மதுரை : ''காங். மாநில முன்னாள் தலைவர் இளங்கோவன் மதுரையில் கால் வைக்க முடியாது. அவரை தாக்குவோருக்கு பா.ஜ. சார்பில் ரூ.1 லட்சம் வழங்கப்படும்'' என மதுரையில் பா.ஜ. நகர் மாவட்ட தலைவர் சரவணன் தெரிவித்தார்.
நகர் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற அவர் கூறியதாவது:
இளங்கோவன் அரசியல் அகதியாகிவிட்டார். அவர் பா.ஜ. மாநில தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்திருக்கிறார். பிரதமர் மோடி எச்.ராஜா போன்றவர்களை விமர்சிக்கிறார். காங். அவரை புறந்தள்ளி மறந்து விட்டது. அரசியலில் தன் இருப்பை காட்ட இதுபோல பேசி வருகிறார். அவர் மதுரையில் கால் வைக்க முடியாது.
ஜெய் பீம் படத்தில் சூர்யாவுக்கு எதிராக சர்ச்சை எழுந்த போது அவரை தாக்குவோருக்கு பணம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அப்போது கூட இளங்கோவன் பண்ணுவாங்கலா என நக்கலாக கேட்டார். அதை தான் நாங்கள் இப்போது சொல்கிறோம். இளங்கோவன் மதுரையில் கால் வைத்தால் தாக்குவோருக்கு ரூ.ஒருலட்சம் பா.ஜ. சார்பில் வழங்கப்படும்.
மாற்று கட்சி என்று கூட பாராமல் மதுரை எம்.பி. வெங்கடேசனை நேரு விமர்சித்திருக்கிறார். வெங்கடேசன் வேறு கட்சியாக இருந்தாலும் மதுரை எம்.பி. என்ற முறையில் கண்டனம் தெரிவிக்கிறேன் என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE