புதுடில்லி: பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் அனைத்து பிரச்னைகள் தொடர்பாகவும் விவாதிக்குமாறும், பார்லிமென்டை அவமரியாதை செய்யாத வகையில் அமைதியான முறையில் விவாதங்கள் நடைபெற வேண்டும் எனவும் எதிர்கட்சிகளுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் இன்று (நவ.,29) துவங்கியது. கூட்டத்தொடருக்கு முன்னதாக பார்லி., வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி கூறியதாவது: நாட்டின் வளர்ச்சிக்கான புதிய பாதை உருவாக்கப்பட வேண்டும். அதற்காக இந்த கூட்டத்தொடர் முக்கியமானதாகும். மிகமுக்கியமான கூட்டத்தொடரில் ஆக்கப்பூர்வமான விவாதத்தை மக்கள் எதிர்பார்க்கின்றனர். அனைத்து பிரச்னைகள் தொடர்பாகவும் விரிவாக விவாதிக்க தயாராக உள்ளோம். ஆனால், பார்லிமென்டை அவமரியாதை செய்யாத வகையில் அமைதியான முறையில் விவாதங்கள் நடைபெற வேண்டும்.

எதிர்கட்சிகளின் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. 150 கோடி டோஸ் தடுப்பூசி என்னும் இலக்கை நோக்கி முன்னேறி வருகிறோம். புதிய உருமாறிய கொரோனா குறித்து நாம் அனைவரும் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். அடுத்தாண்டு மார்ச் வரை இலவச ரேசன் பொருள் வழங்கப்படுவது. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE