு . அந்த வழியில் வன விலங்குகள் வரும் என அந்த ரூட் டிரைவர் கு தெரிந்த நடந்த தவறு. ரயிலை மெதுவாக இயக்கி இருக்கலாம்.
Rate this:
Cancel
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் காட்டிலாக்கா அதிகாரிகள் செயல்பாடுகள் முறையல்ல அத்து மீறல்தான் நடந்த உண்மைகளை யாராலும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது ஒவ்வொரு விபத்துக்கு விசாரணை உண்டு குற்றம் செய்தவர்களுக்கு நிச்சயம் தண்டனை உண்டு கார் பஸ்ஸை விட லாரியை நிறுத்துவது சற்றே கடினம் எடை அதிகம் ரயில் பல பெட்டிகள் இணைந்தது சடன் பிரேக் போட்டால் பெட்டிகள் தடம் புரளும் ஏன் (TELESCOPE) ஆகி ஒன்றின் மீது தாவி எரிக் கொண்டு நிற்பதும் உண்டு ரயில் பாதை சரிவாகவும் உண்டு பள்ளத்தை நோக்கி இறங்கி வரும்போது கூடுதல் பிரேக் பவர் தேவை மேலும் ரயில் குறைந்த வேகத்தில் வந்து மோதினாலும் சாவு படுகாயம் அல்லது காயம் எல்லாமே இறைவனின் செயல் அதுதான் "விபத்து" எதிர்பாராதது நேரில் கண்ட ஒரு சம்பவம் தஞ்சை சந்திப்பில் காலை நேரம் ரயில்வே சிப்பந்தி ஒருவர் ஒரு கையில் நாலடுக்கு காரியர் புறப்பட்டுவிட்ட ரயிலில் லாவகமாக ஏறுகிறார் தவறி தண்டவாளத்தில் விழுகிறார் காரியரோ பிளாட்பாரம் முனையில் ஜம்பமாக உட்கார்ந்து கொண்டது இரண்டு பெட்டிகள் கடந்தபின் விழுந்தவர் எழுந்து காரியரை மறக்காமல் எடுத்துக் கொண்டு ரயிலை துரத்துகிறார் ஆனால் எல்லாவற்றுக்கும் சாட்சியாய் நின்றிருந்த போலீஸ்காரர் தடுத்து நிறுத்தி விட்டார்
Rate this:
kumaran - chennai,இந்தியா
29-நவ-202122:07:46 IST Report Abuse
kumaranபொறுப்பற்ற பேச்சு....
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
29-நவ-202116:34:12 IST Report Abuse
M  Ramachandran கேரளாவில் தோழில் தொடங்க்குவது ஆபத்து. தொழில் சங்கங்கள் வினோத மான கோரிக்கையை கல் வைப்பார்கள். முன்பு ஒரு முறை காலமச்சேரிலயில் ( எர்ணாகுளம் அருகில்) என்ற ஊரில் எச் எம் ட்டி அதன் கிளையை நிறுவனத்தை தொடங்க கட்டுமான வேலைகள் நடந்து கொண்டிருந்த போது அஙகு வேலைய செய்து கொண்டிருந்த கட்டுமான தொழிலார்கள் யூனியன் போன்ஸ் வேண்டும் என்றனர். அதற்க்கு தலைமையை நிர்வாகம் தொழிலென தொடங்க வில்லை பின் எப்படி போன்ஸ் கொடுக்க முடியும் என்றனர். அதற்க்கு யூனியன் மற்ற யூனிட்டின் லாபத்திலிருந்து கொடு என்றனர்.அது சட்டத்தில் யிடமில்லைய என்றனர். அதெல்லாம் முடியாது போனஸ் கொடுத்தால் தான் மெஆர்கொண்டு வேலை செய்வோம். இல்லை என்றால் பந் என்றனர். வேறு வழி தெரியாமல் நிர்வாகம் பணிந்தது. இது போல் இன்னும் பலப்பல. இன்னும் ஒரு வினோதம் நாம் நம் வேலையயை செய்தாலும். ஒரு கூட்டம் வந்து நீ எப்படி வேலைய செய்யலாம். நாங்கள் செய்வோம் என்று போலாகட்டும் இப்போ நீ உன் வேலைய செய்தாலும் எங்களுக்கு னோர்க்கு கூலி கொடுக்க வேண்டும் என்றனர். அப்படி என்றால் நீ வேலை செய்து கொண்டிருந்ததற்கு பார்த்து கொண்டிருந்த தற்கு கூலி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X