ஒமைக்ரான் 5 முக்கியத் தகவல்கள்: உலக சுகாதார அமைப்பு வெளியீடு

Updated : நவ 29, 2021 | Added : நவ 29, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
ஜெனிவா: உலகில் தற்போது பரவி வரும் ஒமைக்ரான் வகை வைரஸ் தொடர்பாக உலக சுகாதார அமைப்பு 5 முக்கியத் தகவல்களை வெளியிட்டுள்ளது.இந்தியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கோவிட் பரவல் குறைந்துகொண்டிருக்கும் நிலையில், தென்னாப்பிரிக்காவில் புதிய வகை கோவிட் வேற்றுருவம் கண்டறியப்பட்டுள்ளது. 'ஒமைக்ரான்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸின் மரபணு வரிசையில் 'B.1.1.529' எனும்
Omicron, 5 Important, Information, World, Health, Organization, Release, ஒமைக்ரான், முக்கிய தகவல்கள், உலக சுகாதார அமைப்பு, வெளியீடு,

ஜெனிவா: உலகில் தற்போது பரவி வரும் ஒமைக்ரான் வகை வைரஸ் தொடர்பாக உலக சுகாதார அமைப்பு 5 முக்கியத் தகவல்களை வெளியிட்டுள்ளது.

இந்தியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கோவிட் பரவல் குறைந்துகொண்டிருக்கும் நிலையில், தென்னாப்பிரிக்காவில் புதிய வகை கோவிட் வேற்றுருவம் கண்டறியப்பட்டுள்ளது. 'ஒமைக்ரான்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸின் மரபணு வரிசையில் 'B.1.1.529' எனும் புதிய பிறழ்வு ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸ் தடுப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உலக நாடுகள் முடுக்கிவிட்டுள்ள நிலையில், உலக சுகாதார அமைப்பு 5 முக்கியத் தகவல்களை வெறியிட்டுள்ளது.


latest tamil news


இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

.* ஒமைக்ரான் வகை வைரஸ், ஏற்கனவே கோவிட்டால் பாதிக்கப்பட்டவர்களில் மீண்டும் எளிதாக தொற்றை ஏற்படுத்தக் கூடும் என்பது முதற்கட்ட ஆதாரங்களின் அடிப்படையில் தெரியவந்துள்ளது.

* டெல்டா திரிபுடன் ஒப்படுகையில் ஒமைக்ரான், ஒரு நபரிடம் இருந்து இன்னொரு நபருக்கு எளிதில் பரவும் தன்மை கொண்டதா? என்பது இன்னும் துல்லியமாகப் புலப்படவில்லை. இப்போதைக்கு ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனைகள் மூலம் ஓமைக்ரான் பரவலின் தன்மையைக் கண்காணிக்க முடியும்.


latest tamil news



* தடுப்பூசி எதிர்பாற்றல் கொண்டதா? ஒமைக்ரான் என்பது குறித்து தொழில்நுட்ப ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

* இப்போதைக்கு ஒமைக்ரான் வைரஸ் ஏற்படுத்தும் பாதிப்பு மற்ற திரிபுகளை விட வித்தியாசமானது, மோசமானது என்பதை நிரூபிக்க போதிய தரவுகள் இல்லை.

* தென் ஆப்பிரிக்காவில் கடந்த சில நாட்களாக கோவிட்டால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால், இதை நாம் நேரடியாக ஒமைக்ரானின் வீரியம் என்று கூறிவிட முடியாது. அங்கு சமீப நாட்களில் கோவிட்டால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாகி இருப்பதால் கூட மருத்துவமனையில் சேர்வோரின் எண்ணிக்கை அதிகரித்திருக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சாந்தகுமார் - Alangulam,இந்தியா
30-நவ-202100:32:59 IST Report Abuse
சாந்தகுமார் தினமும் 33 வேளை சாப்பிட்டு வருகிறோம் அதில் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் உணவுகளை தவிற்போம். அரசும் தடுப்பூசிக்கு செய்யும் விளம்பரத்தில் 100 ல் ஓரு பங்காவது நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் உணவு பற்றிய விழிப்புனர்வு செய்தியை விளம்பரபடுத்த வேண்டும். .கொரானா புள்ளிவிபரங்களில் எந்த வகை மருத்துவம் எடுத்து பிளைத்தார்கள் எந்த வகை மருத்துவம் எடுத்து இறந்தார்கள் விபரம் வேண்டும்.
Rate this:
Cancel
தமிழன் - madurai,இந்தியா
29-நவ-202119:09:39 IST Report Abuse
தமிழன் WHO என்னைக்குமே எதையும் உருப்படியாக சொல்லாது. மக்கள் சாக ஆரம்பித்ததும் வேறு வழியின்றி உண்மையை கக்கும். இவர்களை நம்பாதீர்கள். ஜாக்கிரதையாக இருங்கள்.
Rate this:
Cancel
nagendirank - Letlhakane,போஸ்ட்வானா
29-நவ-202117:12:26 IST Report Abuse
nagendirank ஒமிக்ரான் என்பதை விட (உலகத்தை) ஒழிக்கிறான் என்பதே சரி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X